LOADING...
இந்தியா- பாகிஸ்தான் போர்: கராச்சி துறைமுகத்தை INS விக்ராந்த் தாக்கியதாக தகவல்
கராச்சி துறைமுகத்தை INS விக்ராந்த் தாக்கியதாக தகவல்

இந்தியா- பாகிஸ்தான் போர்: கராச்சி துறைமுகத்தை INS விக்ராந்த் தாக்கியதாக தகவல்

எழுதியவர் Venkatalakshmi V
May 08, 2025
11:42 pm

செய்தி முன்னோட்டம்

பாகிஸ்தானுடனான போர் பதற்றத்திற்கு மத்தியில், பாகிஸ்தானின் முக்கிய துறைமுகமான கராச்சி துறைமுகத்தில் இந்தியா ஒரு பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது. கடற்படையின் முக்கிய அங்கமான INS விக்ராந்த் மூலம் இந்த தாக்குதல் நடந்தாக செய்திகள் வெளியாகியுள்ளன. முன்னதாக பாகிஸ்தானின் பல முக்கிய நகரங்கள் இந்திய ஆயுதப்படைகளால் தாக்கப்பட்டன, அதைத் தொடர்ந்து, அங்கே ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமாபாத்தில் உள்ள பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்பின் இல்லத்திற்கு அருகில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post