Page Loader

கைது: செய்தி

இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் #justiceforajithkumar; ஏன்?

இன்று காலை முதல் இணையத்தில் #justiceforajithkumar ட்ரெண்ட் ஆகி வருகிறது. இது எதற்காக என யோசிப்பவர்களுக்காக இந்த கதை.

கொல்கத்தா சட்டக் கல்லூரி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் நான்காவதாக செக்யூரிட்டி கைது

தெற்கு கொல்கத்தா சட்டக் கல்லூரி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் அடுத்த நடவடிக்கையாக, கல்லூரியின் 55 வயதான பாதுகாவலரான பினாகி பானர்ஜியை போலீசார் கைது செய்துள்ளனர்.

போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணா கைது: வாட்ஸ்அப் மெஸேஜ்கள் மூலம் சிக்கிய ஆதாரம்

போதைப்பொருள் பயன்பாட்டை மையமாகக் கொண்டு சென்னை காவல்துறையினர் நடத்தி வரும் விசாரணையில், நடிகர் கிருஷ்ணா சிக்கியிருப்பது திரையுலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

26 Jun 2025
கடற்படை

ஆபரேஷன் சிந்தூரின் போது உளவு பார்த்ததற்காகவும், தகவல்களை வெளியிட்டதற்காகவும் கடற்படை அலுவலர் கைது

டெல்லியில் உள்ள இந்திய கடற்படை தலைமையகத்தில் எழுத்தராகப் பணியாற்றும் விஷால் யாதவ், உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவை பிடிக்க கேரளா விரையும் 5 தனிப்படை போலீசார்

போதைப்பொருள் வழக்கில் தற்போது கைதாகி சிறையில் உள்ள நடிகர் ஸ்ரீகாந்த் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலும், அவர் கைதிற்கு காரணமான தயாரிப்பாளர் அளித்த தகவலின் பேரிலும், அடுத்ததாக வளையத்தில் சிக்கியிருப்பவர் நடிகர் கிருஷ்ணா.

25 Jun 2025
நடிகர்

"குடும்ப பிரச்னையால் தவறு செய்தேன்" என நடிகர் ஸ்ரீகாந்த் போலீஸ் விசாரணையில் கண்ணீருடன் வாக்குமூலம்

போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது: தயாரிப்பாளர் மூலம் வந்த சிக்கல்; விரைவில் சிக்கப்போகும் மற்றொரு பிரபலம்

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்த் தற்போது நீதிமன்றக் காவலில் ஜூலை 7ஆம் தேதி வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் திரையுலகிலும் அரசியல் வட்டத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது; திரையுலகில் மேலும் தொடர்புகள் உள்ளதா என விசாரணை

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில், நடிகர் ஸ்ரீகாந்த்தை சென்னை நுங்கம்பாக்கம் காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.

10 Jun 2025
அமெரிக்கா

அமெரிக்காவிற்கு உயிரியல் பொருட்களை கடத்தியதற்காக மேலும் ஒரு சீன விஞ்ஞானி கைது 

அமெரிக்காவிற்குள் உயிரியல் பொருட்களை கடத்தியதாகக் கூறப்படும் சீன விஞ்ஞானி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை டெட்ராய்ட் பெருநகர விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

09 Jun 2025
மேகாலயா

மேகாலயாவில் காணாமல் போன இந்தூர் பெண் விவகாரத்தில் இறுதியாக விலகியது மர்மம்!

மேகாலயாவில் தேனிலவின் போது காணாமல் போன இந்தூர் பெண் தனது கணவரைக் கொலை செய்ததற்காக திங்கள்கிழமை கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

06 Jun 2025
பெங்களூர்

பெங்களூரு கூட்ட நெரிசல் விவகாரம்: ஆர்சிபி மார்க்கெட்டிங் தலைவர் கைது, நிகழ்வு நிறுவன அதிகாரிகள் கைது

RCB வெற்றி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக பெங்களூரு போலீசார் RCB மார்க்கெட்டிங் தலைவர் நிகில் சோசலேவை கைது செய்துள்ளனர்.

பெற்றோரை கொன்று வீசிய கொடூர மகன்; மேற்கு வங்கத்தில் பயங்கரம்; நடந்தது என்ன?

மேற்கு வங்கத்தில் கிழக்கு பர்த்வானில் தனது பெற்றோரைக் கொன்றதாகவும், பின்னர் போங்கானில் உள்ள ஒரு அனாதை இல்லத்தில் ஊழியர்களைத் தாக்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு, 35 வயதான சிவில் இன்ஜினியர் ஹுமாயூன் கபீர் புதன்கிழமை (மே 28) கைது செய்யப்பட்டார்.

30 May 2025
என்ஐஏ

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் சென்னை விமான நிலையத்தில் யூடியூபர் பய்யா சன்னி யாதவ் என்ஐஏவால் கைது

தெலுங்கு யூடியூபரும் பயண வலைப்பதிவருமான பய்யா சன்னி யாதவ், தேசிய பாதுகாப்பு கவலைகளை எழுப்பிய பாகிஸ்தானுக்கு சமீபத்தில் மேற்கொண்ட பயணம் தொடர்பாக வியாழக்கிழமை (மே 29) சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தேசிய புலனாய்வு அமைப்பால் (என்ஐஏ) கைது செய்யப்பட்டார்.

30 May 2025
ராஜஸ்தான்

இந்திய சிம் கார்டுகளை பாகிஸ்தானுக்கு அனுப்பிய ISI பயிற்சி பெற்ற 'உளவாளி' ராஜஸ்தானில் கைது

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில், ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த காசிம் என்ற நபரை டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு வியாழக்கிழமை கைது செய்தது.

29 May 2025
புனே

புனே போர்ஷே வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர் சிறுநீரக மாற்று மோசடியில் கைது

புனேவில் உள்ள சசூன் பொது மருத்துவமனையின் முன்னாள் மருத்துவ கண்காணிப்பாளரான டாக்டர் அஜய் தவாரே, 2022ஆம் ஆண்டு ரூபி ஹால் கிளினிக்கில் நடந்த சிறுநீரக மாற்று மோசடி தொடர்பாக தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

29 May 2025
ராஜஸ்தான்

பாகிஸ்தானின் ISI-க்காக உளவு பார்த்ததாக ராஜஸ்தான் அரசு ஊழியர் கைது

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ-க்காக உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் ராஜஸ்தான் மாநில அரசு ஊழியர் சாகூர் கான் மங்களியார் கைது செய்யப்பட்டுள்ளார்.

24 May 2025
குஜராத்

குஜராத்தில் BSF, IAF தகவல்களை பாகிஸ்தானுக்கு பகிர்ந்ததாக ஒருவர் கைது 

குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) கட்ச் பகுதியைச் சேர்ந்த பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் சஹ்தேவ் சிங் கோஹிலை உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்துள்ளது.

23 May 2025
கர்நாடகா

மனைவி பிரிந்ததால் விரக்தி; கர்நாடகாவில் திருமணம் செய்து வைத்த தரகரை கொலை செய்த கணவர்

கர்நாடகாவின் மங்களூர் கிராமப்புற காவல் எல்லைக்குட்பட்ட வாலாச்சிலில் வியாழக்கிழமை (மே 22) நள்ளிரவு நடந்த வன்முறை தாக்குதலில் 50 வயது திருமண தரகர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். அவரது இரண்டு மகன்கள் படுகாயமடைந்தனர்.

22 May 2025
ஐஎஸ்ஐ

இந்தியாவில் மிகப்பெரிய தாக்குதலை நடத்த ISI திட்டமா? சமயத்தில் முறியடித்த டெல்லி காவல்துறை

பாகிஸ்தானின் உளவு அமைப்பான இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ஐஎஸ்ஐ) இந்தியாவில் ஒரு பெரிய பயங்கரவாதத் தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்த ஒரு சதித்திட்டத்தை புலனாய்வு அமைப்புகள் கண்டுபிடித்ததாக உயர் வட்டாரங்கள் தெரிவித்தன.

யூடியூபர், மாணவர், பாதுகாவலர் உட்பட 11 'பாகிஸ்தான் உளவாளிகள்' இதுவரை கைது

பாகிஸ்தானின் இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ISI) உடன் தொடர்புடையதாகக் கூறப்படும் உளவு வலையமைப்பின் மீது நடத்தப்பட்ட ஒரு பெரிய நடவடிக்கையில், இந்திய அதிகாரிகள் நான்கு மாநிலங்களைச் சேர்ந்த குறைந்தது 11 பேரைக் கைது செய்துள்ளனர்.

யூகோ வங்கியின் முன்னாள் தலைவரை அமலாக்கத்துறை கைது செய்தது

ரூ. 6,210 கோடி மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்க இயக்குநரகம் (ED) முன்னாள் யூகோ வங்கித் தலைவரும் நிர்வாக இயக்குநருமான சுபோத் குமார் கோயலை கைது செய்துள்ளது.

18 May 2025
ஹரியானா

'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது 

அசோகா பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் பேராசிரியரும், துறைத் தலைவருமான அலி கான் மஹ்முதாபாத், 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்த சமூக ஊடகப் பதிவிற்காக டெல்லியில் கைது செய்யப்பட்டார்.

17 May 2025
யூடியூபர்

பாகிஸ்தானுக்காக இந்தியாவில் உளவு பார்த்ததாக பிரபல யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது

பாகிஸ்தான் உளவுத்துறைக்காக இந்தியாவில் உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில், டிராவல் வித் ஜோ சேனலை நடத்தி வரும் யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவை ஹிசார் போலீசார் கைது செய்துள்ளனர்.

பண மோசடி வழக்கில் குஜராத் சமாச்சார் பத்திரிகையின் உரிமையாளரை கைது செய்தது அமலாக்கத்துறை

குஜராத்தில் அதிக அளவில் விற்பனையாகும் குஜராத் சமாச்சார் செய்தித்தாளின் இணை உரிமையாளர் பாகுபலி ஷாவை பணமோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.

மலையாள இயக்குநர்கள் காலித் ரஹ்மான் மற்றும் அஷ்ரப் ஹம்சா போதைப்பொருள் வைத்திருந்ததற்காக கைது

பிரபல மலையாள திரைப்பட இயக்குனர்கள் காலித் ரஹ்மான் மற்றும் அஷ்ரப் ஹம்சா ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 27) அதிகாலையில் கொச்சியில் கலப்பின கஞ்சா வைத்திருந்ததற்காக அவர்களது நண்பர் ஷாலிப் முகமதுவுடன் கைது செய்யப்பட்டனர்.

25 Apr 2025
கடற்படை

ஒடிசாவில் அக்னிவீர் ஆட்சேர்ப்பில் மோசடி; தேர்வர்களிடம் லஞ்சம் வாங்கிய கடற்படை வீரர்கள் உள்ளிட்ட மூவர் கைது

2024 நவம்பரில் நடைபெற்ற ஆட்சேர்ப்பு முகாமின் போது அக்னிவீர் தேர்வர்களிடமிருந்து பணம் பெற்றதாகக் கூறப்படும் இரண்டு கடற்படை வீரர்கள் உட்பட மூன்று நபர்களை ஒடிசா காவல்துறை கைது செய்துள்ளது.

மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ போதைப்பொருள் பயன்பாடு மற்றும் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதற்காக கைது

மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ சனிக்கிழமை (ஏப்ரல் 19) போதைப்பொருள் பயன்பாடு மற்றும் தவறான நடத்தை வழக்கில் கைது செய்யப்பட்டார்.

குடும்பத்திடம் இருந்து பாங்காக் பயணங்களை மறைக்க பாஸ்போர்ட் பக்கங்களை கிழித்த புனே நபர் கைது

புனேவைச் சேர்ந்த 51 வயதான விஜய் பலேராவ், அடிக்கடி பாங்காக்கிற்கு பயணம் செய்ததை தனது குடும்பத்தினரிடமிருந்து மறைக்க, தனது பாஸ்போர்ட்டில் இருந்து பக்கங்களை கிழித்ததாகக் கூறி மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

14 Apr 2025
இந்தியா

பரோலில் தப்பித்த கொலைக் குற்றவாளியை 20 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்தது டெல்லி காவல்துறை

தனது மனைவியைக் கொலை செய்ததற்காக தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் இந்திய ராணுவ வீரர் அனில் குமார் திவாரி 2005 ஆம் ஆண்டு பரோலின் போது தலைமறைவான நிலையில், கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டார்.

'சட்ட நடவடிக்கைகளுக்காக சோக்ஸி தடுத்து வைக்கப்பட்டுள்ளார்': முதல் அறிக்கையை வெளியிட்ட பெல்ஜியம்

இந்திய அதிகாரிகளின் வேண்டுகோளின் பேரில் சனிக்கிழமை பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்ட தப்பியோடிய தொழிலதிபர் மெஹுல் சோக்ஸி,"மேலும் சட்ட நடவடிக்கைகளுக்காக" தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பெல்ஜிய கூட்டாட்சி பொது நீதித்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

திருமணமான தூதரக அதிகாரியுடன் காதல் உறவில் இருந்ததற்காக கைது செய்யப்பட்ட மாடல் அழகி மேக்னா ஆலம் 

வங்கதேச மாடலும் நடிகையுமான மேக்னா ஆலம், "பொது பாதுகாப்பு, சட்டம் மற்றும் ஒழுங்குக்கு அச்சுறுத்தலாக" இருந்ததாகக் கூறி, சிறப்பு அதிகாரச் சட்டத்தின் கீழ் ஏப்ரல் 9 ஆம் தேதி டாக்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

மெஹுல் சோக்ஸியை இந்திய அதிகாரிகள் 7 ஆண்டுகளாக எவ்வாறு பின்தொடர்ந்தனர் 

தற்போது செயல்படாத கீதாஞ்சலி குழுமத்தின் உரிமையாளர் மெஹுல் சோக்ஸி பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

14 Apr 2025
சிபிஐ

இந்தியாவின் நாடுகடத்தல் கோரிக்கையில் மற்றுமொரு வெற்றி: தொழிலதிபர் மெஹுல் சோக்ஸி பெல்ஜியத்தில் கைது

பஞ்சாப் நேஷனல் வங்கி(PNB) கடன் மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த தப்பியோடிய வைர வியாபாரி மெஹுல் சோக்ஸி, பெல்ஜிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார் என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

05 Apr 2025
கர்நாடகா

மனைவியை கொலை செய்ததற்காக ஒன்றரை ஆண்டுகள் சிறையிலிருக்கும் கணவன்; சம்பந்தப்பட்ட பெண் உயிருடன் வந்ததால் அதிர்ச்சி

கர்நாடகாவில் மனைவியைக் கொலை செய்ததாகக் கூறி கணவன் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில், சம்பந்தப்பட்ட பெண் உயிரோடு இருப்பது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

26 Mar 2025
சென்னை

சென்னை தொடர் செயின் பறிப்பு கொள்ளையன் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

சென்னையில் தொடர்ச்சியான செயின் பறிப்பில் ஈடுபட்டதாக கூறி நேற்று கைது செய்யப்பட்ட கொள்ளையர்கள் இருவரில் ஒருவர், இன்று அதிகாலை போலீசாரின் என்கவுன்ட்டரில் உயிரிழந்தார்.

ISI-க்கு ரகசியங்களை கசியவிட்ட உத்தரபிரதேச ஆயுத தொழிற்சாலை ஊழியர் கைது

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-க்காக உளவு பார்த்ததாக ஃபிரோசாபாத்தில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் தான் அந்த சாரா? அண்ணா பல்கலை மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் ஞானசேகரனின் கூட்டாளி கைது

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கு தொடர்பாக முன்னர் காவலில் எடுக்கப்பட்ட ஞானசேகரனின் கூட்டாளியான பொள்ளாச்சி முரளியை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்.

05 Mar 2025
கர்நாடகா

தங்கம் கடத்தியதாக கர்நாடகாவின் முன்னணி போலீஸ் அதிகாரியின் மகளும் நடிகையுமான ரன்யா ராவ் கைது

துபாயில் இருந்து 14.8 கிலோ தங்கத்தை கடத்தியதாக பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் கன்னட திரைப்பட நடிகை ரன்யா ராவ் வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தால் (DRI) கைது செய்யப்பட்டார்.

16 Feb 2025
பஞ்சாப்

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்களில் இருந்த 2 கொலைக்குற்றவாளிகள் பஞ்சாப் காவல்துறையால் கைது

பாட்டியாலா மாவட்டத்தில் உள்ள ராஜ்புராவைச் சேர்ந்த சன்னி என்ற சந்தீப் சிங் மற்றும் பிரதீப் சிங் ஆகிய இரு இளைஞர்கள் அமிர்தசரஸில் உள்ள ஸ்ரீ குரு ராம் தாஸ் ஜீ சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.

15 Feb 2025
ஆர்பிஐ

RBIயால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நியூ இந்தியா கூட்டுறவு வங்கி ஜிஎம் ₹122 கோடி மோசடி வழக்கில் கைது

மும்பை காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) ₹122 கோடி மோசடி வழக்கு தொடர்பாக நியூ இந்தியா கூட்டுறவு வங்கி பொது மேலாளர் ஹிதேஷ் மேத்தாவை சனிக்கிழமை (பிப்ரவரி 15) கைது செய்தது.