LOADING...
பொது பதவியை தவறாக பயன்படுத்தியதற்காக பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது
பிரிட்டன் இளவரசர் ஆண்ட்ரூ இன்று அதிகாலை கைது

பொது பதவியை தவறாக பயன்படுத்தியதற்காக பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது

எழுதியவர் Venkatalakshmi V
Feb 19, 2026
03:55 pm

செய்தி முன்னோட்டம்

பிரிட்டன் மன்னர் சார்லஸின் தம்பியும், முன்னாள் இளவரசருமான ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர், இன்று அதிகாலை நோர்போக் நகரில் உள்ள சாண்டிரிங்ஹாம் எஸ்டேட்டில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். 66-வது பிறந்தநாளை கொண்டாடும் நாளில் அவர் கைது செய்யப்பட்டுள்ளது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான பல கோடி பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் கடந்த மாதம் அமெரிக்காவில் வெளியிடப்பட்டன. அந்த ஆவணங்களின் அடிப்படையில், ஆண்ட்ரூ மீது இரண்டு முக்கியக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையிலேயே இந்த கைது என்கிறது பிரிட்டன் ஊடக செய்திகள்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

பின்னணி

கைதுக்கான பின்னணி

இளவரசர் ஆண்ட்ரூ பிரிட்டனின் வர்த்தகத் தூதராக பணியாற்றியபோது (2001-2011), அரசு ரீதியான ரகசியத் தகவல்களை எப்ஸ்டீனுடன் பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது. அதோடு, எப்ஸ்டீன் மூலம் கடத்தி வரப்பட்ட ஒரு பெண்ணுடன் ஆண்ட்ரூ பாலியல் தொடர்பில் இருந்ததாகவும், இதற்காகப் பொது பதவியை தவறாக பயன்படுத்தியதாகவும் Thames Valley காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இன்று காலை 8 மணியளவில் சாண்டிரிங்ஹாம் எஸ்டேட்டிற்கு வந்த சாதாரண உடை அணிந்த காவல்துறையினர், ஆண்ட்ரூவை கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து பெர்க்ஷயர் மற்றும் நோர்போக் ஆகிய இடங்களில் உள்ள அவருக்குச் சொந்தமான இடங்களில் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டன.

Advertisement

நிலைப்பாடு

அரச குடும்பத்தின் நிலைப்பாடு

"சட்டத்திற்கு முன்னால் அனைவரும் சமம்" என்று பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். ஏற்கனவே எப்ஸ்டீன் உடனான தொடர்பு காரணமாக கடந்த ஆண்டு ஆண்ட்ரூவின் ராணுவ பதவிகள் மற்றும் இளவரசர் அந்தஸ்தை பறித்த மன்னர் சார்லஸ், தற்போது நடைபெற்று வரும் காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக அறிவித்துள்ளார். ஆண்ட்ரூ இந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்து வந்தாலும், தற்போது அவர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

Advertisement