LOADING...
டெல்லி மாலில் வெடிகுண்டு வைக்க சதி செய்த ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் 2 பேர் கைது
இதன் மூலம் பெரிய பயங்கரவாத தாக்குதல் சதியை முறியடித்துள்ளனர்

டெல்லி மாலில் வெடிகுண்டு வைக்க சதி செய்த ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் 2 பேர் கைது

எழுதியவர் Venkatalakshmi V
Oct 24, 2025
04:15 pm

செய்தி முன்னோட்டம்

தீபாவளி பண்டிகை காலத்தின்போது டெல்லியில் அதிக மக்கள் கூடும் பகுதிகளில், குறிப்பாக தென் டெல்லியில் உள்ள ஒரு பிரபலமான வணிக வளாகம் மற்றும் பொதுப் பூங்காவில், குண்டுவெடிப்பு நடத்த திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படும் ISIS அமைப்பை சேர்ந்த இருவரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். இதன் மூலம் பெரிய பயங்கரவாத தாக்குதல் சதியை முறியடித்துள்ளனர். அட்னான் என்ற பெயருடைய இருவர் டெல்லி மற்றும் போபால் ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்டனர். இதில் ஒருவர் டெல்லியின் சாதிக் நகரைச் சேர்ந்தவர்; மற்றவர் மத்தியப் பிரதேசத்தின் தலைநகரான போபாலைச் சேர்ந்தவர். கைது செய்யப்பட்டவர்கள் தெற்கு டெல்லியில் உள்ள மக்கள் கூடும் இடங்களில் தாக்குதல் நடத்துவதற்காக ஒத்திகை செய்திருந்தனர்.

நோக்கம்

தாக்குதல் நோக்கம் மற்றும் விசாரணை

அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் நோக்கில், தீபாவளி கொண்டாட்டத்தின்போது மக்கள் கூட்டமாக இருக்கும் இடங்களைத் குறிவைத்து இவர்கள் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தனர். சிறப்புப் பிரிவு காவல்துறை (Special Cell) அதிகாரிகள் கூறியதாவது: "கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு விசுவாசமாக இருப்பதாக உறுதியளிக்கும் வீடியோ காட்சிகள், தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்ட இடங்களின் புகைப்படங்கள் மற்றும் தற்காலிக டைமர் சாதனம் (Makeshift timer device) ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வெடிபொருள் தயாரிப்பதற்கான (IED) பொருட்களை வாங்குவதற்குத் திட்டமிட்டிருந்த இடங்களின் புகைப்படங்களும் கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும், தற்கொலைத் தாக்குதல்களுக்கு ("Fidayeen" அல்லது Suicide-style attacks) பயிற்சி பெற்று வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.