LOADING...
தொடர்ந்து மூன்றாவது நாளாக குறையும் தங்கத்தின் விலை; ஒரு சவரன் விலை என்ன?
தொடர்ந்து மூன்றாவது நாளாக குறையும் தங்கத்தின் விலை

தொடர்ந்து மூன்றாவது நாளாக குறையும் தங்கத்தின் விலை; ஒரு சவரன் விலை என்ன?

எழுதியவர் Venkatalakshmi V
Mar 04, 2026
10:44 am

செய்தி முன்னோட்டம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் தங்க விலை, புதன்கிழமை (மார்ச் 4) குறைந்துள்ளது. புதன்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹265 குறைந்து ₹15,200 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹2,120 குறைந்து ₹1,21,600 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹289 குறைந்து ₹16,582 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹2,312 குறைந்து ₹1,32,656 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலை நிலவரம்

18 காரட் தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹150 குறைந்து ₹13,100 ஆகவும், ஒரு சவரன் ₹1,200 குறைந்து ₹1,04,800 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே புதன்கிழமை வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹20 குறைந்து ₹295.00 ஆகவும், ஒரு கிலோ ₹2,95,000 ஆகவும் விற்பனை ஆகிறது. சமீப காலமாக தங்கம் வெள்ளி விலையில் பெரிய அளவில் மாற்றமில்லாமல் இருந்தாலும், சர்வதேச அரசியல் சூழல்களால் மீண்டும் நிலையற்ற தன்மை ஏற்படலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement