
நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் ₹5 கோடி கடன் மோசடி வழக்கில் கைது
செய்தி முன்னோட்டம்
நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் ₹5 கோடி நிதி மோசடி வழக்கில் டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். சீனிவாசன் ₹1,000 கோடி கடன் பெற்றுத் தருவதாக உறுதியளித்து, வாக்குறுதியை நிறைவேற்றாமல் ₹5 கோடி முன்கூட்டியே பெற்றதாக புகாரில் கூறப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த அக்குபிரஷர் பயிற்சியாளரான ஸ்ரீனிவாசன், 2010 ஆம் ஆண்டு உனக்காக ஒரு கவிதை திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத் துறையில் நுழைந்தார். பின்னர் நீதானா அவன், மண்டபம் போன்ற படங்களில் நடித்த நிலையில், 2011இல் லத்திகா என்ற படத்தை தயாரித்து ஹீரோவாக நடித்திருந்தார்.
கண்ணா லட்டு தின்ன ஆசையா
கண்ணா லட்டு தின்ன ஆசையா மூலம் கவனம் ஈர்த்த சீனிவாசன்
2013 ஆம் ஆண்டு வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நகைச்சுவை வேடத்தில் சந்தானம் மற்றும் சேதுவுடன் நடித்ததற்காக பரவலான அங்கீகாரத்தைப் பெற்றார். பல படங்களில் குறுகிய கால தோற்றங்களில் நடித்த போதிலும், பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பரில் சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் சென்னையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவருக்கு ஏற்கனவே வழக்கு தொடர்பான சட்ட சிக்கல்கள் உள்ளன. இதேபோன்ற மோசடி குற்றச்சாட்டுகளுக்காக அவர் 2013 இல் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.