LOADING...
ஆபரேஷன் கலாநெமி: உத்தராகண்டில் போலி சாமியார்கள் வேடத்தில் உலவும் வங்கதேசத்தினர் கைது 
போலி சாமியார்கள் வேடத்தில் உலவும் வங்கதேசத்தினர் கைது

ஆபரேஷன் கலாநெமி: உத்தராகண்டில் போலி சாமியார்கள் வேடத்தில் உலவும் வங்கதேசத்தினர் கைது 

எழுதியவர் Venkatalakshmi V
Sep 08, 2025
02:16 pm

செய்தி முன்னோட்டம்

உத்தராகண்டில் "ஆபரேஷன் கலாநெமி" என்ற பெயரில் காவல்துறை நடத்தும் போலி சாமியார்களுக்கு எதிரான நடவடிக்கைகள் வேகமெடுத்துள்ளன. இந்தப் புதிய கட்டத்தில், துறவியாக வேடமிட்ட வங்கதேச பிரஜைகள் உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மக்களை ஏமாற்றும் நோக்குடன் துறவி வேடமிட்டு செயல்பட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பலர் மதப் பெயரில் பொதுமக்களை தவறாக வழிநடத்தினர் என தெரிவிக்கப்படுகிறது.

கண்காணிப்பு

போலீசார் தீவிர கண்காணிப்பு

இந்த நடவடிக்கையைப் பற்றி உத்தராகண்ட் மாநில சட்டம் ஒழுங்கு போலீஸ் ஐஜி நிலேஷ் ஆனந்த் பரானே கூறியதாவது: "ஆபரேஷன் கலாநெமி மூலம் நடவடிக்கையை மேலும் தீவிரமாக்கி உள்ளோம். தற்போது வரை, வங்கதேசத்தை சேர்ந்தவர்களும் உட்பட 14 போலி சாமியார்களை கைது செய்துள்ளோம். இதுவரை மாநிலம் முழுவதும் 5,500 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1,182 பேரை கைது செய்துள்ளோம்." இந்த போலி சாமியார்கள், பெரும்பாலும் சிறிய கிராமங்கள் மற்றும் புறநகர் பகுதிகளில் தங்கியிருந்து, தங்களது "ஆசிர்வாதம்" அல்லது "தரிசனம்" மூலம் மக்களை நம்ப வைக்கின்றனர். இதன்மூலம் பண மோசடி, சொத்து மோசடி, மற்றும் மத அடிப்படையிலான பிரச்சனைகள் உருவாகும் அபாயமும் உள்ளது என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.