LOADING...
முன்னாள் காதலியை கொன்றுவிட்டு அமெரிக்காவிலிருந்து தப்பி சென்ற இந்திய வாலிபர் தமிழகத்தில் கைது
இன்டர்போல் தலைமையிலான சர்வதேச தேடுதலுக்கு பிறகு இந்த கைது நடந்துள்ளது

முன்னாள் காதலியை கொன்றுவிட்டு அமெரிக்காவிலிருந்து தப்பி சென்ற இந்திய வாலிபர் தமிழகத்தில் கைது

எழுதியவர் Venkatalakshmi V
Jan 05, 2026
04:46 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்காவின் மேரிலாந்தில் தனது முன்னாள் காதலி நிகிதா கோடிஷாலாவை கொலை செய்ததாக 26 வயதான இந்திய இளைஞரான அர்ஜுன் சர்மாவை தமிழ்நாட்டில் கைது செய்துள்ளது காவல்துறை. இந்தியா டுடே செய்தியின்படி, இன்டர்போல் தலைமையிலான சர்வதேச தேடுதலுக்கு பிறகு இந்த கைது நடந்துள்ளது. 27 வயதான இந்திய-அமெரிக்க தரவு ஆய்வாளரான நிகிதா கோடிஷாலா, ஜனவரி 3 ஆம் தேதி அர்ஜுன் சர்மாவின் குடியிருப்பில் பல கத்திக்குத்து காயங்களுடன் இறந்து கிடந்தார்.

விசாரணை

குற்றம் மற்றும் அர்ஜுன் தப்பித்த விவரங்கள்

ஜனவரி 2 ஆம் தேதி, புத்தாண்டு தினத்தன்று தான் கடைசியாக நிகிதா கோடிஷாலாவை பார்த்ததாகக் கூறி, அர்ஜுன் சர்மா காணாமல் போனதாக ஒரு புகாரை பதிவு செய்தார். இருப்பினும், அதே நாளில் அவர் இந்தியாவுக்கு தப்பி சென்றார். நிகிதா கோடிஷாலாவின் உடலை கண்டுபிடித்த பிறகு, ஹோவர்ட் கவுண்டி போலீசார் அர்ஜுன் சர்மா மீது முதல் மற்றும் இரண்டாம் நிலை கொலைக் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தனர். விசாரணைகள் தொடர்வதால், குற்றத்திற்கான காரணம் தெளிவாக தெரியவில்லை.

சுயவிவரம்

நிகிதா கோடிஷாலாவின் பின்னணி மற்றும் அர்ஜுன் சர்மாவின் நிதி முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுகள்

நிகிதா கோடிஷாலா பிப்ரவரி 2025 முதல் வேதா ஹெல்த் நிறுவனத்தில் தரவு மற்றும் உத்தி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார். சமீபத்தில் நிறுவனத்தின் "ஆல்-இன் விருதை" அவர் பெற்றதாக குடும்பத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் இந்தியா டுடேவிடம் தெரிவித்தன. அர்ஜுன் ஷர்மா, நிகிதா இறப்பதற்கு முன்பு அவரிடமிருந்தும் அவர் குடும்பத்தாரிடமிருந்தும் பணம் கேட்டதாக நிகிதாவின் குடும்பத்தினர் தெரிவித்தனர். நிகிதாவின் உறவினர் சரஸ்வதி கோடிஷாலா, அர்ஜுன் ஷர்மா நிகிதாவின் வங்கிக் கணக்கிலிருந்து சுமார் $3,500 மதிப்புள்ள அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளை செய்ததாகவும், பின்னர் கையில் ஏற்பட்ட காயத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவை என்று பொய்யான சாக்குப்போக்கின் கீழ் இந்தியாவுக்குத் தப்பி சென்றதாகவும் குற்றம் சாட்டினார்.

Advertisement

ராஜதந்திர ஆதரவு

இந்திய தூதரகத்தின் ஈடுபாடும், நீதிக்கான குடும்பத்தினரின் வேண்டுகோளும்

தனது உறவினருக்கு நீதி கிடைக்க தூதரகம் உடனடியாக தலையிட வேண்டும் என்று சரஸ்வதி கோரிக்கை விடுத்தார். முழுமையான விசாரணை, தூதரக ஆதரவு மற்றும் நிகிதா கோடிஷாலாவின் உடலை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவதற்கு அமெரிக்க மற்றும் இந்திய அதிகாரிகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை அவர் கோரினார். அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் நிகிதா கோடிஷாலாவின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாகவும், தூதரக உதவிகளை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது. "இந்த விவகாரம் குறித்து உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக" தூதரகம் தெரிவித்துள்ளது.

Advertisement