டெல்லி குண்டுவெடிப்பு சதியில் ஈடுபட்ட முக்கிய சதிகாரர் கைதில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்
செய்தி முன்னோட்டம்
தலைநகர் டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பு சதித் திட்டத்தின் முக்கிய குற்றவாளியான டாக்டர் உமரின் நெருங்கிய கூட்டாளி ஒருவரை தேசியப் புலனாய்வு முகமை (NIA) நேற்று கைது செய்துள்ளது. இந்த சதிகாரர் சதித் திட்டத்தில் தொழில்நுட்ப உதவிகளை வழங்கியதாக கூறப்படும் நிலையில் இவரிடமிருந்து, தாக்குதலுக்காக மாற்றியமைக்கப்பட்ட ட்ரொன்கள் மற்றும் ராக்கெட்டுகளை உருவாக்கும் முயற்சிகள் குறித்த தகவல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர் டேனிஷ் என்கிற ஜாசிர் பிலால் அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் ஓர் ஐ.டி. தொழில்நுட்ப வல்லுநர் (Techie) ஆவார்.
விவரங்கள்
சதித் திட்டத்தின் விவரங்கள்
செங்கோட்டையை இலக்காக கொண்டதாக கூறப்படும் இந்தத் தாக்குதலுக்காக, ட்ரொன்களை தாக்குதலுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கும் பணியில் டேனிஷ் ஈடுபட்டுள்ளார் என NIA அதிகாரிகள் கூறியதாக Times Now செய்தி தெரிவிக்கிறது. ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தியின் படி, டேனிஷ் தாக்குதலுக்காக நவீன ராக்கெட் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இது இந்தச் சதித் திட்டத்தின் தீவிரமான பரிமாணத்தைக் காட்டுவதாகவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விசாரணையில், இந்த பயங்கரவாத அமைப்பு குறைந்தது மூன்று ஆண்டுகளாக இந்தியாவில் தாக்குதலைத் திட்டமிட்டு வந்தது தெரியவந்துள்ளது. சமீபத்தில் நடந்த குண்டுவெடிப்பின் பின்னணியில் உள்ள தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து விசாரிப்பதற்கு இந்த கைது ஒரு முக்கியத் திருப்புமுனையாக அமைந்துள்ளது.