LOADING...
நகை பிரியர்களே, தங்கம் வாங்க சரியான நேரம்! அதிரடியாக குறையும் தங்கத்தின் விலை
சவரன் விலை அதிரடியாக குறைந்துள்ளது

நகை பிரியர்களே, தங்கம் வாங்க சரியான நேரம்! அதிரடியாக குறையும் தங்கத்தின் விலை

எழுதியவர் Venkatalakshmi V
Feb 18, 2026
10:29 am

செய்தி முன்னோட்டம்

சமீப காலமாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருக்கும் தங்க விலை, புதன்கிழமை (பிப்ரவரி 18) குறைந்துள்ளது. புதன்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹90 குறைந்து ₹14,230 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹720 குறைந்து ₹1,13,840 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹98 குறைந்து ₹15,524 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹784 குறைந்து ₹1,24,192 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலை நிலவரம்

18 காரட் தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹70 குறைந்து ₹12,180 ஆகவும், ஒரு சவரன் ₹560 குறைந்து ₹97,440 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே புதன்கிழமை வெள்ளிவிலையும் குறைந்துள்ளது. வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹5 குறைந்து, ₹255.00 ஆகவும், ஒரு கிலோ ₹2,55,000 ஆகவும் விற்பனை ஆகிறது. சர்வதேச சூழல் போன்ற காரணிகளால் தங்கம் வெள்ளி விலைகளில் தொடர்ந்து நிலையற்ற தன்மை நீடிக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

Advertisement