மார்ச் 4-ல் ஆப்பிளின் ஈவென்ட்! மலிவு விலை மேக்புக் முதல் ஐபோன் 17e வரை - என்னென்ன வரப்போகுது?
செய்தி முன்னோட்டம்
ஆப்பிள் நிறுவனம் தனது அடுத்த பிரம்மாண்ட அறிமுக விழாவை அடுத்த மாதம் நடத்த உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வழக்கம் போலவே இந்த விழாவில் என்னென்ன சாதனங்கள் அறிமுகமாகும் என்பது குறித்து ரகசியம் காக்கப்பட்டு வந்தாலும், தொழில்நுட்ப உலகில் இது குறித்து பல்வேறு சுவாரசியமான தகவல்கள் கசிந்துள்ளன. இந்த மெகா லான்ச் ஈவென்ட் வரும் மார்ச் 4, 2026 அன்று நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி அன்று இரவு 7:30 மணிக்கு பயனர்கள் இந்த விழாவை நேரலையில் காணலாம்.
அறிமுகங்கள்
எதிர்பார்க்கப்படும் முக்கிய அறிமுகங்கள்
1. குறைந்த விலை மேக்புக்: மாணவர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களை கவரும் வகையில், $1,000 (சுமார் ரூ. 83,000)-க்கு குறைவான விலையில் ஒரு மேக்புக்கை ஆப்பிள் அறிமுகம் செய்ய உள்ளது. இது வழக்கமான 'M-சீரிஸ்' சிப்பிற்கு பதிலாக, ஐபோன் சிப் மூலம் இயங்கும் எனத் தெரிகிறது. இதன் திரை அளவு 13 அங்குலத்திற்கு சற்று குறைவாக இருக்கும். 2. ஐபோன் 17e: கடந்த சில வாரங்களாக பேசப்பட்டு வந்த ஐபோன் 17e இந்த விழாவின் முக்கிய ஈர்ப்பாக இருக்கும். இதில் அதிவேகமான A19 பிராசஸர் மற்றும் MagSafe வயர்லெஸ் சார்ஜிங் வசதி இடம்பெறலாம். மேலும், இதில் ஆப்பிளின் சொந்த C1x மோடம் பொருத்தப்பட்டிருக்கும் என்பதால், இணைய வேகம் இரண்டு மடங்கு கூடுதலாக இருக்கும்.
அறிமுகங்கள்
எதிர்பார்க்கப்படும் புதிய அறிமுகங்கள்
3. புதிய மேக்புக் ஏர் மற்றும் ப்ரோ: புதிய மேக்புக் ஏர் (MacBook Air) மற்றும் மேக்புக் ப்ரோ (MacBook Pro) மாடல்களுடன், மேக் ஸ்டுடியோ (Mac Studio), ஐமேக் (iMac) மற்றும் மேக் மினி (Mac mini) ஆகியவற்றின் அப்டேட் செய்யப்பட்ட பதிப்புகளும் வெளியாக வாய்ப்புள்ளது. 4. ஐபேட் மினி (iPad mini): குறைந்த விலை ஐபேட் மாடல்கள் மற்றும் ஏர் மாடல்களுடன், முதல்முறையாக OLED டிஸ்ப்ளே கொண்ட 'ஐபேட் மினி' இந்த விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.