LOADING...
தூய்மைப்பணியாளர் போராட்டம்: ரிப்பன் மாளிகை முன் நடந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை கைது செய்தது
தூய்மைப்பணியாளர் போராட்டம் கடந்த இரவுக்குத் திருப்புமுனை எடுத்தது

தூய்மைப்பணியாளர் போராட்டம்: ரிப்பன் மாளிகை முன் நடந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை கைது செய்தது

எழுதியவர் Venkatalakshmi V
Aug 14, 2025
08:08 am

செய்தி முன்னோட்டம்

பணி நிரந்தரம் மற்றும் தூய்மைப் பணிகளை தனியாருக்கு ஒப்படைக்கக் கூடாது என்பன உள்ளிட்ட முக்கியக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 13 நாட்களாக சென்னை ரிப்பன் மாளிகை அருகே நடைபெற்று வந்த தூய்மைப்பணியாளர் போராட்டம் கடந்த இரவுக்குத் திருப்புமுனை எடுத்தது. சென்னை உயர் நீதிமன்றத்தில் போராட்டம் நடத்தி வருபவர்கள் பொது மக்களுக்கு இடையூறு செய்வதாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்றது. அதில் போராட்டம் நடத்துபவர்களை அப்புறப்படுத்துமாறு தமிழக அரசிற்கு உத்தரவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்களின் கைது படலம் நடைபெற்றது.

வழக்கு

வழக்கும், தமிழக அரசின் நடவடிக்கையும்

வழக்கில், "போராட்டம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது, அருகிலுள்ள மருத்துவ சேவைகள் குறுக்கீடு அடைந்துள்ளன" என்று தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதற்கு எதிராக, "போராட்டம் எந்தவிதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை" என போராட்டக்காரர்கள் தரப்பில் பதிலளிக்கப்பட்டது. வழக்கின் விசாரணை முடிவில், போராட்டக்காரர்களை அப்புறப்படுத்துமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, போலீசார் போராட்ட இடத்தில் குவிக்கப்பட்டனர். அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர் பாபு மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று தூய்மைப்பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், போராட்டத்தை தொடரத் தீர்மானித்த தூய்மைப்பணியாளர்கள், கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கைது நடவடிக்கைகள் சென்னை நகரத்தில் கலக்கம் ஏற்படுத்தியுள்ளன.