LOADING...
உலக சாம்பியன் குகேஷுக்கு என்னாச்சு? தொடர் தோல்விகளால் உலக தரவரிசையில் 20-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்
செஸ் உலக தரவரிசையில் 20-வது இடத்திற்கு தள்ளப்பட்டார் டி. குகேஷ்

உலக சாம்பியன் குகேஷுக்கு என்னாச்சு? தொடர் தோல்விகளால் உலக தரவரிசையில் 20-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 04, 2026
10:27 am

செய்தி முன்னோட்டம்

2024 டிசம்பரில் உலக சாம்பியன் பட்டம் வென்ற பிறகு, இந்திய கிராண்ட் மாஸ்டர் டி. குகேஷ் மீது எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. ஆனால், தற்போது அவரது ஃபார்ம் சற்றே சரிந்துள்ளதை காட்டுகிறது நேரடி செஸ் தரவரிசை. சமீபத்திய தோல்விகளால் அவர் 19 ரேட்டிங் புள்ளிகளை இழந்து, உலகத் தரவரிசையில் 20-வது இடத்திற்கு சரிந்துள்ளார். Prague International Chess Festival-ன் ஆறாவது சுற்றில், சக நாட்டு வீரரான அரவிந்த் சிதம்பரத்தை குகேஷ் எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், குகேஷிடம் ஒரு யானை (Rook) மற்றும் ஒரு சிப்பாய் அதிகமாக இருந்தபோதிலும், நேர நெருக்கடி அவருக்கு வினையாக முடிந்தது.

கருத்து

அரவிந்த் சிதம்பரம் கருத்து

வெற்றிக்குப் பிறகு பேசிய அரவிந்த், "குகேஷிடம் நேரம் குறைவாக இருந்ததே எனது வெற்றிக்கு முக்கியக் காரணம். அவரிடம் போதிய நேரம் இருந்திருந்தால், கண்டிப்பாக `Rd3` என்று ஆடி ஆட்டத்தைச் சமன் செய்திருப்பார். இரண்டு குதிரைகளை சமாளிப்பது எப்போதும் சவாலான ஒன்று," என்று தெரிவித்தார். தற்போது நடைபெற்று வரும் இந்த தொடரில் ஆடிய 6 போட்டிகளில் குகேஷ் 3-இல் தோல்வியடைந்து, 3-ஐ சமன் செய்துள்ளார். இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு அவர் தள்ளப்பட்டுள்ளார். 19 வயதேயான குகேஷ், இந்தத் தோல்விகளிலிருந்து மீண்டு வந்து மீண்டும் தனது ஆதிக்கத்தை செலுத்துவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement