
நொய்டா வரதட்சணை கொலை வழக்கில் பெண்ணின் மைத்துனர் கைது; மாமனாருக்கும் வலைவீச்சு
செய்தி முன்னோட்டம்
நொய்டாவில் வரதட்சணை தொடர்பான நிக்கி பாட்டியின் கொலை வழக்கு தொடர்பாக நடந்து வரும் விசாரணையில், நொய்டா காவல்துறை திங்கள்கிழமை அவரது மைத்துனரை கைது செய்தது. இது இந்த வழக்கில் மூன்றாவது கைது என்று ANI தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை, இந்த வழக்கு தொடர்பாக இறந்த பெண்ணின் மாமியார் நிக்கி பாட்டியை போலீசார் கைது செய்தனர். முன்னதாக நிக்கியின் கணவர் விபின் பாட்டி, போலீஸ் என்கவுன்டரின் போது காலில் சுடப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது விபின் பாட்டி 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
வருத்தமின்மை
குற்றத்திற்கு சிறிதும் வருந்ததை கணவன்
மருத்துவமனை படுக்கையில் இருந்து ANI செய்தி நிறுவனத்திடம் பேசிய கணவன் விபின், குற்றச்சாட்டுகளை மறுத்து, "நான் அவளைக் கொல்லவில்லை. அவள் தானாகவே இறந்துவிட்டாள் ," என்று அவர் கூறினார். உடல் ரீதியான தாக்குதல் குற்றச்சாட்டுகள் குறித்து கேட்டபோது, "கணவனுக்கும் மனைவிக்கும் அடிக்கடி சண்டைகள் வருவது திருமணங்களில் மிகவும் பொதுவானது..." என்றும் பதிலளித்தார். விபின் தனது மனைவியை தீ வைத்துக் கொளுத்தியதாக குற்றம் சட்டப்பட்டிருப்பதாகவும், அதனால் நிக்கி உயிரிழந்ததாகவும், நிக்கியை வரதட்சணை கேட்டு அடிக்கடி தாக்கியதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையில், தேசிய மகளிர் ஆணையம் (NCW) இந்த வழக்கை தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது.
திருமணம்
ஒரே குடும்பத்தில் அக்கா- தங்கை திருமணம்
பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை கூறுகையில், தனது மகள்கள் காஞ்சன்(29) மற்றும் நிக்கி(26) ஆகியோர் 2016ஆம் ஆண்டு முறையே சகோதரர்கள் ரோஹித் பாட்டி மற்றும் விபின் பாட்டி ஆகியோரை மணந்தனர். "அப்போதிருந்து அவர்கள் இரு மகள்களையும் சித்திரவதை செய்து வரதட்சணை கேட்டு வருகின்றனர்." "அவர்கள் ஒரு ஸ்கார்பியோ காரைக் கேட்டார்கள். நாங்கள் அவர்களுக்கு கொடுத்தோம், மீண்டும் அவர்கள் ஒரு புல்லட் மோட்டார் சைக்கிளைக் கேட்டார்கள். அதையும் நாங்கள் அவர்களுக்குக் கொடுத்தோம். அவர்களின் கோரிக்கைகள் நாளுக்குநாள் அதிகரித்து வந்தன. அதன் பிறகு அவர்கள் எங்களிடம் ₹36 லட்சம் கேட்கத் தொடங்கினர்," என்று அவர் மேலும் கூறினார். இந்த சர்ச்சையைத் தீர்க்க பல முறை பஞ்சாயத்து ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், ஆனால் அனைத்து முயற்சிகளும் வீணாகிவிட்டதாகவும் அவர் கூறினார்.
சாட்சி
தாயை கொடூரமாக கொன்றதை நேரில் கண்ட 6 வயது மகன்
இந்த கொடூரமான சம்பவத்தை நேரில் பார்த்த நிக்கியின் ஆறு வயது மகன், "அவர்கள் என் அம்மா மீது ஏதோ ஒன்றை ஊற்றி, அவரை அறைந்து, லைட்டரைப் பயன்படுத்தி தீ வைத்தனர்" என்று கூறினார். இந்த சாட்சியம் வழக்கிற்கு பிரதான சாட்சியமாக கருதப்படுகிறது. அதே நேரத்தில், நிக்கியின் மூத்த சகோதரி காஞ்சன், இந்தத் தாக்குதலை வீடியோவாக பதிவு செய்து, விபின் பாட்டி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் வரதட்சணைக்காக தனது சகோதரியை கொன்றதாகக் குற்றம் சாட்டினார். "நாங்கள் பல நாட்களாக அடித்து சித்திரவதை செய்யப்பட்டோம். அவர்கள் ₹36 லட்சம் கேட்டு மிரட்டினர். அவர்கள் அவளை கழுத்திலும் தலையிலும் அடித்து, ஆசிட் வீசி, அவளுடைய குழந்தையின் முன் தீ வைத்துக் கொளுத்தினர்," என்று காஞ்சன் கூறினார்.
காரணம்
கொலைக்கான சாத்தியமான காரணம்
ஆகஸ்ட் 21-ஆம் தேதி, பியூட்டி பார்லர் மீண்டும் திறக்க திட்டமிட்டுள்ளதாக நிக்கி தனது கணவர் விபினிடம் தெரிவித்ததையடுத்து, இருவருக்குமிடையே கடுமையான வாக்குவாதம் மற்றும் மோதல் ஏற்பட்டதாக இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. விபின் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த போது, நிக்கி 'இதற்கெதிராக யாரும் என்னைத் தடுக்க முடியாது' எனக் கூறியதாகவும், இதனால் விபின் கோபமடைந்தாக கூறப்படுகிறது. விபின், தனது குடும்பத்தில் இன்ஸ்டாகிராமில் வீடியோக்கள் போடுவதோ, பார்லர் நடத்துவதோ அனுமதிக்கப்படாது என நிக்கியிடம் எச்சரிக்கை, இது வாக்குவாதமாக மாறி, அவர் (விபின்) நிக்கியை தாக்கத் தொடங்கினார் என விசாரணை அதிகாரி கூறியுள்ளார். சகோதரர்கள் இருவரும் பணிக்கு செல்லாமல் வரதட்சணையை நம்பி வாழ்ந்ததாக நிக்கியின் தந்தை கூறியுள்ளார்.