Loading...

கொலை: செய்தி

23 Sep 2026
• கர்நாடகா

ஷார்ஜாவில் கர்நாடக நபர் கொடூரக் கொலை: 9 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல் கண்டெடுப்பு, மனைவி மற்றும் மகன் மாயம்

கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த ஆல்வின் பிரகாஷ் குண்டர் என்பவர் ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) ஷார்ஜா நகரில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு, அவரது உடல் 9 துண்டுகளாக வெட்டப்பட்டு காருக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்ட சம்பவம் இரண்டு மாதங்களுக்குப் பிறகு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

14 Sep 2026
• அசாம்

காவல்துறை காரில் இருந்து குதித்து அதிர்ச்சி மரணம்! மனைவியின் தலையைத் துண்டித்து ஃபிரிட்ஜில் வைத்த கொடூரன்; அசாமில் பரபரப்பு

அசாம் மாநிலம் கௌஹாத்தியில் மனைவியை கொடூரமாகக் கொலை செய்து, அவரது துண்டிக்கப்பட்ட தலையை ஃபிரிட்ஜில் வைத்த வழக்கில் கைதான ராமானுஜ் கோஸ்வாமி (30) என்ற நபர், நகரும் காவல்துறை வாகனத்தில் இருந்து குதித்து உயிரிழந்தார்.

09 Sep 2026
• சென்னை

சிறுமி ஹாசினி வழக்கு: தஷ்வந்த் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மறுசீராய்வு மனு தாக்கல்

சென்னையை அடுத்துள்ள போரூரில் 6 வயது சிறுமி ஹாசினியை பாலியல் வன்கொடுமை செய்து, கொடூரமாக கொலை செய்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட தஷ்வந்த் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் கடைசி வாய்ப்பாக மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

08 Sep 2026
• டெல்லி

டெல்லி: இரைச்சல் தகராறில் ஓய்வுபெற்ற மணிப்பூரி இசைக்கலைஞர் கொலை

டெல்லியின் கிலோகரி கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே, டெலிவரி பாய்ஸ் மற்றும் தாபா ஊழியர்களால் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில், 54 வயதான ஓய்வுபெற்ற மணிப்பூரி இசைக்கலைஞரான சி. விக்ரம் சிங் திங்களன்று உயிரிழந்தார்.

நல்கொண்டா பள்ளி முதல்வர் கொலையில் சிக்கிய 10-ஆம் வகுப்பு மாணவர்கள்: காவல்துறை துப்புதுலக்கியது எப்படி?

தெலங்கானா மாநிலத்தில் இயங்கி வரும் நாகார்ஜுனா கிராமர் கான்செப்ட் பள்ளியின் முதல்வர் கல்லு ரூபாரெட்டி கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அதே பள்ளியை சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவர்கள் இருவரை காவல்துறை கைது செய்துள்ளது.

13 Aug 2026
• அமெரிக்கா

AI-யால் இருண்ட கற்பனைகளில் மூழ்கி குடும்பத்தினரையே கொன்ற இந்திய வம்சாவளி பதின்வயது இளைஞர்

மாசசூசெட்ஸின் ஆக்டன் நகரில் உள்ள தனது வீட்டில், தனது தாயையும், தம்பியையும் கொலை செய்ததாக, இந்திய வம்சாவளியை சேர்ந்த 17 வயது இளைஞரான அர்ஜுன் அரவிந்த் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

31 Jul 2026
• ஆம் ஆத்மி

ஐபி அதிகாரி கொடூரக் கொலை! ஆம் ஆத்மி முன்னாள் நிர்வாகி தாஹிர் உசேனுக்கு ஆயுள் தண்டனை

கடந்த 2020 ஆம் ஆண்டு வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட கலவரத்தின் போது, இந்தியாவின் உள்நாட்டு உளவு அமைப்பான மத்திய நுண்ணறிவுப் பிரிவு (ஐபி) அதிகாரி அங்கித் சர்மாவை கடத்தி கொடூரமாகக் கொலை செய்த வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் நிர்வாகி தாஹிர் உசேன் உட்பட 5 பேருக்கு டெல்லி கர் கர்டூமா நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

28 Jul 2026
• டெல்லி

ஜந்தர் மந்தர் வன்முறை: AI மூலம் அடையாளம் காணப்பட்ட 2000க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களுக்கு குற்றப் பின்னணி உள்ளது

காக்ரோச் ஜனதா கட்சியின் (CJP) போராட்டத்தின் போது வெடித்த வன்முறை தொடர்பாக குறைந்தது 20 முதல் தகவல் அறிக்கைகள் (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளதாக டைம்ஸ் நவ் செய்தி வெளியிட்டுள்ளது.

24 Jul 2026
• சென்னை

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி அடித்துக் கொலை! சக கைதி செய்த கொடூரம்!

சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கொலை வழக்கில் கைதாகி சிகிச்சை பெற்று வந்த வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி கைதியான ஜாகீர் (27) என்பவர் சக கைதியால் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்காள பாலியல் வன்கொடுமை-கொலை வழக்கு: முக்கிய குற்றவாளி போலீஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்டார்

மேற்கு வங்கத்தின் பாருய்பூரில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய சந்தேக நபரான பிரபாஷ் மொண்டல், செவ்வாய்க்கிழமை அதிகாலை காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

08 Jul 2026
• அமெரிக்கா

சர்வதேச அளவில் பிஷ்னோய் கேங் மீது பாய்ந்த 'ஆபரேஷன் ஹார்ட் பால்'; சீக்கியர் நிஜ்ஜார் கொலையின் பின்னணி வெளிவந்தது

அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கூட்டுப் பாதுகாப்புப் படைகள் இணைந்து நடத்திய 'ஆபரேஷன் ஹார்ட் பால்' என்ற அதிரடி வேட்டையில், இந்தியாவை அடித்தளமாக கொண்டு உலகளவில் செயல்பட்டு வந்த மூன்று முக்கிய பாதாள உலகக் குற்றக் கும்பல்களின் நெட்வொர்க் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.

02 Jul 2026
• புனே

புனே தொழிலதிபர் கொலை வழக்கில் நேரில் பார்த்த சாட்சியம் இல்லாததால், உண்மை கண்டறியும் சோதனைக்கு போலீசார் கோரிக்கை

தனது வருங்கால கணவர் கேதன் அகர்வால் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சியா கோயலுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த புனே காவல்துறை நீதிமன்றத்தை அணுகியுள்ளது.

24 Jun 2026
• புனே

புனே தொழிலதிபர் கொலை வழக்கில் காவல்துறையினர் துப்பு துலக்கியது இப்படிதான்

ஜூன் 18 அன்று புனே லோகட் கோட்டையில் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கேதன் அகர்வால் மர்மமான முறையில் மரணமடைந்த வழக்கில், சம்பவம் நடந்த நாளன்று எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்த பிறகு ஒரு பெரிய திருப்புமுனை ஏற்பட்டது.

19 May 2026
• தமிழ்நாடு

டாக்டர் சுப்பையா கொலை வழக்கு: 9 பேரின் விடுதலையை ரத்து செய்து ஆயுள் தண்டனை விதித்தது உச்ச நீதிமன்றம்

தமிழகத்தையே உலுக்கிய பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்த தீர்ப்பை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

'டெசிக்னேட்டட் சர்வைவர்' ரூல்: அமெரிக்க அதிபரும் துணை அதிபரும் தாக்குதலில் இறந்தால் அடுத்து நாட்டை யார் ஆள்வார்கள்?

வாஷிங்டன் செய்தியாளர்கள் சந்திப்பு விருந்து நிகழ்ச்சியில் (WHCD) அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது நடத்தப்பட்ட கொலை முயற்சித் தாக்குதல், அமெரிக்காவின் உயர்மட்டப் பாதுகாப்பு மற்றும் அதிகாரப் படிநிலை குறித்த விவாதங்களை எழுப்பியுள்ளது.

28 Apr 2026
• அமெரிக்கா

டிரம்பை கொல்ல முயன்ற நபர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்ற 'வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் சந்திப்பு' (WHCD) விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு நடத்திய கலிபோர்னியாவைச் சேர்ந்த கோல் தாமஸ் ஆலன் (31) மீது, அதிபரைக் கொலை செய்ய முயன்றதாக முறைப்படி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

23 Apr 2026
• டெல்லி

டெல்லி ஐஆர்எஸ் அதிகாரி மகள் கொலை: கொலையாளி 4 அடுக்கு பாதுகாப்பை உடைத்தது எப்படி?

தெற்கு டெல்லியின் அமர் காலனி பகுதியில் உள்ள ஐஆர்எஸ் (IRS) அதிகாரியின் 22 வயது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

27 Mar 2026
• திருமணம்

திருமணமானவர் லிவ்-இன் உறவில் இருப்பது குற்றமல்ல: அலகாபாத் உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திருமணமான ஒரு ஆண், மற்றொரு பெண்ணுடன் பரஸ்பர சம்மதத்துடன் 'லிவ்-இன்' உறவில் இருப்பது சட்டப்படி குற்றமல்ல என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் மிக முக்கியமான ஒரு கருத்தைப் பதிவு செய்துள்ளது.

லக்னோவில் கொடூரம்: தந்தையை சுட்டுக்கொன்று துண்டு துண்டாக வெட்டி டிரம்லில் அடைத்த கல்லூரி மாணவன்

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவின் உயர்தரப் பகுதியான ஆஷியானாவில், 21 வயது கல்லூரி மாணவன் ஒருவன் தனது தந்தையை கொடூரமான முறையில் கொலை செய்து, உடலை துண்டு துண்டாக வெட்டி பிளாஸ்டிக் டிரம்லில் அடைத்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

04 Feb 2026
• லிபியா

வீடுபுகுந்து சுட்டுக்கொல்லப்பட்ட கடாபியின் வாரிசு; லிபியாவில் அதிரடி தாக்குதல்

லிபியாவின் மறைந்த முன்னாள் அதிபர் முஅம்மர் கடாபியின் மகன் சைஃப் அல்-இஸ்லாம் கடாபி (53), ஆயுதமேந்திய கும்பலால் சுட்டு கொல்லப்பட்டதாக அவரது அரசியல் அலுவலகம் செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது.

வங்கதேசத்தில் தொடரும் இந்துக்கள் மீதான தாக்குதல்; 23 வயது இளைஞர் கராஜில் உயிரோடு எரிப்பு; பதறவைக்கும் பின்னணி

பங்களாதேஷில் சிறுபான்மை இந்துக்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நரசிங்கடியில் 23 வயது இந்து இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

23 Jan 2026
• இந்தியா

சிறையில் மலர்ந்த காதல்.. பரோலில் திருமணம்; ராஜஸ்தானில் சுவாரசியம்!

இந்தியாவையே உலுக்கிய இரண்டு வெவ்வேறு கொலை வழக்குகளில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பிரியா சேத் (31) மற்றும் ஹனுமன் பிரசாத் (29) ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்ய உள்ளனர்.

12 Jan 2026
• பெங்களூர்

பெங்களூரு பெண் பொறியாளர் மரணம்: கொலையை மறைக்க தீ வைத்த 18 வயது இளைஞர்

பெங்களூரு ராமமூர்த்தி நகர் காவல் எல்லைக்குட்பட்ட சுப்ரமண்யா லேஅவுட் பகுதியில், கடந்த ஜனவரி 3-ஆம் தேதி இரவு ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது.

பங்களாதேஷில் மீண்டும் ஒரு இந்து பலி; அடித்து துன்புறுத்தி விஷம் கொடுத்து கொலை; திட்டமிட்ட சதி என குற்றச்சாட்டு

பங்களாதேஷில் நிலவி வரும் அரசியல் ஸ்திரமற்ற சூழலுக்கு மத்தியில், சிறுபான்மையினரான இந்துக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்கதையாகி வருகின்றன.

பங்களாதேஷில் திபு தாஸ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி யாசின் அராஃபத்தைக் கைது செய்தது காவல்துறை

பங்களாதேஷின் மைமென்சிங் பகுதியில் திபு தாஸ் என்பவர் கொடூரமான முறையில் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான யாசின் அராஃபத்தை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர்.

சிறுபான்மையினரை குறிவைத்து வங்கதேசத்தில் மீண்டும் பயங்கரம்: 18 நாட்களில் 6-வது இந்து நபர் படுகொலை

பங்களாதேஷில் சிறுபான்மையின இந்துக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து வரும் நிலையில், நரசிங்கடி மாவட்டத்தில் மர்ம கும்பலால் இந்து மளிகை கடை உரிமையாளர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

05 Jan 2026
• அமெரிக்கா

முன்னாள் காதலியை கொன்றுவிட்டு அமெரிக்காவிலிருந்து தப்பி சென்ற இந்திய வாலிபர் தமிழகத்தில் கைது

அமெரிக்காவின் மேரிலாந்தில் தனது முன்னாள் காதலி நிகிதா கோடிஷாலாவை கொலை செய்ததாக 26 வயதான இந்திய இளைஞரான அர்ஜுன் சர்மாவை தமிழ்நாட்டில் கைது செய்துள்ளது காவல்துறை.

01 Jan 2026
• கொல்கத்தா

பெற்றோர் ஒப்புதலுடன் படமாகிறது RG Kar பாலியல் வன்கொடுமை-கொலை வழக்கு

கொல்கத்தாவின் RG Kar மருத்துவ கல்லூரியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் இளம் மருத்துவரின் பெற்றோர், இந்த சம்பவம் குறித்த திரைப்படத்திற்கு இப்போது ஒப்புதல் அளித்துள்ளனர்.

டேராடூனில் இனவெறி தாக்குதலுக்கு ஆளான திரிபுரா மாணவர் உயிரிழப்புக்கு காரணம்: மருத்துவ அறிக்கையில் திடுக் தகவல்

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இனவெறித் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த 24 வயது திரிபுரா மாணவர் ஏஞ்சல் சக்மா என்பவரின் மருத்துவ அறிக்கை திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளது.

'தேர்தலை தடம் புரள செய்வதற்காக யூனுஸ் ஆட்சி உஸ்மான் ஹாடியை கொன்றது': சகோதரர் குற்றசாட்டு

பங்களாதேஷ் மாணவர் தலைவர் ஷெரிப் உஸ்மான் ஹாடியின் படுகொலை பரவலான அமைதியின்மையை தூண்டியுள்ளதுடன், முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கத்திற்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளையும் எழுப்பியுள்ளது.

15 Dec 2025
• ஹாலிவுட்

பிரபல ஹாலிவுட் இயக்குனர் ராப் ரெய்னர், மனைவி மைக்கேல் கத்தியால் குத்தி கொலை; சந்தேக வலையில் மகன்

ஹாலிவுட் இயக்குனர் ராப் ரெய்னர் மற்றும் அவரது மனைவி மைக்கேல் சிங்கர் ரெய்னர் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் (அமெரிக்க நேரப்படி) லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அவர்களது வீட்டில் இறந்து கிடந்தனர்.

04 Dec 2025
• ஹரியானா

தன்னை விட அழகாக இருந்ததாக 4 குழந்தைகளைக் கொன்ற ஹரியானா பெண்: சொந்த மகனையும் கொன்ற கொடூரம்

ஹரியானாவின் பானிபட் மாவட்டத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளில் தன் சொந்த மகன் உட்பட நான்கு குழந்தைகளை சாவகாசமாகக் கொலை செய்த 34 வயதுப் பெண் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

01 Dec 2025
• கோவை

மனைவியைக் கொன்று, சடலத்துடன் செல்ஃபி எடுத்து வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பதிவிட்ட கணவன்; கோவையில் பகீர்

தமிழ்நாட்டில் அதிர்ச்சிக்குள்ளாக்கும் சம்பவமாக, கோவையில் பிரிந்து வாழ்ந்த மனைவியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த கணவன், அவரது சடலத்துடன் செல்ஃபி புகைப்படம் எடுத்து அதனைத் தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பதிவேற்றம் செய்துள்ளார்.

24 Nov 2025
• கொள்ளை

முன்னாள் MLA சுதர்சனம் கொலை வழக்கில் 'பவாரியா' கொள்ளையர்கள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான கே. சுதர்சனம் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட பவாரியா கொள்ளைக் கும்பலை சேர்ந்த மூன்று பேருக்கு சென்னை நீதிமன்றம் இன்று ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

பத்திரிகையாளர் கஷோகி கொலைக்கும் சவுதி இளவரசருக்கும் தொடர்பில்லை: உளவுத்துறையின் அறிக்கையை நிராகரித்த டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை(MBS), பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை வழக்கில் சம்மந்தமில்லை என பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

10 Nov 2025
• புனே

திருஷ்யம் பட பாணியில் நடந்த கொடூரம்: மனைவியைக் கொன்று உடலை எரித்த கணவன் சிக்கியது எப்படி?

புனேவில் கணவன் ஒருவன், அஜய் தேவ்கன் நடித்த பரபரப்பான திருஷ்யம் திரைப்படத்தைப் பார்த்து, அதே பாணியில் தனது மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்து, அவரது உடலை எரியூட்டி, பின்னர் மனைவியைக் காணவில்லை எனக் காவல் நிலையத்தில் பொய்யாகப் புகார் அளித்து நாடகமாடிய அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

02 Nov 2025
• பீகார்

பீகார் தேர்தல் பரபரப்பு: கொலை வழக்கில் ஆளும் கட்சி வேட்பாளர் அனந்த் சிங் கைது

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவுக்குச் சில நாட்களே உள்ள நிலையில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் சர்ச்சைக்குரிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மொகாமா தொகுதி வேட்பாளருமான அனந்த் சிங், ஜன சூராஜ் தொண்டர் துலார் சந்த் யாதவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

27 Oct 2025
• டெல்லி

டெல்லி க்ரைம்: தடயவியல் அறிவைப் பயன்படுத்தி லிவ்-இன் பார்ட்னரை கொலை செய்த காதலி

டெல்லியின் காந்தி விஹாரில் யுபிஎஸ்சி (UPSC) தேர்வுக்கு தயாராகி வந்த 32 வயதான ராம்கேஷ் மீனா என்பவர் எரிந்த நிலையில் கொலை செய்யப்பட்ட வழக்கை டெல்லி போலீசார் முடித்து வைத்துள்ளனர்.

17 Oct 2025
• தமிழ்நாடு

ஜாதி ஆணவ கொலைகளை தடுக்கத் தனி ஆணையம்: ஓய்வு பெற்ற நீதிபதி பாஷா தலைமையில் அமைகிறது!

தமிழ்நாட்டில் சாதி ஆணவ கொலைகளை தடுத்து நிறுத்த தேவையான சட்ட பரிந்துரைகளை வழங்குவதற்காக, ஓய்வு பெற்ற நீதிபதி பாஷா தலைமையில் தனி ஆணையம் அமைக்கப்படும் என சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார்.

13 Oct 2025
• திரிபுரா

திரிபுரா: தாய்மாமனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட 14 மாத குழந்தை

வடக்கு திரிபுரா மாவட்டத்தின் பனிசாகர் துணைப்பிரிவில், அக்டோபர் 11 ஆம் தேதி 14 மாத குழந்தை தனது தாய் வழி மாமாவால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

போரூர் சிறுமி கொடூர கொலை வழக்கில் அதிரடி திருப்பம்: தஷ்வந்த்தை விடுதலை செய்தது உச்ச நீதிமன்றம்

சென்னை அருகே போரூரில் கடந்த 2017-ஆம் ஆண்டு 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, பின்னர் எரித்து கொல்லப்பட்ட கொடூர வழக்கில், முக்கிய குற்றவாளியான தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.

25 Sep 2025
• அமெரிக்கா

அமெரிக்காவில் குழந்தைகள் பாலியல் குற்றவாளியை தேடிக்கொன்ற இந்தியர் கைது

நீதிமன்ற ஆவணங்களின்படி, கலிபோர்னியாவை சேர்ந்த இந்தியர் ஒருவர், பொது பாலியல் குற்றவாளி பதிவேட்டில் உள்ளவரின் பெயரை வைத்து தேடிக்கண்டுபிடித்து, கத்தியால் குத்திக் கொன்றதாகக் கூறப்படுகிறது.

ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், தற்போது நடைபெற்று வரும் விசாரணையில் பல முறைகேடுகள் இருப்பதாக தெரிவித்து, சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

15 Sep 2025
• டெல்லி

BMW கார் விபத்து: பாதிக்கப்பட்டவரின் மனைவி கெஞ்சியும் 19 கி.மீ தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக புகார்

டெல்லியில் நேற்று மதியம் பைக் மீது மோதியதில் மூத்த அரசு அதிகாரி நவ்ஜோத் சிங்கின் மரணத்திற்கு வழிவகுத்த BMW காரை ஓட்டிச் சென்ற பெண் ககன்ப்ரீத் கவுர், திங்கள்கிழமை மருத்துவமனையில் கைது செய்யப்பட்டார்.

சட்டவிரோத குடியேறிகள் மீது...: இந்தியரின் தலை துண்டிக்கப்பட்டது குறித்து அதிபர் டிரம்ப் காட்டம்

டெக்சாஸின் டல்லாஸில் உள்ள ஒரு மோட்டலில் தனது மனைவி மற்றும் மகன் முன்னிலையில் தலை துண்டிக்கப்பட்ட இந்தியர் சந்திரா நாகமல்லையாவின் கொடூரமான கொலைக்குப் பிறகு, சட்டவிரோத குடியேறி குற்றவாளிகள் மீது தனது நிர்வாகம் "மென்மையாக" இருக்காது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சபதம் செய்துள்ளார்.

12 Sep 2025
• அமெரிக்கா

சார்லி கிர்க்கின் படுகொலையில் சந்தேக நபரின் புதிய புகைப்படங்களை வெளியிட்டது FBI

உட்டா பள்ளத்தாக்கு பல்கலைக்கழகத்தில் பழமைவாத ஆர்வலர் சார்லி கிர்க் கொல்லப்பட்டதில் சந்தேகிக்கப்படும் ஒருவரின் புதிய புகைப்படங்களை FBI வியாழக்கிழமை வெளியிட்டு பொதுமக்களின் உதவியைக் கோரியது.

12 Sep 2025
• அமெரிக்கா

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் அரிவாளால் தலை துண்டிக்கப்பட்டு கொலை; குடும்பத்தினர் முன்பு அரங்கேறிய பயங்கரம்

செப்டம்பர் 10 ஆம் தேதி அமெரிக்காவின் டல்லாஸ் மோட்டலில் நடந்த அதிர்ச்சியூட்டும் தாக்குதலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

11 Sep 2025
• அமெரிக்கா

அமெரிக்காவின் பிரபல பல்கலைக்கழகத்தில் அரசியல் கொலை; டிரம்பின் கூட்டாளியான சார்லி கிர்க் சுட்டுக் கொல்லப்பட்டார்

அமெரிக்காவின், டர்னிங் பாயிண்ட் யுஎஸ்ஏ என்ற இளைஞர் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியும், இணை நிறுவனருமான கன்சர்வேடிவ் ஆர்வலர் சார்லி கிர்க், புதன்கிழமை உட்டா பள்ளத்தாக்கு பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு நிகழ்வின் போது கொல்லப்பட்டார்.

உத்தரபிரதேசத்தில் 52 வயது பெண்ணைக் கொன்ற 26 வயது இன்ஸ்டாகிராம் காதலன்

உத்தரபிரதேசத்தின் மெயின்புரியில் 52 வயது பெண் ஒருவர் தனது 26 வயது காதலனால் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

29 Aug 2025
• பஹல்காம்

பஹல்காம் தீவிரவாதிகள் தாக்குதலுக்காக பைசரன் பள்ளத்தாக்கினை தேர்வு செய்ததன் காரணத்தை வெளியிட்ட NIA

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சில மாதங்களுக்கு முன், 26 பொதுமக்கள் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை விசாரித்து வரும் தேசிய புலனாய்வு அமைப்பு (NIA), மூன்று பயங்கரவாதிகள் இந்தக் கொலைகளைச் செய்ததில் நேரடியாக ஈடுபட்டிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

25 Aug 2025
• வரதட்சணை

நொய்டா வரதட்சணை கொலை வழக்கில் பெண்ணின் மைத்துனர் கைது; மாமனாருக்கும் வலைவீச்சு

நொய்டாவில் வரதட்சணை தொடர்பான நிக்கி பாட்டியின் கொலை வழக்கு தொடர்பாக நடந்து வரும் விசாரணையில், நொய்டா காவல்துறை திங்கள்கிழமை அவரது மைத்துனரை கைது செய்தது.

வரதட்சணை கொலை: கிரேட்டர் நொய்டாவில் குற்றம் சாட்டப்பட்ட கணவர் மீது காவல்துறை என்கவுன்ட்டர்

ஒரு பயங்கரமான வரதட்சணை கொலை வழக்கில் திடீர் திருப்பமாக, குற்றம் சாட்டப்பட்ட கணவர் விபின், ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 24) பிற்பகல் கிரேட்டர் நொய்டாவில் உள்ள சிர்சா சௌக் அருகே உத்தரபிரதேச போலீசாரால் நடந்த என்கவுன்ட்டரில் காலில் சுடப்பட்டார்.

21 Aug 2025
• அகமதாபாத்

10ஆம் வகுப்பு மாணவனை கத்தியால் குத்தியது ஏன்? அகமதாபாத் பள்ளி மாணவனின் இன்ஸ்டாகிராம் சாட் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

குஜராத்தின் அகமதாபாத்தில் 10 ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் தனது ஜூனியர் மாணவனால் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டான்.

20 Aug 2025
• அகமதாபாத்

அகமதாபாத்தில் 10 ஆம் வகுப்பு மாணவனை கத்தியால் குத்திக்கொன்ற ஜூனியர் மாணவன்

குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு வெளியே 15 வயது 10 ஆம் வகுப்பு மாணவன் ஒருவனை, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் அவனது ஜூனியர் மாணவன் கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரேணுகாசாமி கொலை வழக்கு: நடிகர் தர்ஷனின் ஜாமீனை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது

ரேணுகாசாமி கொலை வழக்கு தொடர்பாக கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபாவின் ஜாமீனை ஆகஸ்ட் 14 வியாழக்கிழமை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

பார்க்கிங் பிரச்னையில், ரஜினியின் 'காலா' பட நடிகை ஹுமா குரேஷியின் உறவினர் கொலை

டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் வாகன நிறுத்துமிடம் தகராறில், ரஜினியின் 'காலா' படத்தில் நடித்த பாலிவுட் நடிகை ஹுமா குரேஷியின் உறவினர் ஆசிப் குரேஷி கொல்லப்பட்டார்.

ஐடி இன்ஜினியர் கவின் கொலை வழக்கில் சுர்ஜித்தின் தந்தை சரவணன் கைது

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே 27 வயது ஐடி இன்ஜினியர் கவினின் கொடூரமான கொலை பொதுமக்களிடையே பரவலான சீற்றத்தைத் தூண்டியுள்ள நிலையில், குற்றம் சாட்டப்பட்டவரின் தந்தையான, பணியில் இருக்கும் காவல் துணை ஆய்வாளர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

25 Jul 2025
• கேரளா

சிறையில் இருந்து தப்பியோடிய பாலியல் வன்கொடுமை-கொலை குற்றவாளியை 10 மணி நேரத்தில் பிடித்த காவல்துறை

கேரளாவின் கண்ணூர் மத்திய சிறையில் இருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை குற்றவாளியான கோவிந்தசாமி தப்பிச் சென்றார்.

24 Jul 2025
• தமிழ்நாடு

2018 குன்றத்தூர் குழந்தை கொலை வழக்கில் தாய் அபிராமிக்கு சாகும் வரை ஆயுள்தண்டனை வழங்கியது நீதிமன்றம்

2018 ஆம் ஆண்டு கள்ளக் காதலுக்காக பெற்ற குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துக் கொன்ற தாயிற்கு எதிராக நடந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

16 Jul 2025
• ஏமன்

'மன்னிப்பு இல்லை': நிமிஷா பிரியாவை தூக்கிலிட வேண்டும் என்று ஏமன் நாட்டவரின் குடும்பத்தினர் கோருகின்றனர்

2017ஆம் ஆண்டு கேரள செவிலியர் நிமிஷா பிரியாவால் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஏமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மெஹ்தியின் சகோதரர், அவருக்கு மரண தண்டனை விதிக்கக் கோரியுள்ளார்.

16 Jul 2025
• ஏமன்

ஏமனில் நிமிஷா பிரியாவின் மரணதண்டனையை ஒத்திவைக்க உதவிய 'இந்தியாவின் கிராண்ட் முப்தி' ஷேக் அபுபக்கர் அகமது யார்?

ஏமனில் இந்திய செவிலியர் நிமிஷா ப்ரியாவின் மரணதண்டனை ஒத்திவைக்கப்படுவதை உறுதி செய்ததில் பிரபல முஸ்லிம் மதகுரு காந்தபுரம் ஏபி அபூபக்கர் முஸ்லியார் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

11 Jul 2025
• சென்னை

திருமலா பால் நிறுவனத்தில் 45 கோடி மோசடி: கருவூல மேலாளர் சந்தேகத்திற்கிடமான முறையில் சடலமாக மீட்பு

தமிழ்நாட்டில் பிரபலமான தனியார் பால் நிறுவனமான திருமலா பால் நிறுவனத்தில் ரூ.45 கோடி மோசடி நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

04 Jul 2025
• விசிக

திருநின்றவூர் விசிக பெண் கவுன்சிலர் கொலை: கணவர் உட்பட மூவர் கைது

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் நகராட்சியின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) பெண் கவுன்சிலர் கோமதி (28) கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.

13 Jun 2025
• மேகாலயா

மேகாலயா ஹனிமூன் கொலை: உண்மையாக திட்டம் தீட்டியது இவர்தான், சோனம் இல்லை! புதிய விவரங்கள்

மேகாலயாவில் ஹனிமூன் சென்ற போது கொலை செய்யப்பட்ட இந்தூர் மணமகன் ராஜா ரகுவன்ஷியின் கொலை வழக்கில் பல புதிய விவரங்கள் வெளியாகியுள்ளது.

12 Jun 2025
• மேகாலயா

ஹவாலா மோசடி பக்கம் திரும்புகிறதா மேகலாயா ஹனிமூன் கொலை வழக்கு?

மேகாலயா ஹனிமூன் கொலை வழக்கின் விசாரணை தீவிரமடைந்து வரும் நிலையில், தினசரி புதிய தகவல்கள் வெளியாகி வருகிறது.

11 Jun 2025
• மேகாலயா

மேகாலயா ஹனிமூன் கொலையை சகோதரி தான் செய்திருப்பாள் என உறுதியாக சொல்கிறார் சோனமின் அண்ணன்

சோனம் ரகுவன்ஷியின் சகோதரர் கோவிந்த், தனது சகோதரி தான் அவளது கணவர் ராஜா ரகுவன்ஷியைக் கொன்றது உறுதியாகத் தெரிகிறது என்று இன்று தெரிவித்தார்.

11 Jun 2025
• மேகாலயா

மேகாலயா ஹனிமூன் கொலை: கணவரை கொல்ல கொலையாளிகளுக்கு ₹20 லட்சம் கொடுத்த சோனம்

சோனம் ரகுவன்ஷி தனது கணவர் ராஜா ரகுவன்ஷியைக் கொல்ல கொலையாளிகளுக்கு ₹20 லட்சம் கொடுத்ததாக மேகாலயா காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

10 Jun 2025
• மேகாலயா

மேகாலயா தேனிலவு கொலை: திருமணமான 3 நாட்களுக்கு பின் காதலனுடன் கொலைக்கு திட்டமிட்ட மணப்பெண்

மேகாலயாவில் தேனிலவின் போது, தனது கணவர் ராஜா ரகுவன்ஷியைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட சோனம் ரகுவன்ஷி, திருமணமான மூன்று நாட்களுக்குப் பிறகு தனது காதலனுடன் சேர்ந்து அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டதாக இந்தியா டுடேவிற்கு வட்டாரங்கள் தெரிவித்தன.

09 Jun 2025
• மேகாலயா

மேகாலயா ஹனிமூன் கொலை வழக்கில் இந்தூர் நபரின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது

மேகாலயாவில் இறந்து கிடந்த இந்தூர் குடியிருப்பாளரான ராஜா ரகுவன்ஷியின் பிரேத பரிசோதனை அறிக்கையில், அவரது தலையில் இரண்டு பெரிய கூர்மையான காயங்கள் இருந்தது தெரியவந்துள்ளது.

09 Jun 2025
• மேகாலயா

மேகாலயாவில் காணாமல் போன இந்தூர் பெண் விவகாரத்தில் இறுதியாக விலகியது மர்மம்!

மேகாலயாவில் தேனிலவின் போது காணாமல் போன இந்தூர் பெண் தனது கணவரைக் கொலை செய்ததற்காக திங்கள்கிழமை கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பெற்றோரை கொன்று வீசிய கொடூர மகன்; மேற்கு வங்கத்தில் பயங்கரம்; நடந்தது என்ன?

மேற்கு வங்கத்தில் கிழக்கு பர்த்வானில் தனது பெற்றோரைக் கொன்றதாகவும், பின்னர் போங்கானில் உள்ள ஒரு அனாதை இல்லத்தில் ஊழியர்களைத் தாக்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு, 35 வயதான சிவில் இன்ஜினியர் ஹுமாயூன் கபீர் புதன்கிழமை (மே 28) கைது செய்யப்பட்டார்.

23 May 2025
• கர்நாடகா

மனைவி பிரிந்ததால் விரக்தி; கர்நாடகாவில் திருமணம் செய்து வைத்த தரகரை கொலை செய்த கணவர்

கர்நாடகாவின் மங்களூர் கிராமப்புற காவல் எல்லைக்குட்பட்ட வாலாச்சிலில் வியாழக்கிழமை (மே 22) நள்ளிரவு நடந்த வன்முறை தாக்குதலில் 50 வயது திருமண தரகர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். அவரது இரண்டு மகன்கள் படுகாயமடைந்தனர்.

2005 பெங்களூரு, 2006 நாக்பூர் தாக்குதல்கள் உட்பட இந்தியாவின் 3 பெரிய தாக்குதல்களுக்குக் காரணமான லஷ்கர் பயங்கரவாதி கொலை

இந்தியாவில் பல உயர்மட்ட பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா(LeT) அமைப்பின் உயர்மட்டத் தலைவரான சைஃபுல்லா காலித், பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் கொல்லப்பட்டதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

20 Apr 2025
• கர்நாடகா

கர்நாடக முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் மர்ம மரணம்; மனைவியை சந்தேகிக்கும் போலீசார்

கர்நாடக முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 20) பிற்பகல் எச்எஸ்ஆர் லேஅவுட்டில் உள்ள அவரது வீட்டில் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் இறந்து கிடந்தார்.