
ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
செய்தி முன்னோட்டம்
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், தற்போது நடைபெற்று வரும் விசாரணையில் பல முறைகேடுகள் இருப்பதாக தெரிவித்து, சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கை CBI-க்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கில், கடந்த அக்டோபரில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது மற்றும் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு நகல்கள் வழங்கப்பட்டன. இருப்பினும், செம்பியம் போலீசார் விசாரணையை நியாயமாக நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டு மனுவில் எழுப்பப்பட்டது. மேலும், முதல் தகவல் அறிக்கை (FIR) மற்றும் குற்றப்பத்திரிகையில் காணப்படும் தகவல்களில் பல முரண்பாடுகள் இருப்பதும் குறிப்பிடப்பட்டது.
உத்தரவு
சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு என்ன கூறுகிறது?
இந்நிலையில், இன்று (செப்டம்பர் 24), சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கை CBI-க்கு மாற்றுமாறு உத்தரவை பிறப்பித்தது. அதோடு 6 மாதங்களுக்குள் முதல்கட்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், விசாரணை அரசியல் மற்றும் ஊடக தலையீடுகள் இன்றி சுதந்திரமாக நடைபெற வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார். இதுவரை விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீசார் அனைத்து ஆவணங்களையும் சிபிஐக்கு ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை மாதம் சென்னை பெரம்பூரில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், காவல்துறை பொன்னை பாலு, ரவுடி நாகேந்திரன், வழக்கறிஞர் ஹரிஹரன் உள்ளிட்ட 27 பேரை கைது செய்தது.