LOADING...
நடுரோட்டில் எலக்ட்ரிக் கார் பேட்டரி தீர்ந்தால் டென்ஷன் ஆகாதீங்க! நீங்கள் அழைக்க வேண்டிய 24x7 உதவி எண்கள் இதோ
நெடுஞ்சாலையில் எலக்ட்ரிக் வாகனத்தின் பேட்டரி தீர்ந்துவிட்டால் நீங்கள் அழைக்க வேண்டிய அவசர எண்கள்

நடுரோட்டில் எலக்ட்ரிக் கார் பேட்டரி தீர்ந்தால் டென்ஷன் ஆகாதீங்க! நீங்கள் அழைக்க வேண்டிய 24x7 உதவி எண்கள் இதோ

எழுதியவர் Sekar Chinnappan
Feb 19, 2026
11:24 am

செய்தி முன்னோட்டம்

நெடுஞ்சாலையில் உங்கள் எலக்ட்ரிக் வாகனத்தின் பேட்டரி மிகவும் குறைந்த நிலைக்கு செல்லும்போது, வாகனம் தானாகவே டர்டில் மோடு (Turtle Mode) அல்லது லிம்ப் மோடு (Limp Mode) எனும் நிலைக்கு மாறும். இது குறைந்த வேகத்தில் சில கிலோமீட்டர்கள் பயணிக்க உதவும். அந்தச் சமயத்தில் பதற்றமடையாமல், உடனடியாக வாகனத்தின் அபாய விளக்குகளை (Hazard Lights) ஒளிரவிட்டு, சாலையின் ஓரத்தில் பாதுகாப்பான இடத்தில் வாகனத்தை நிறுத்த வேண்டும். வாகனம் நின்ற பிறகு, கதவுகள் லாக் ஆவதைத் தவிர்க்க ஜன்னலை சற்றுத் திறந்து வைப்பது நல்லது என்று அறிவுறுத்தப்படுகிறது.

உதவி எண்கள்

அழைக்க வேண்டிய பிரத்யேக அவசர எண்கள்

இந்தியாவில் உள்ள முன்னணி எலக்ட்ரிக் வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் 24x7 மணிநேர சாலை ஓர உதவி (RSA) சேவையை வழங்குகின்றன. உங்கள் வாகனத்தின் பிராண்டிற்கு ஏற்ப கீழே உள்ள எண்களைத் தொடர்பு கொள்ளலாம்: டாடா மோட்டார்ஸ் (எலக்ட்ரிக் வாகனம்): 1800-209-8282 டாடா சார்ஜிங் சப்போர்ட்: 1800-209-8989 ஹூண்டாய் (சாலை ஓர உதவி): 1800-102-4645 கியா கேர் (எலக்ட்ரிக் வாகனம்): 1800-108-5005 ஹோண்டா கார்ஸ் இந்தியா: 1800-113-121 பொதுவான உதவி (ரோட்சர்வ்): 1800-3093-431

டிப்ஸ்

இழுத்துச் செல்லும்போது கவனிக்க வேண்டியவை

எலக்ட்ரிக் வாகனங்களைப் பொறுத்தவரை, சாதாரண கார்களைப் போல சக்கரங்கள் தரையில் படும்படி இழுத்துச் செல்லக் கூடாது. அவ்வாறு செய்வது மோட்டார் மற்றும் டிரைவ் ட்ரெயினை கடுமையாகப் பாதிக்கும். எப்போதும் பிளாட்பெட் (Flatbed) ரக இழுவை வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதாவது, உங்கள் காரின் நான்கு சக்கரங்களும் தரையில் படாமல் முழுமையாகத் தூக்கிச் செல்லப்பட வேண்டும் என்பதை சேவை மையத்திடம் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

Advertisement

தவிர்த்தல்

எதிர்காலத்தில் இதைத் தவிர்ப்பது எப்படி?

நெடுஞ்சாலைப் பயணங்களுக்கு முன்பே உங்கள் பாதையில் உள்ள சார்ஜிங் நிலையங்களைத் திட்டமிட வேண்டும். பேட்டரி அளவு 20% வரும்போதே அருகில் உள்ள சார்ஜரைத் தேடத் தொடங்குங்கள். 10% என்பதை ரிசர்வ் எரிபொருள் போலக் கருத வேண்டும். PlugShare போன்ற செயலிகளைப் பயன்படுத்தி உடனுக்குடன் சார்ஜிங் நிலையங்களைக் கண்டறியலாம். சரியான திட்டமிடல் இருந்தால், எலக்ட்ரிக் வாகனப் பயணம் பெட்ரோல் வாகனப் பயணத்தை விட நிம்மதியானதாக இருக்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Advertisement