
அமெரிக்காவில் குழந்தைகள் பாலியல் குற்றவாளியை தேடிக்கொன்ற இந்தியர் கைது
செய்தி முன்னோட்டம்
நீதிமன்ற ஆவணங்களின்படி, கலிபோர்னியாவை சேர்ந்த இந்தியர் ஒருவர், பொது பாலியல் குற்றவாளி பதிவேட்டில் உள்ளவரின் பெயரை வைத்து தேடிக்கண்டுபிடித்து, கத்தியால் குத்திக் கொன்றதாகக் கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர் வருண் சுரேஷ் (29) என்றும், கொலையானவர் டேவிட் பிரிம்மர் (71) என்றும் போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். இந்த சம்பவம் ஃப்ரீமாண்ட் நகரில் உள்ள கொலையுண்டவர் வீட்டில் நடந்ததாக இன்டிபென்டன்ட் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.
சம்பவம்
பாலியல் குற்றவாளியை தேடி சென்று கொலை
திங்களன்று கைது செய்யப்பட்ட வருண் சுரேஷ், "அனைத்து பாலியல் குற்றவாளிகளும் மரணத்திற்குத் தகுதியானவர்கள் என்றும், அப்படி ஒருவரைக் கொல்ல நீண்ட காலமாக விரும்பியதாக" போலீசாரிடம் விசாரணையின் போது தெரிவித்தார். பாலியல் குற்றவாளி தரவுத்தளத்தில் பிரிம்மரை கண்டுபிடித்த பிறகு, வருண் சுரேஷ் பொதுக் கணக்காளர் போல் நடித்து, வீடு வீடாகச் சென்று மாறுவேடத்தில் அவரை தேடியதாக ஆவணங்கள் வெளிப்படுத்தின. இறுதியாக பிரிம்மரை கண்டுபிடித்ததும், அவருடன் கைகுலுக்கி, "எனக்கு சரியான ஆள் கிடைத்துவிட்டார் எனக்குத் தெரியும்" என்றும் கூறி அவரை துரத்திச் சென்று கழுத்தில் குத்தி கொன்றுள்ளார்.
வருத்தம்
கொலைக்கு வருத்தம் தெரிவிக்காத வருண் சுரேஷ்
பிரிம்மரை கொன்ற பிறகு சுரேஷ் எந்த வருத்தமும் காட்டவில்லை என்றும், அவரைக் கொலை செய்தது "மிகவும் வேடிக்கையானது" என்றும் காவல்துறையினரிடம் கூறியதாக தெரிவித்துள்ளனர். "(பிரிம்மர்) ஒரு குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் செய்பவர். சொர்க்கம் அவர்களை ஏற்றுக்கொள்ளுமா என்பதை முடிவு செய்வது உங்கள் கடமை அல்ல, அவர்களை வாயில்களுக்கு அனுப்புவது உங்கள் கடமை," என்று அவர் போலீசாரிடம் கூறியதாகவும் கூறப்படுகிறது. வருண் ஏற்கனவே, 2021ஆம் ஆண்டில், Hyatt பிளேஸில் ஒரு பையை விட்டு சென்று, போலி வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததற்காக கைது செய்யப்பட்டார். அப்போதும் அவர், ஹயாட் ஹோட்டல் சங்கிலியின் தலைமை நிர்வாக அதிகாரியை தேடி வருவதாகவும், "அவர் ஒரு குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் செய்பவர், அவரைக் கொல்ல விரும்புவதாக" கூறியதும் குறிப்பிடத்தக்கது.