
10ஆம் வகுப்பு மாணவனை கத்தியால் குத்தியது ஏன்? அகமதாபாத் பள்ளி மாணவனின் இன்ஸ்டாகிராம் சாட் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
செய்தி முன்னோட்டம்
குஜராத்தின் அகமதாபாத்தில் 10 ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் தனது ஜூனியர் மாணவனால் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டான். செவ்வாய்க்கிழமை கோக்ராவில் உள்ள செவன்த்-டே அட்வென்டிஸ்ட் மேல்நிலைப் பள்ளிக்கு வெளியே இந்த சம்பவம் நடந்தது. தாக்கப்பட்ட நயன் சாந்தானி என்ற மாணவன், மணிநகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். சம்பவத்திற்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்ட மாணவன் தப்பி ஓடிய போது, பள்ளியின் வாட்ச் மேனால் அவர் பிடிக்கப்பட்டான். தற்போது அவர் சிறார் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டான்
ஒப்புதல் வாக்குமூலம்
குற்றம் சாட்டப்பட்டவன் நயன் சாந்தானியை குத்தியதாக நண்பரிடம் கூறினான்
காவல்துறை விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட மாணவனுக்கும், அவனது நண்பருக்கும் இடையே நடந்த ஒரு இன்ஸ்டாகிராம் உரையாடலில், குற்றத்திற்கான காரணத்தை வெளிப்படுத்தியதாகத் தெரிகிறது. சாட்டில், குற்றம் சாட்டப்பட்ட மாணவன், நயன் சாந்தனியைக் குத்தியதாக ஒப்புக்கொண்டான். நண்பன் இது குறித்து அதிச்சியடைந்து மீண்டும் கேட்டபோது, அவன் "ஆம்" என்று ஹிந்தியில் பதிலளித்துள்ளார். நயன் சாந்தனி தன்னை மிரட்டியதாகவும், " அந்த மாணவனை தன்னிடம், "யார் நீ? என்ன செய்யமுடியும்?" என்று கூறியதாகவும் குற்றம் சாட்டப்பட்டவன் சாட் செய்துள்ளான்.
நோக்கம்
'அது இருக்கட்டும், நடந்தது நடந்துவிட்டது'
பின்னர் அந்த நண்பர் குற்றம் சாட்டப்பட்ட மாணவனிடம், "இதற்காக யாரையாவது குத்திக் கொல்லவார்களா? நீ அவரை அடித்திருக்கலாம், கொலை செய்திருக்கூடாது" என்று கூறுகிறார். பதிலுக்கு, குற்றம் சாட்டப்பட்ட மாணவன்," அதை விடு. நடந்தது நடந்துவிட்டது" என்று கூறுகிறார். பின்னர் நண்பர், சிறிது நேரம் கழித்து, "இந்த சாட்களை டெலீட் செய்" என்று கூறுவதுடன் உரையாடல் நின்றுவிட்டது.
வழக்கு
அகமதாபாத்தில் போராட்டங்கள் வெடித்ததால், FIR பதிவு செய்யப்பட்டது
இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் அகமதாபாத்தில் பெரும் போராட்டங்களைத் தூண்டியுள்ளது. புதன்கிழமை காலை, பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்கள், பிற குழந்தைகளின் பெற்றோர் மற்றும் சிந்தி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட நூற்றுக்கணக்கான மக்கள் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து நிர்வாகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரினர். காவல்துறையினரின் கூற்றுப்படி, கும்பல் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பள்ளி பேருந்துகள், கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களை சேதப்படுத்தி ஊழியர்களைத் தாக்கியதால் நிலைமை விரைவாக குழப்பமாக மாறியது. இந்த வழக்கு தொடர்பாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது.