LOADING...
டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 அட்டவணை வெளியீடு; குரூப் 1 இல் இந்தியாவுடன் மோதுவது யார்? முழு விவரம்
டி20 உலகக்கோப்பை 2026: சூப்பர் 8 சுற்று அட்டவணை மற்றும் முழு விபரங்கள்

டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 அட்டவணை வெளியீடு; குரூப் 1 இல் இந்தியாவுடன் மோதுவது யார்? முழு விவரம்

எழுதியவர் Sekar Chinnappan
Feb 19, 2026
10:51 am

செய்தி முன்னோட்டம்

2026 டி20 உலகக்கோப்பையின் லீக் சுற்றுகள் நிறைவடைந்த நிலையில், சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ள 8 அணிகளின் விபரம் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. குரூப் ஏ பிரிவில் இருந்து நடப்பு சாம்பியன் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளும், குரூப் பி பிரிவில் இருந்து இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளும் முன்னேறியுள்ளன. குரூப் சி பிரிவில் இருந்து இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளும், குரூப் டி பிரிவில் இருந்து தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளும் தகுதி பெற்றுள்ளன.

இரண்டு பிரிவுகள்

சூப்பர் 8 சுற்றில் இரண்டு பிரிவுகளாகப் பிரிப்பு

தகுதி பெற்றுள்ள 8 அணிகள் தலா நான்கு அணிகள் வீதம் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன: குழு 1: இந்தியா, ஜிம்பாப்வே, மேற்கிந்திய தீவுகள், தென்னாப்பிரிக்கா. குழு 2: பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து, நியூசிலாந்து. ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

அட்டவணை

குழு 1 அட்டவணை

பிப்ரவரி 22: இந்தியா vs தென்னாப்பிரிக்கா, (அகமதாபாத், இரவு 7:00 மணி) பிப்ரவரி 23: ஜிம்பாப்வே vs மேற்கிந்திய தீவுகள், (மும்பை, இரவு 7:00 மணி) பிப்ரவரி 26: தென்னாப்பிரிக்கா vs மேற்கிந்திய தீவுகள், (அகமதாபாத், மதியம் 3:00 மணி) பிப்ரவரி 26: இந்தியா vs ஜிம்பாப்வே, (சென்னை, இரவு 7:00 மணி) மார்ச் 1: ஜிம்பாப்வே vs தென்னாப்பிரிக்கா, (டெல்லி, மதியம் 3:00 மணி) மார்ச் 1: இந்தியா vs மேற்கிந்திய தீவுகள், (கொல்கத்தா, இரவு 7:00 மணி)

Advertisement

அட்டவணை

குழு 2 அட்டவணை

பிப்ரவரி 21: நியூசிலாந்து vs பாகிஸ்தான் (கொழும்பு, இரவு 7:00 மணி) பிப்ரவரி 22: இங்கிலாந்து vs இலங்கை (கண்டி, மதியம் 3:00 மணி) பிப்ரவரி 24: இங்கிலாந்து vs பாகிஸ்தான் (கண்டி, இரவு 7:00 மணி) பிப்ரவரி 25: நியூசிலாந்து vs இலங்கை (கொழும்பு, இரவு 7:00 மணி) பிப்ரவரி 27: இங்கிலாந்து vs நியூசிலாந்து (கொழும்பு, இரவு 7:00 மணி) பிப்ரவரி 28: பாகிஸ்தான் vs இலங்கை (கண்டி, இரவு 7:00 மணி)

Advertisement

குழு 1

குழு 1 இன் பலப்பரிட்சை

இந்தக் குழுவில் இந்திய கிரிக்கெட் அணி மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி அரையிறுதிக்கு செல்ல அதிக வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. எனினும், லீக் சுற்றில் ஆஸ்திரேலியாவிற்கு ஜிம்பாப்வே அதிர்ச்சி கொடுத்தது போல், ஏதேனும் நடந்தால், இதில் மாற்றங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், சென்னையில் நடைபெறவுள்ள இந்தியா vs ஜிம்பாப்வே போட்டி தமிழக ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement