LOADING...
அகமதாபாத்தில் 10 ஆம் வகுப்பு மாணவனை கத்தியால் குத்திக்கொன்ற ஜூனியர் மாணவன்
இந்த தகவல் பரவியதும் பள்ளியை சுற்றி பெரும் போராட்டம் வெடித்தது

அகமதாபாத்தில் 10 ஆம் வகுப்பு மாணவனை கத்தியால் குத்திக்கொன்ற ஜூனியர் மாணவன்

எழுதியவர் Venkatalakshmi V
Aug 20, 2025
04:10 pm

செய்தி முன்னோட்டம்

குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு வெளியே 15 வயது 10 ஆம் வகுப்பு மாணவன் ஒருவனை, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் அவனது ஜூனியர் மாணவன் கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவல் பரவியதும் பள்ளியை சுற்றி பெரும் போராட்டம் வெடித்தது. பாதிக்கப்பட்ட மாணவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனில்லாமல் நேற்று இரவு இறந்தார். கத்தியால் குத்தப்பட்ட மாணவரின் சமூகத்தை சேர்ந்தவர்கள், அவரது மரணச் செய்தியைக் கேட்டதும், அதிகாலையில் பள்ளியில் கூடினர். பலர் பள்ளி வளாகத்தை சூறையாடத்துவங்கினர்.

மன்னிப்பு

சம்பவத்திற்கு பள்ளி நிர்வாகத்தின் மீது புகார் அளித்துள்ள பெற்றோர் 

இந்த சம்பவம் மாணவரின் பெற்றோர், இந்து அமைப்புகள் மற்றும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) ஆர்வலர்கள் மத்தியில் பரவலான கோபத்தைத் தூண்டியது. போராட்டக்காரர்கள் பள்ளி வளாகத்தில் தாக்குதல் நடத்தினர், மேலும் பள்ளி ஊழியர்களையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட பள்ளியில் போலீசார் பலத்த படையை நிறுத்தியுள்ளனர். போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கத்தியால் குத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட 9 ஆம் வகுப்பு மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறார் சட்டங்களின் கீழ் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்கக் கோரி, பெற்றோர்களும் இந்து குழுக்களும் பள்ளி முதல்வர் மற்றும் நிர்வாகத்திற்கு எதிராக புகார்களை அளித்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.