LOADING...
உ.பி.யில் பயங்கரம்; ₹39 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக பெற்றோர், மனைவியை கொன்ற மகன் கைது
ரூ.39 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக பெற்றோர், மனைவியை கொன்ற மகன் கைது

உ.பி.யில் பயங்கரம்; ₹39 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக பெற்றோர், மனைவியை கொன்ற மகன் கைது

எழுதியவர் Sekar Chinnappan
Sep 29, 2025
08:05 pm

செய்தி முன்னோட்டம்

உத்தரப் பிரதேசத்தில் இன்சூரன்ஸ் தொகையாகக் கோடிக்கணக்கான ரூபாயைப் பெறுவதற்காகத் தனது பெற்றோர் மற்றும் மனைவியைக் கொலை செய்ததாகக் கூறப்படும் அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. விஷால் குமார் மற்றும் அவரது கூட்டாளியான சதீஷ் குமார் ஆகியோர், இழப்பீடு கோரி மனு அளித்த இன்சூரன்ஸ் நிறுவனங்களில் ஒன்றான நிவா பூபா அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். விஷால் குமார், தனது தந்தை முகேஷ் சிங்கால், தாய் பிரபா தேவி மற்றும் மனைவி ஆகியோரின் மரணங்களைச் சாலை விபத்துகளாகத் திட்டமிட்டு அரங்கேற்றியதாகப் காவல்துறை தெரிவித்தனர். விசாரணையில், சிங்கால் நிவா பூபா, டாடா ஏஐஜி, மேக்ஸ் லைஃப், ஆதித்யா பிர்லா மற்றும் ஹெச்டிஎஃப்சி எர்கோ உள்ளிட்டப் பல நிறுவனங்களில் இன்சூரன்ஸ் பாலிசிகளை எடுத்திருந்தது தெரிய வந்தது.

வருமானம்

ஆண்டு வருமானத்தை விட பல மடங்கு கூடுதல் இன்சூரன்ஸ்

சிங்காலின் ஆண்டு வருமானம் ₹12-15 லட்சம் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், மொத்த இன்சூரன்ஸ் தொகை சுமார் ₹39 கோடியாக இருந்தது. அதில் குமார் மட்டுமே நாமினியாக இருந்தார். மார்ச் 27, 2024 அன்று நடந்ததாகக் கூறப்படும் சிங்காலின் சாலை விபத்து தொடர்பான மருத்துவ ஆவணங்களை ஆய்வு செய்தபோது, அதிகாரிகள் சந்தேகம் அடைந்தனர். மரணம் ஏற்பட்ட நேரம் மற்றும் அதற்கான காரணம் ஆகியவற்றில் முரண்பாடுகள் இருந்தன. மேலும், குமார் இதற்கு முன்னதாக, 2017 ஆம் ஆண்டில் தனது தாயின் மரணத்திற்காகவும், மனைவியின் மரணத்திற்காகவும் முறையே ₹80 லட்சம் மற்றும் ₹30 லட்சம் பெற்றுள்ளதும், அந்த மரணங்களும் சாலை விபத்துகளாக அரங்கேற்றப்பட்டதும் விசாரணையில் கண்டறியப்பட்டது.