LOADING...
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்; பாலிவுட் துணை நடிகர் கைது
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்; பாலிவுட் துணை நடிகர் கைது

எழுதியவர் Venkatalakshmi V
Sep 30, 2025
02:18 pm

செய்தி முன்னோட்டம்

சென்னை விமான நிலையத்தில், ரூ.35 கோடி மதிப்புள்ள 3.5 கிலோ போதைப்பொருளை கடத்த முயன்றதாக கூறப்படும் வழக்கில் ஒரு பாலிவுட் துணை நடிகர், சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் புலனாய்வு துறையினர் பயணிகளிடம் சோதனை நடத்தினர். அப்போது, பாலிவுட்டில் வெளியான 'ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர்' திரைப்படத்தில் துணை நடிகராக நடித்த ஒருவரிடமும் சோதனை நடத்தப்பட்டது. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்படுவது இது மூன்றாவது முறையாகும்.

விவரங்கள்

சோதனை மற்றும் கைது விவரங்கள் 

சோதனையில் அவரது பெட்டியின் அடிப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பையில் இருந்த வெள்ளை நிறப் பவுடரை அதிகாரிகள் சோதனை செய்தபோது, அது போதைப்பொருள் என்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.35 கோடி எனக் கூறப்படுகிறது. இந்த நடிகர் கம்போடியாவிலிருந்து சிங்கப்பூர் வழியாக சென்னைக்கு வந்துள்ளார். போதைப்பொருள் கடத்தல் குறித்து அந்த நடிகரிடம் விசாரணை மேற்கொண்டபோது, தான் போதைப்பொருள் கடத்தவில்லை என்று அவர் மறுத்துள்ளார். கம்போடியாவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அந்தப் பெட்டியை கொடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், அந்த பெட்டியை பெற்றுக் கொள்வதற்காக சென்னையில் ஒருவர் வருவார் என்றும் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, அந்த துணை நடிகரை கைது செய்தனர் போலீசார்.