LOADING...

பாதுகாப்பு துறை: செய்தி

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த டிஆர்டிஓ கெஸ்ட் ஹவுஸ் மேலாளர் கைது

இந்திய பாதுகாப்பு துறைக்கு பெரும் அச்சுறுத்தலாகும் வகையில், பாகிஸ்தானின் ISIக்கு ரகசிய தகவல்களை வழங்கியதாகக் குற்றம்சாட்டப்பட்ட DRDO கெஸ்ட் ஹவுஸ் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

08 Aug 2025
இந்தியா

அமெரிக்க ஆயுத கொள்முதல் நிறுத்தப்படவில்லை; ஊடக அறிக்கைகளை நிராகரித்த பாதுகாப்புத்துறை வட்டாரங்கள்

அமெரிக்காவில் இருந்து ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வாங்குவதை நிறுத்தி வைப்பதாக கூறப்படும் கூற்றுக்களை இந்தியா மறுத்துள்ளது.

08 Aug 2025
இந்தியா

இந்தியாவின் பதிலடி ஆரம்பம்; அமெரிக்காவிலிருந்து மேற்கொள்ள திட்டமிட்ட பாதுகாப்பு கொள்முதல்கள் நிறுத்தம்; ராஜ்நாத் சிங் பயணம் ரத்து

அதிகரித்து வரும் வர்த்தக பதட்டங்களுக்கு பதிலளிக்கும் விதமாக, அமெரிக்காவிலிருந்து மேற்கொள்ள திட்டமிடப்பட்ட பாதுகாப்பு கொள்முதலை இந்தியா நிறுத்தி வைத்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சீனா-பாகிஸ்தான் இடையே அதிகரிக்கும் ஏஐ சார்ந்த பாதுகாப்பு ஒத்துழைப்பு; இந்தியாவிற்கு அச்சுறுத்தல்?

பிராந்திய ராணுவ கூட்டணிகள் குறித்த அதிகரித்து வரும் கவலைகளுக்கு மத்தியில், பாகிஸ்தானுடனான சீனாவின் ஆழமான பாதுகாப்பு ஒத்துழைப்பு, குறிப்பாக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையில் மேற்கொள்ளப்படும் ஒத்துழைப்பு, இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து ஆய்வுக்கு உட்பட்டுள்ளது.

மக்களவையில் Operation Sindoor மீதான விவாதத்தை தொடங்கி வைத்தார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதத்தை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்.

15 மாத தாமதத்திற்குப் பிறகு இந்திய ராணுவத்தில் இணையும் முதல் அப்பாச்சி AH-64E ஹெலிகாப்டர்

15 மாதங்களுக்கும் மேலான தாமதத்திற்குப் பிறகு, இந்திய ராணுவம் இறுதியாக ஜூலை 22 அன்று அதன் முதல் தொகுதி அப்பாச்சி AH-64E தாக்குதல் ஹெலிகாப்டர்களைப் பெற உள்ளது.

18 Jul 2025
கடற்படை

இந்தியாவின் முதல் உள்நாட்டு நீர்மூழ்கி உதவிக் கப்பல் ஐஎன்எஸ் நிஸ்டர் கடற்படையில் சேர்ப்பு

இந்திய கடற்படை ஜூலை 18, 2025 அன்று விசாகப்பட்டினத்தில் அதன் முதல் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு கட்டமைக்கப்பட்ட நீர்மூழ்கி உதவி கப்பலான ஐஎன்எஸ் நிஸ்டரை அறிமுகப்படுத்தியது.

சுதந்திர தினத்திற்கு முன்பு Made in India ஏகே-203 ரைபிள்கள் இந்திய ராணுவத்திற்கு வழங்கப்படும் என தகவல்

இந்திய ராணுவம் ஆகஸ்ட் 15க்கு முன் அடுத்த தொகுதி ஏகே-203 தாக்குதல் ரைபிள்களைப் பெற உள்ளது.

30 Jun 2025
இந்தியா

அமெரிக்காவின் GBU-57/A போல் நிலத்தடி கட்டமைப்புகளை அழிக்கும் பதுங்கு குழி ஏவுகணைகளை உருவாக்கும் இந்தியா

மூலோபாய பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாக, ஈரானின் ஃபோர்டோ அணுசக்தி நிலையத்தில் அமெரிக்கா சமீபத்தில் GBU-57/A மாசிவ் ஆர்ட்னன்ஸ் பெனட்ரேட்டர்களை பயன்படுத்தியதிலிருந்து குறிப்புகளை எடுத்துக்கொண்டு, மேம்பட்ட பதுங்கு குழி ஏவுகணைகளை உருவாக்குவதை இந்தியா துரிதப்படுத்தியுள்ளது.

R&AW உளவுத்துறையின் புதிய தலைவராக பராக் ஜெயின் இரண்டு ஆண்டு காலத்திற்கு நியமனம்

இந்தியாவின் வெளிநாட்டு புலனாய்வு அமைப்பான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவின் (R&AW) புதிய தலைவராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி பராக் ஜெயின், இரண்டு ஆண்டு காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

பாதுகாப்புத் தலைவர்(CDS) இப்போது 3 படைகளுக்கும் கூட்டு உத்தரவுகளை பிறப்பிக்க மத்திய அரசு அதிகாரம் தந்துள்ளது

ஒரு முக்கிய நடவடிக்கையாக, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மூன்று ஆயுதப் படைகளுக்கும் கூட்டு அறிவுறுத்தல்கள் மற்றும் உத்தரவுகளை பிறப்பிக்க பாதுகாப்புப் படைத் தலைவர் (CDS) மற்றும் இராணுவ விவகாரத் துறையின் செயலாளர் (DMA) ஆகியோருக்கு அதிகாரம் அளித்துள்ளார்.

20 Jun 2025
இஸ்ரோ

இஸ்ரோவின் SSLV உற்பத்தி செய்வதற்கான ஏலத்தில் தனியார் நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளி ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் வெற்றி

இந்தியாவின் விண்வெளித் துறைக்கு குறிப்பிடத்தக்க ஊக்கமளிக்கும் வகையில், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL), சிறிய செயற்கைக்கோள் ஏவுதள வாகனத்திற்கான (SSLV) தொழில்நுட்பத்தை இஸ்ரோவிடமிருந்து வாங்குகிறது.

19 Jun 2025
இந்தியா

பிரம்மோஸை 3 மடங்கு விஞ்சும் இந்தியாவின் புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணை!

ப்ராஜெக்ட் விஷ்ணுவின் கீழ் அடுத்த தலைமுறை கப்பல் ஏவுகணையை சோதிக்கும் தருவாயில் இந்தியா உள்ளது.

05 Jun 2025
டாடா

இந்தியாவில் ரஃபேல் போர் விமானங்களுக்கான ஃபியூசலேஜ்களை தயாரிக்க டசால்ட் மற்றும் டாடா ஒப்பந்தம்

இந்தியாவின் பாதுகாப்பு துறை உற்பத்திக்கு குறிப்பிடத்தக்க ஊக்கமளிக்கும் வகையில், டசால்ட் ஏவியேஷன் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் (TASL) உடன் இணைந்து ரஃபேல் போர் விமானங்களின் ஃபியூசலேஜ்களை இந்தியாவில் தயாரிக்கிறது.

சொன்ன நேரத்தில் எந்த திட்டமும் முடிவடைவதில்லை; தொழில்துறை மாநாட்டில் அதிருப்தியை வெளிப்படுத்திய விமானப்படை தளபதி

இந்தியாவின் முக்கிய பாதுகாப்பு கொள்முதல் திட்டங்களில் தொடர்ச்சியான தாமதங்கள் குறித்து விமானப்படைத் தளபதி ஏர் மார்ஷல் அமர் ப்ரீத் சிங் கடுமையான கவலைகளை வெளிப்படுத்தியுள்ளார்.

29 May 2025
இந்தியா

சூடு பிடிக்கும் #FundKaveriEngine பிரச்சாரம்; இந்தியாவின் உள்நாட்டு போர் ஜெட் என்ஜினின் தற்போதைய நிலை என்ன?

சமூக ஊடக பிரச்சாரமான #FundKaveriEngine பிரபலமடைந்து, இந்திய அரசாங்கம் உள்நாட்டு போர் ஜெட் என்ஜின் மேம்பாட்டிற்கான நிதியுதவிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் அவர்களாகவே இந்தியாவுடன் விரைவில் இணைவார்கள்; ராஜ்நாத் சிங் உறுதி

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) இந்தியாவுடன் விரைவில் இணையும் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை (மே 29) உறுதியளித்தார்.

28 May 2025
இந்தியா

முப்படைகளின் ஒத்துழைப்பை மேம்படுத்த புதிய வழிகாட்டுதல்கள் வெளியிட்டது மத்திய பாதுகாப்பு அமைச்சகம்

இந்திய ஆயுதப்படைகளிடையே அதிக ஒருங்கிணைப்பு மற்றும் செயல்பாட்டுத் திறனை நோக்கிய ஒரு முக்கிய படியாக, 2023 ஆம் ஆண்டு சேவைகளுக்கு இடையேயான அமைப்புகள் (கட்டளை, கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கம்) சட்டத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சகம் புதன்கிழமை (மே 28) முறையான வழிகாட்டுதல்களை வெளியிட்டது.

27 May 2025
இந்தியா

ஐந்தாம் தலைமுறை ஸ்டீல்த் போர் விமானம் AMCA'வை உள்நாட்டில் தயாரிக்க மத்திய அரசு ஒப்புதல்

இந்தியா தனது உள்நாட்டு ஐந்தாம் தலைமுறை போர் விமானமான மேம்பட்ட நடுத்தர போர் விமானத்தை (AMCA) உருவாக்குவதற்கு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது.

15 May 2025
துருக்கி

துருக்கிக்கு 304 மில்லியன் டாலர் ஏவுகணை விற்பனை செய்ய ஓகே சொன்னது அமெரிக்கா

இரண்டு நேட்டோ நட்பு நாடுகளுக்கு இடையே வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், துருக்கிக்கு 304 மில்லியன் டாலர் ஏவுகணை விற்பனைக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.

12 May 2025
ரஷ்யா

எஸ் 500 வான் பாதுகாப்பு அமைப்பை இந்தியாவுடன் கூட்டாக தயாரிக்க ரஷ்யா முன்மொழிவு என தகவல்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு, அடுத்த தலைமுறை எஸ் 500 வான் பாதுகாப்பு அமைப்பை இந்தியாவுடன் கூட்டாக உற்பத்தி செய்வதற்கான புரபோசலை ரஷ்யா முன்மொழிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய பத்திரிகையாளர்களை குறிவைக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்புகள்; மத்திய பாதுகாப்புத் துறை அலெர்ட்

பாகிஸ்தானிய உளவுத்துறை செயல்பாட்டாளர்களால் (PIOs) இயக்கப்படுவதாக நம்பப்படும் 7340921702 என்ற வாட்ஸ்அப் எண்ணிலிருந்து வரும் சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் மற்றும் செய்திகள் குறித்து இந்தியர்களுக்கு, குறிப்பாக பத்திரிகையாளர்களுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒரு முக்கியமான பாதுகாப்பு ஆலோசனையை வெளியிட்டுள்ளது.

11 May 2025
இந்தியா

லக்னோவில் பிரம்மோஸ் ஏவுகணை தொழிற்சாலையை ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்; ஆண்டுக்கு 100 ஏவுகணைகள் தயாரிக்கும் வசதி

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்கு மத்தியில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை (மே 11) லக்னோவில் பிரம்மோஸ் ஏவுகணை உற்பத்தி தொழிற்சாலையை திறந்து வைத்தார்.

10 May 2025
இந்தியா

மகிழ்ச்சியான நாள்; இந்திய வான்வெளியை பாதுகாப்புக்கும் ஆகாஷ் ஏவுகணை அமைப்பை உருவாக்கிய விஞ்ஞானி நெகிழ்ச்சி

வியாழக்கிழமை (மே 8) இரவு பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதலின் போது மேற்கு இந்தியாவைப் பாதுகாப்பதில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஆகாஷ் ஏவுகணை அமைப்பு முக்கிய பங்கு வகித்து, ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வெற்றிகரமாக இடைமறித்து அழித்தது.

09 May 2025
உள்துறை

அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்துமாறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு விதிகளின் கீழ் அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்துமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு உள்துறை அமைச்சகம் (MHA) கடிதம் எழுதியுள்ளது.

2028 வரை டெரிட்டோரியல் ஆர்மியின் 14 பட்டாலியன்களை நிலைநிறுத்த மத்திய அரசு உத்தரவு

இந்தியாவின் பாதுகாப்புத் தயார்நிலையை வலுப்படுத்தும் நோக்கில், வடக்கு, மேற்கு மற்றும் கிழக்கு கட்டளைகளில் உள்ள டெரிட்டோரியல் ஆர்மி எனப்படும் பிராந்திய ராணுவ காலாட்படையின் 32 பட்டாலியன்களில் 14 ஐ 2028 வரை நிலைநிறுத்த பாதுகாப்பு அமைச்சகம் அங்கீகாரம் அளித்துள்ளது.

ராணுவ நடவடிக்கைகளை லைவ் கவரேஜ் செய்ய வேண்டாம் என மத்திய அரசு அறிவுரை

இந்திய ராணுவ நடவடிக்கைகள் மற்றும் துருப்புக்களின் நடமாட்டங்களை நேரடி ஒளிபரப்பு செய்வதிலோ அல்லது லைவ் அறிக்கைகளை வெளியிடுவதிலோ ஈடுபட வேண்டாம் என வலியுறுத்தி, அனைத்து ஊடக நிறுவனங்கள், டிஜிட்டல் தளங்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை (மே 9) ஒரு முக்கியமான ஆலோசனையை வெளியிட்டது.

08 May 2025
இந்தியா

பாகிஸ்தான் நிறுத்தாதவரை பதிலடி தாக்குதல் தொடரும்; மத்திய அரசு உறுதி

இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் மேற்கொள்ளும் எந்தவொரு ஆக்கிரமிப்பிற்கும் எதிராக கடுமையாக இந்தியா பதிலடி கொடுக்கும் என்று வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை (மே 8) மீண்டும் உறுதிப்படுத்தியது.

ஆபரேஷன் சிந்தூரில் பயன்படுத்தப்பட்ட உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தற்கொலை ட்ரோன்கள்; ஸ்கைஸ்ட்ரைக்கர்ஸின் சிறப்பம்சங்கள் என்னென்ன?

இந்தியாவின் பாதுகாப்பு தொழில்நுட்பத்திற்கான குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக, ஸ்கைஸ்ட்ரைக்கர்ஸ் என்று அழைக்கப்படும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தற்கொலை ட்ரோன்கள், எல்லையைத் தாண்டி இந்திய ராணுவத்தின் சமீபத்திய உயர்-துல்லிய பயங்கரவாத எதிர்ப்புப் பணியான ஆபரேஷன் சிந்தூரில் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்ட தகவல் வெளியாகி உள்ளது.

ரஷ்யாவின் புதிய இக்லா-எஸ் ஏவுகணைகளை வாங்கியது இந்திய ராணுவம்

சமீபத்திய பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுடனான அதிகரித்த பதட்டங்களுக்கு மத்தியில் எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்தும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, இந்திய ராணுவம் ரஷ்ய தயாரிப்பான இக்லா-எஸ் மிக குறுகிய தூர வான் பாதுகாப்பு அமைப்பு (VSHORADS) ஏவுகணைகளை வாங்கியுள்ளது.

04 May 2025
டிஆர்டிஓ

இந்தியாவின் கண்காணிப்பு திறன்களை மேம்படுத்தும் புதிய தொழில்நுட்ப சோதனை வெற்றி; டிஆர்டிஓ அறிவிப்பு

இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு உள்கட்டமைப்பிற்கான ஒரு பெரிய திருப்புமுனையாக, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) அதன் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஸ்ட்ரேட்டோஸ்பியர் வான்வழி தளத்தின் முதல் விமான சோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளது.

01 May 2025
அமெரிக்கா

பஹல்காம் பதற்றங்களுக்கு மத்தியில் இந்தியாவிற்கு $131 மில்லியன் மதிப்பிலான ராணுவ உபகரணங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல்

இந்தியாவின் பாதுகாப்புத் திறன்களுக்கு ஒரு பெரிய ஊக்கமாக, முக்கியமான ராணுவ வன்பொருள் மற்றும் தளவாட ஆதரவை வழங்குவதற்காக அமெரிக்கா 131 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள வெளிநாட்டு ராணுவ விற்பனைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

முற்றுகிறதா போர் பதற்றம்? பிரதமர் மோடியை சந்திக்கவுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்திக்கிறார்.

27 Apr 2025
பஹல்காம்

பாதுகாப்புப் படைகளின் தலைவர் ஜெனரல் அனில் சவுகான் பாதுகாப்பு அமைச்சருடன் சந்திப்பு

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து முக்கிய இராணுவ முடிவுகள் குறித்து விவாதிக்க முப்படைகளின் பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் அனில் சவுகான் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 27) அன்று புதுடெல்லியில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கைச் சந்தித்தார்.

20 Apr 2025
கடற்படை

₹63,000 கோடிக்கு 26 ரஃபேல் போர் விமானங்களை வாங்குகிறது இந்திய கடற்படை

இந்தியாவும் பிரான்சும் ஏப்ரல் 28 அன்று இந்திய கடற்படைக்கு 26 ரஃபேல்-கடற்படை போர் விமானங்களை வாங்குவது உட்பட மிகப்பெரிய ரஃபேல் ஒப்பந்தத்தை இறுதி செய்ய உள்ளன.

13 Apr 2025
இந்தியா

இனி ட்ரோனை வைத்து எந்த நாடும் வாலாட்ட முடியாது; புதிய லேசர் ஆயுதத்தை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா

இந்தியா முதன்முறையாக ஒரு ட்ரோனை சுட்டு வீழ்த்துவதற்கு அதிக சக்தி வாய்ந்த லேசர் அடிப்படையிலான இயக்க ஆற்றலைப் பயன்படுத்தி ஸ்டார் வார்ஸ் படத்தில் வருவது போன்ற ஒரு எதிர்கால ஆயுதத்தை வெற்றிகரமாக சோதித்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு கொள்முதல்; 146 இலகுரக பிரச்சந்த் ஹெலிகாப்டர்களை வாங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஒரு மைல்கல் முடிவாக, இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய பாதுகாப்பு கொள்முதலுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

தேஜாஸ் Mk-1A தயாரிப்பில் ஏற்படும் தாமதங்களை ஆய்வு செய்ய பாதுகாப்பு அமைச்சகம் குழு அமைப்பு

இந்திய விமானப்படை தலைமை தளபதி அமர் ப்ரீத் சிங் எழுப்பிய கவலைகளைத் தொடர்ந்து, இலகுரக போர் விமானம் தேஜாஸ் Mk-1A இன் உற்பத்தி மற்றும் சேர்க்கையில் ஏற்படும் தாமதங்களை ஆராய பாதுகாப்பு அமைச்சகம் ஒரு உயர் மட்டக் குழுவை அமைத்துள்ளது.

01 Feb 2025
பட்ஜெட் 2025

பட்ஜெட் 2025: பாதுகாப்புத்துறைக்கு ₹6.81 லட்சம் கோடி ஒதுக்கீடு; முழுமையான விபரம்

தொடர்ந்து எட்டாவது பட்ஜெட் உரையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2025-26ஆம் நிதியாண்டில் பாதுகாப்புத் துறைக்கு ₹6.81 லட்சம் கோடி ஒதுக்கப்படும் என அறிவித்துள்ளார்.

28 Jan 2025
பட்ஜெட் 2025

பட்ஜெட் 2025: கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் பாதுகாப்புத்துறைக்கான பட்ஜெட் 2.5 மடங்கு அதிகரிப்பு

2024-25 நிதியாண்டிற்கான இந்தியாவின் பாதுகாப்பு பட்ஜெட் ₹6.22 லட்சம் கோடியாக இருந்தது. இது 2014 இல் ₹2.53 லட்சம் கோடியிலிருந்து குறிப்பிடத்தக்க உயர்வைக் குறிக்கிறது.

நேட்டோ நாடுகளுக்கு கிடுக்கிப்பிடி; பாதுகாப்பு பட்ஜெட்டை ஜிடிபியில் 5% ஆக அதிகரிக்க டொனால்ட் டிரம்ப் அறிவுறுத்தல்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், டாவோஸில் நடந்த உலகப் பொருளாதார மன்றத்தில் உரையாற்றுகையில், நேட்டோ நாடுகளின் பாதுகாப்புச் செலவீனத்தை ஜிடிபியில் 5%ஆக அதிகரிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

இந்திய ராணுவத்தின் சம்பவ் ஸ்மார்ட்போன்கள்; சீனாவுடனான எல்லைப் பேச்சுவார்த்தையின்போது இந்தியா செய்த சம்பவம்

2024 அக்டோபரில் சீனாவுடனான எல்லைப் பேச்சுவார்த்தையின் போது, ​​பாதுகாப்பான தகவல்தொடர்புகளை மேம்படுத்துவதற்கான ஒரு மூலோபாய நடவடிக்கையில், இந்திய ராணுவம் அதன் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட சம்பவ் (SAMBHAV) ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தியது.

சிஐஎஸ்எஃப் விரிவாக்கத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்; புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கம்

மத்திய உள்துறை அமைச்சகம் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையின் (சிஐஎஸ்எஃப்) குறிப்பிடத்தக்க விரிவாக்கத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

முந்தைய
அடுத்தது