LOADING...
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்பை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா; ராஜ்நாத் சிங் அறிவிப்பு
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்பை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்பை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா; ராஜ்நாத் சிங் அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Aug 24, 2025
11:02 am

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் திறனுக்கு மேலும் ஒரு பெரிய உந்துதலாக, ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பு (IADWS) வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 24) இந்த மைல்கல் முன்னேற்றத்தை அறிவித்தார். ஒடிசா கடற்கரையில் சனிக்கிழமை பிற்பகல் இந்தச் சோதனை நடத்தப்பட்டதாக அவர் உறுதிப்படுத்தினார். IADWS என்பது, எதிரிகளின் பல்வேறு வான்வழி அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (டிஆர்டிஓ) முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட ஒரு பல அடுக்கு அமைப்பாகும். இறக்குமதி செய்யப்பட்ட அமைப்புகளைப் போலல்லாமல், இது மூலோபாய சொத்துக்களைப் பாதுகாக்க பல உள்நாட்டு தொழில்நுட்பங்களை ஒருங்கிணைக்கிறது.

முக்கிய அம்சங்கள்

பாதுகாப்பு அமைப்பின் முக்கிய அம்சங்கள்

இந்த அமைப்பில் மூன்று முக்கிய கூறுகள் உள்ளன: 1.விரைவு எதிர்வினை தரையில் இருந்து வான் பாயும் ஏவுகணை (QRSAM) 2. மேம்பட்ட மிகக் குறுகிய தூர வான் பாதுகாப்பு அமைப்பு (VSHORADS) 3. உயர் சக்தி கொண்ட லேசர் அடிப்படையிலான இயக்கப்பட்ட ஆற்றல் ஆயுதம் (DEW) இந்த வெற்றி குறித்து டிஆர்டிஓ மற்றும் ஆயுதப் படைகளுக்கு வாழ்த்து தெரிவித்த ராஜ்நாத் சிங், இந்தச் சோதனை நாட்டின் பல அடுக்கு வான் பாதுகாப்பு திறனை நிலைநிறுத்தி, முக்கியமான தளங்களுக்கான பாதுகாப்புப் பகுதியை கணிசமாக வலுப்படுத்தும் என்று கூறினார். முன்னதாக, அணுசக்தி திறன் கொண்ட அக்னி-5 இடைநிலை தூர பாலிஸ்டிக் ஏவுகணை ஆகஸ்ட் 20 அன்று ஒடிசாவின் சாந்திபூரில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.