LOADING...
பட்ஜெட் 2026: பாதுகாப்புத் துறைக்கு ரூ.7.85 லட்சம் கோடி ஒதுக்கீடு; முந்தைய ஆண்டை விட 15% உயர்வு
பாதுகாப்புத் துறைக்கு ரூ. 7.85 லட்சம் கோடி ஒதுக்கீடு

பட்ஜெட் 2026: பாதுகாப்புத் துறைக்கு ரூ.7.85 லட்சம் கோடி ஒதுக்கீடு; முந்தைய ஆண்டை விட 15% உயர்வு

எழுதியவர் Sekar Chinnappan
Feb 01, 2026
02:34 pm

செய்தி முன்னோட்டம்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்ரவரி 1, 2026) தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில், நாட்டின் பாதுகாப்புத் துறைக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் ரூ.7.85 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் (2025-26) ஒதுக்கீடான ரூ.6.81 லட்சம் கோடியை விட 15 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்த ஒதுக்கீட்டில், ஆயுதப் படைகளை நவீனமயமாக்குவதற்காக மட்டும் ரூ.2.19 லட்சம் கோடி தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது.

நிதி

தொழில்நுட்ப மேம்பாடு

ரஃபேல் போர் விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் நவீன ஆளில்லா விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தங்களுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும். செயற்கை நுண்ணறிவு (ஏஐ), சைபர் பாதுகாப்பு மற்றும் விண்வெளி சார்ந்த பாதுகாப்புத் தொழில்நுட்பங்களை மேம்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும். ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய மூன்றின் திறனையும் சமமாக மேம்படுத்த இந்த நிதி உதவும்.

ஆத்மநிர்பர் பாரத்

ஆத்மநிர்பர் பாரத் மற்றும் உள்நாட்டு உற்பத்தி

இறக்குமதியைக் குறைத்து, உள்நாட்டிலேயே ஆயுதங்களைத் தயாரிக்கும் சுயசார்பு இந்தியா திட்டத்திற்கு இந்த பட்ஜெட் பெரும் உந்துதலை அளித்துள்ளது: நவீனமயமாக்கல் நிதியில் பெரும்பகுதி உள்நாட்டு பாதுகாப்பு நிறுவனங்களிடமிருந்து ஆயுதங்களை வாங்கவே பயன்படுத்தப்படும். பாதுகாப்புத் துறை சார்ந்த ஆராய்ச்சிகளுக்காக (டிஆர்டிஓ போன்ற நிறுவனங்களுக்கு) நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பதன் மூலம் பாதுகாப்புத் தளவாடத் தொழிற்சாலைகளில் பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும்.

Advertisement

ஒப்பீடு

உலக நாடுகளுடன் ஒரு ஒப்பீடு

இந்த பட்ஜெட் உயர்வு மூலம், உலகளவில் பாதுகாப்புத் துறைக்கு அதிக நிதி செலவிடும் நாடுகளில் ஒன்றாக இந்தியா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. அமெரிக்கா சுமார் ரூ.82 லட்சம் கோடிகளையும், சீனா சுமார் ரூ.22 லட்சம் கோடிகளையும் பாதுகாப்புக்காகச் செலவிடுகின்றன. இந்தியா தனது ஜிடிபியில் சுமார் 2 சதவீதத்தைப் பாதுகாப்புக்காகச் செலவிடுகிறது, இது அண்டை நாடுகளின் அச்சுறுத்தல்களைச் சமாளிக்க அவசியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

Advertisement