LOADING...
டெல்லி குடியரசு தின அணிவகுப்பை நீங்களும் நேரில் காணலாம்; உடனே இதை பண்ணுங்க
டெல்லி குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்க டிக்கெட் முன்பதிவு செய்யும் முறை

டெல்லி குடியரசு தின அணிவகுப்பை நீங்களும் நேரில் காணலாம்; உடனே இதை பண்ணுங்க

எழுதியவர் Sekar Chinnappan
Jan 04, 2026
08:44 am

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் 77 வது குடியரசு தின விழாவையொட்டி, டெல்லியில் நடைபெறும் பிரம்மாண்ட அணிவகுப்பைப் பார்வையிடுவதற்கான டிக்கெட் விற்பனை நாளை (ஜனவரி 5) முதல் தொடங்குகிறது. இது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, டிக்கெட்டுகள் மூன்று முக்கிய நிகழ்ச்சிகளுக்காக விற்பனை செய்யப்படுகின்றன. அதன்படி, குடியரசு தின அணிவகுப்புக்கு (ஜனவரி 26) ரூ.20 மற்றும் ரூ.100, முழு ஆடை ஒத்திகைக்கு (ஜனவரி 28) ரூ.20 மற்றும் பாசறை திரும்புதல் விழாவுக்கு (ஜனவரி 29) ரூ.100 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவு

ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்வது எப்படி?

வரிசையில் நிற்காமல் நாடு முழுவதும் உள்ள எவரும் தங்களது மொபைல் அல்லது கணினி மூலம் எளிதாக பின்வரும் முறையை பின்பற்றி டிக்கெட் பெறலாம். பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ஆமந்தரன் (www.aamantran.mod.gov.in) வலைதளத்திற்குச் செல்லவும் உங்கள் பெயர், முகவரி மற்றும் ஆதார் போன்ற அடையாளச் சான்றுகளைப் பதிவேற்றவும். ஒரு மொபைல் எண்ணைக் கொண்டு அதிகபட்சமாக 10 டிக்கெட்டுகள் வரை பதிவு செய்ய முடியும். பணம் செலுத்திய பிறகு டிக்கெட்டை டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

நேரடி விற்பனை

நேரடி விற்பனை நிலையங்கள்

ஆன்லைன் தவிர டெல்லியில் உள்ளவர்கள் ஜனவரி 5 முதல் 14 வரை (காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை) குறிப்பிட்ட இடங்களில் அடையாளச் சான்றைக் காட்டி டிக்கெட் வாங்கலாம். இதன்படி, சேனா பவன் (கேட் 5), சாஸ்திரி பவன் (கேட் 3), ஜந்தர் மந்தர், நாடாளுமன்ற இல்ல வரவேற்பு மையம், ராஜீவ் சௌக் மற்றும் காஷ்மீரி கேட் மெட்ரோ நிலையங்களில் டிக்கெட்டுகளைப் பெறலாம். டிக்கெட்டுகள் தீரும் வரை மட்டுமே விற்பனை நடைபெறும் என்பதால் முன்கூட்டியே பதிவு செய்வது நல்லது. நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வரும்போது, டிக்கெட் எடுக்கும்போது பயன்படுத்திய அசல் அடையாள அட்டையை கண்டிப்பாகக் கொண்டு வர வேண்டும்.

Advertisement