விமானப்படை: செய்தி
துபாய் விமானக் கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜாஸ் போர் விமானம் விபத்து; விமானி உயிரிழப்பு
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற துபாய் விமானக் கண்காட்சி 2025 இல் சாகசப் பயிற்சியில் ஈடுபட்ட இந்திய விமானப்படையின் தேஜாஸ் போர் விமானம் விபத்துக்குள்ளானது.
தேஜஸ் விமானங்களுக்காக HAL-க்கு GE ஏரோஸ்பேஸ் 113 என்ஜின்களை வழங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது
இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனம், தனது தேஜஸ் இலகுரக போர் விமானத் திட்டத்திற்காக (LCA), ஜெனரல் எலக்ட்ரிக் (GE) ஏரோஸ்பேஸ் நிறுவனத்திடமிருந்து 113 F404-GE-IN20 ஜெட் என்ஜின்களைக் கொள்முதல் செய்வதற்கான முக்கிய ஒப்பந்தத்தை வெள்ளிக்கிழமை (நவம்பர் 7) இறுதி செய்தது.
'பூர்வி பிரசாந்த் பிரஹார்': சீனா எல்லைக்கு அருகில் இந்தியாவின் முதல் முப்படை பயிற்சி
இந்திய ஆயுதப்படைகள் நவம்பர் 11 முதல் 15 வரை அருணாச்சல பிரதேசத்தில் நடைபெறும் "பூர்வி பிரசாந்த் பிரஹார்" என்ற பெரிய முப்படை இராணுவ பயிற்சிக்காக தயாராகி வருகின்றன.
சீனா எல்லைப் பகுதியில் தயார்நிலை: வடகிழக்கு மாநிலங்களில் இந்திய விமானப்படைப் பயிற்சி - NOTAM அறிவிப்பு வெளியீடு
இந்திய விமானப்படை (IAF), சீனா, பூடான், மியான்மர் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளுடன் எல்லையைப் பகிரும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த வடகிழக்கு மாநிலங்கள் முழுவதும் ஒரு பெரிய அளவிலானப் பயிற்சிக்காக NOTAM (Notice to Airmen) அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி திரௌபதி முர்மு ரஃபேல் போர் விமானத்தில் பறந்தார்
ஹரியானாவின் அம்பாலா விமானப்படை தளத்திலிருந்து புதன்கிழமை ரஃபேல் போர் விமானத்தில் ஜனாதிபதி திரௌபதி முர்மு புறப்பட்டார்.
NOTAM வெளியீடு; இந்தியாவின் மேற்கு எல்லையில் பிரம்மாண்ட முப்படை ராணுவப் பயிற்சியைத் தொடங்குகிறது இந்தியா
இந்தியா, ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை ஆகிய முப்படைகளின் கூட்டுடன், ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில் அக்டோபர் 30 முதல் நவம்பர் 10 வரை ஒரு பெரிய அளவிலான முப்படை ராணுவப் பயிற்சியை நடத்தவுள்ளது.
'ஆபரேஷன் சிந்தூர்' ஹீரோக்கள்: வீர் சக்ரா விருது பெற்ற 6 ராணுவ வீரர்கள் யார்?
இந்திய அரசு, இந்திய ராணுவம் மற்றும் இந்திய விமானப்படையை சேர்ந்த ஆறு அதிகாரிகளுக்கு, இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த போர்க்கால வீரதீர விருதான வீர் சக்ராவை வழங்கியுள்ளது.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் எம்கே1ஏ போர் விமானம் வெற்றிகரமான முதல் விமானப் பயணத்தை நிறைவு செய்தது
பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) தயாரித்த முதல் இலகுரக போர் விமானமான (எல்சிஏ) தேஜஸ் எம்கே1ஏ, நாசிக்கில் தனது முதல் பயணத்தை வெற்றிகரமாக முடித்தது.
சீனாவை விஞ்சியது; உலகின் சக்தி வாய்ந்த விமானப்படைகளில் இந்தியாவிற்கு மூன்றாவது இடம்
சமீபத்தில் வெளியிடப்பட்ட நவீன ராணுவ விமானங்களுக்கான உலக அடைவு (WDMMA) தரவரிசையின்படி, இந்தியா உலகிலேயே மூன்றாவது பெரிய வான்சக்தியாக உயர்ந்து, சீனாவை விஞ்சியுள்ளது.
இந்தியா-ரஷ்யா கலாச்சார உறவுகளில் புதிய மைல்கல்; டெல்லியிலிருந்து அனுப்பிய புத்தரின் புனிதச் சின்னங்கள் கல்மியாவை அடைந்தது
இந்தியா-ரஷ்யா உறவுகளில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக, புத்தரின் புனிதச் சின்னங்கள் ரஷ்யாவின் கல்மியா குடியரசின் தலைநகரான எலிஸ்டாவை சென்றடைந்துள்ளன.
Trending: கிடைக்கிற கேப்-ல எல்லாம் பாகிஸ்தானை வறுத்தெடுக்கும் IAF இப்போ குடுத்தது செம ட்விஸ்ட்!
இந்திய விமானப்படை தினத்தன்று பரிமாறப்பட்ட மெனுவில் ராவல்பிண்டி சிக்கன் டிக்கா மசாலா, போலாரி பனீர் மேத்தி மலாய் மற்றும் பாலகோட் டிராமிசு ஆகியவை இடம்பெற்றன.
ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானின் F-16, J-17 ஜெட் விமானங்கள் அழிப்பு; இந்திய விமானப்படை தளபதி தகவல்
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத உள்கட்டமைப்பை இலக்காகக் கொண்டு மே மாதம் நடத்தப்பட்ட தீவிரமான நான்கு நாள் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் பின்னர், விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி.சிங் முக்கியத் தகவல்களைத் தெரிவித்தார்.
97 தேஜாஸ் மார்க்-1ஏ ஜெட் விமானங்களுக்கு ₹62,370 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் அரசு கையெழுத்திட்டுள்ளது
97 தேஜாஸ் மார்க்-1ஏ போர் விமானங்களை வாங்குவதற்காக, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்துடன் ₹62,370 கோடி ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது.
60 வருட கால சேவைக்கு பின்னர் மிக்-21 போர் விமானங்கள் நாளை ஓய்வு பெறுகின்றன; அதன் சிறப்பம்சங்கள்
இந்திய விமானப்படையின் முதுகெலும்பாக 60 வருடங்களுக்கும் மேலாக திகழ்ந்த புகழ்பெற்ற ரஷ்ய தயாரிப்பான மிக்-21 (MiG-21) போர் விமானங்கள், இறுதியாக நாளை (செப்டம்பர் 26) இந்திய விமானப்படையிலிருந்து ஓய்வு பெறுகின்றன.
பாகிஸ்தான் விமானப்படை தாக்குதலில் கைபர் பக்துன்க்வா கிராமத்தில் 30 பொதுமக்கள் பலி
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பாகிஸ்தான் விமானப்படை நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது 30 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய விமானப்படைக்கு மேக் இன் இந்தியா மூலம் 114 புதிய ரஃபேல் ஜெட்கள் வாங்க திட்டம்
இந்திய விமானப்படையின் (IAF) பலத்தை அதிகரிப்பதற்காக, 114 புதிய ரஃபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்ய, பாதுகாப்பு அமைச்சகத்திடம் ஒரு முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
50க்கும் குறைவான ஆயுதங்கள்; ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பான புதிய தகவலை வெளியிட்ட இந்திய விமானப்படை
கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது மே மாதம் இந்தியா நடத்திய ராணுவ நடவடிக்கை குறித்த புதிய தகவல்களை இந்திய விமானப்படையின் (IAF) துணைத் தளபதி, ஏர் மார்ஷல் நர்மதேஸ்வர் திவாரி வெளியிட்டுள்ளார்.
பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களில் தாக்குதல் நடத்திய இந்திய விமானப்படை அதிகாரிகளுக்கு வீர் சக்ரா விருது
ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிப்பதில் முக்கிய பங்கு வகித்த போர் விமானிகள் உட்பட ஒன்பது இந்திய விமானப்படை அதிகாரிகளுக்கு, நாட்டின் மூன்றாவது மிக உயர்ந்த போர்க்கால வீரதீர விருதான வீர் சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது.
KBC 17 சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சி: அமிதாப் பச்சன் உடன் ஹாட் சீட்டில் 'ஆபரேஷன் சிந்தூர்' வீராங்கனைகள்
'கோன் பனேகா க்ரோர்பதி' (KBC) 17வது சீசனை தொகுத்து வழங்க நடிகர் அமிதாப் பச்சன் மீண்டும் தொகுப்பாளராக களமிறங்கியுள்ளார்.
'ஆபரேஷன் சிந்தூர்' திட்டத்தின் முக்கிய வெற்றிகளை பற்றி இந்திய விமானப்படைத் தளபதி விளக்கம்
பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு இராணுவ நடவடிக்கையான "ஆபரேஷன் சிந்தூர்" பற்றிய முக்கிய விவரங்களை விமானப்படைத் தளபதி அமர் ப்ரீத் சிங் வெளியிட்டுள்ளார்.
'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் போது 5 பாகிஸ்தான் ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன: IAF தலைவர்
'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் போது ஐந்து பாகிஸ்தானிய போர் விமானங்களும் மற்றொரு பெரிய விமானமும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்திய விமானப்படை (IAF) தலைமை விமானப்படைத் தளபதி மார்ஷல் ஏ.பி. சிங் தெரிவித்துள்ளார்.
ஆபரேஷன் சிந்தூரின் போது விமானப்படையின் கைகளை அரசு கட்டிப்போட்டது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
பிரதமர் நரேந்திர மோடியின் பிம்பத்தைப் பாதுகாக்க பாகிஸ்தானின் இராணுவ உள்கட்டமைப்பைத் தாக்க இந்தியா தயங்குவதாகக் கூறி, ஆபரேஷன் சிந்தூரை கையாண்டதற்காக அரசாங்கத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.
திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த UK-வின் போர் விமானத்திற்கு பார்க்கிங் சார்ஜ் எவ்வளவு?
ஐந்து வாரங்களுக்கும் மேலாக கேரளாவில் சிக்கித் தவித்த பிரிட்டிஷ் ராயல் கடற்படையின் F-35B லைட்னிங் II ஸ்டெல்த் போர் விமானம், இறுதியாக நாட்டை விட்டு புறப்பட்டது.
ஒரு வழியாக திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இங்கிலாந்தின் F-35B போர் விமானம்
ஜூன் 14 அன்று திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஐக்கிய இராச்சியத்தின் F-35B போர் விமானம், வெற்றிகரமான பழுதுபார்ப்புகளுக்குப் பிறகு இறுதியாக புறப்பட்டது.
ஜூலை 23 முதல் ராஜஸ்தானில் இந்திய விமானப்படை ஒத்திகை; NOTAM அறிவிப்பு வெளியீடு
இந்திய விமானப்படை (IAF) ஜூலை 23 முதல் ஜூலை 25 வரை ராஜஸ்தானில் ஒரு பெரிய அளவிலான ராணுவ ஒத்திகையை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
டாக்கா பள்ளி மீது மோதிய வங்கதேச விமானப்படை ஜெட் விமானம்; குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டனர்
டாக்காவின் உத்தரா பகுதியில் உள்ள மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரி மீது திங்கள்கிழமை F-7 BGI என அடையாளம் காணப்பட்ட பங்களாதேஷ் விமானப்படை பயிற்சி விமானம் மோதியது.
திபெத் எல்லையில் கட்டப்பட்டுள்ள இந்தியாவின் மிக உயரமான விமான நிலையம் அக்டோபருக்குள் செயல்பாட்டுக்கு வரும் என தகவல்
கிழக்கு லடாக்கில் திபெத் எல்லையில் உள்ள முத்-நியோமாவில் உள்ள இந்தியாவின் மிக உயரமான விமான நிலையம் அக்டோபர் மாதத்திற்குள் முழுமையாக செயல்பாட்டுக்கு வர உள்ளது.
விமானப்படை தொடர்புடைய விமான நிலையங்களில் ஜன்னல் ஷேட் விதியை நீக்கியது DGCA; புகைப்படம் எடுப்பதற்கான தடை நீட்டிப்பு
இந்திய விமானப்படை கூட்டுப் பயனர் விமான நிலையங்களில் (JUAs) சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) அதன் விதிமுறைகளைத் திருத்தியுள்ளது.
விண்வெளியில் இருந்து பூமிக்கு சுபன்ஷு சுக்லாவின் முதல் அழைப்பு!
இந்திய விமானப்படை விமானியாக இருந்து விண்வெளி வீரராக மாறிய குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லா, விண்வெளியில் இருந்து தனது முதல் தனிப்பட்ட செய்தியைப் பகிர்ந்துள்ளார்.
பாதுகாப்புத் தலைவர்(CDS) இப்போது 3 படைகளுக்கும் கூட்டு உத்தரவுகளை பிறப்பிக்க மத்திய அரசு அதிகாரம் தந்துள்ளது
ஒரு முக்கிய நடவடிக்கையாக, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மூன்று ஆயுதப் படைகளுக்கும் கூட்டு அறிவுறுத்தல்கள் மற்றும் உத்தரவுகளை பிறப்பிக்க பாதுகாப்புப் படைத் தலைவர் (CDS) மற்றும் இராணுவ விவகாரத் துறையின் செயலாளர் (DMA) ஆகியோருக்கு அதிகாரம் அளித்துள்ளார்.
யூரி காக்ரின் முதல் சுபன்ஷு சுக்லா வரை விண்வெளி பயணத்திற்கு எதற்காக போர் விமானிகள் தேர்வு செய்யப்படுகிறார்கள்?
இந்திய விமானப்படையின் குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லா, குழுவினருடன் இன்று Axiom-4 மிஷன் மூலம் விண்வெளிக்கு பயணப்பட இருந்தார்.
சொன்ன நேரத்தில் எந்த திட்டமும் முடிவடைவதில்லை; தொழில்துறை மாநாட்டில் அதிருப்தியை வெளிப்படுத்திய விமானப்படை தளபதி
இந்தியாவின் முக்கிய பாதுகாப்பு கொள்முதல் திட்டங்களில் தொடர்ச்சியான தாமதங்கள் குறித்து விமானப்படைத் தளபதி ஏர் மார்ஷல் அமர் ப்ரீத் சிங் கடுமையான கவலைகளை வெளிப்படுத்தியுள்ளார்.
ஐந்தாம் தலைமுறை ஸ்டீல்த் போர் விமானம் AMCA'வை உள்நாட்டில் தயாரிக்க மத்திய அரசு ஒப்புதல்
இந்தியா தனது உள்நாட்டு ஐந்தாம் தலைமுறை போர் விமானமான மேம்பட்ட நடுத்தர போர் விமானத்தை (AMCA) உருவாக்குவதற்கு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது.
குஜராத்தில் BSF, IAF தகவல்களை பாகிஸ்தானுக்கு பகிர்ந்ததாக ஒருவர் கைது
குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) கட்ச் பகுதியைச் சேர்ந்த பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் சஹ்தேவ் சிங் கோஹிலை உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்துள்ளது.
பாகிஸ்தான் வான்வெளியை மறுத்த பிறகு, இண்டிகோ விமானம் தரையிறங்கும் வரை வழிநடத்திய இந்திய விமானப்படை
மே 21 அன்று, கடுமையான ஆலங்கட்டி மழை பெய்தபோது டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்குச் சென்ற இண்டிகோ விமானம், பாகிஸ்தான் வான்வெளியில் அவசரமாக நுழைய அனுமதி கோரியது.
ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தான் கண்ணில் மண்ணை தூவி பயங்கரவாத தளங்களை இந்தியா எவ்வாறு தாக்கியது?
ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியாவின் முப்படைகளின் கூட்டு நடவடிக்கை ஆபரேஷன் சிந்தூர்.
'மீண்டும் ஒரு தாக்குதல் நடந்தால், இந்தியா உறுதியான பதிலடி கொடுக்கும்': மோடி
பாகிஸ்தானுக்கு எதிராக 'ஆபரேஷன் சிந்தூர்' வெற்றிகரமாக நடத்தியதில் துணிச்சலுடன் செயல்பட்டதற்காக பிரதமர் நரேந்திர மோடி, ஆதம்பூர் விமானப்படை தளத்தில் இந்திய ராணுவத்திற்கு வணக்கம் செலுத்தினார்.
IACCS: இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் வான் பாதுகாப்பு வெற்றியின் முதுகெலும்பு இவர்கள்தான்
திங்கட்கிழமை (மே 12) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்குப் பின்னால் இருந்த ஒருங்கிணைந்த விமான கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பை (IACCS) விமான நடவடிக்கைகளின் இயக்குநர் ஜெனரல் ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி பாராட்டினார்.
பாகிஸ்தானின் அணு உலையை இந்தியா தாக்கியதா: IAF விளக்கம்
பாகிஸ்தானில் உள்ள கிரானா ஹில்ஸில் உள்ள அணுசக்தி நிலையத்தை இந்திய ஆயுதப் படைகள் குறிவைக்கவில்லை என்பதை விமானப்படை நடவடிக்கைகளின் இயக்குநர் ஜெனரல் ஏர் மார்ஷல் ஏ.கே.பாரதி திங்களன்று உறுதிப்படுத்தினார்.
ஆபரேஷன் சிந்தூர்: 35-40 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக இந்தியா அறிவிப்பு
ஞாயிற்றுக்கிழமை (மே 11) நடைபெற்ற அரிய முப்படை செய்தியாளர் சந்திப்பில், இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை உயர் அதிகாரிகள், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து நாட்டின் பதிலடி ராணுவ நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூர் பற்றிய முக்கிய விவரங்களை வெளியிட்டனர்.
ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது; இந்திய விமானப்படை எக்ஸ் தளத்தில் அறிவிப்பு
சனிக்கிழமை (மே 10) இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் நிறுத்த அறிவிப்பு வெளியான நிலையில், ஆபரேஷன் சிந்தூரின் கீழ் வான் பாதுகாப்பு நடவடிக்கைகள் இன்னும் நடந்து வருவதாக இந்திய விமானப்படை (ஐஏஎஃப்) ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தியது.
பெஷாவரில் பலத்த வெடிச்சத்தம்; பாகிஸ்தானின் போர் நிறுத்த மீறலுக்கு இந்தியா தரமான பதிலடி?
பாகிஸ்தானின் போர் நிறுத்த மீறல்களுக்கு விரைவான மற்றும் தீர்க்கமான பதிலடியாக, சனிக்கிழமை (மே 10) இரவு இந்தியா பதிலடி தாக்குதல்களை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா தாக்கி அழித்த பாகிஸ்தானின் சுக்கூர் விமானப்படை தளத்தின் முக்கியத்துவம் என்ன?
இந்தியா பாகிஸ்தான் இடையேயான பதற்றம் தீவிரமடைந்து வரும் நிலையில், பாகிஸ்தானின் ஒரு பெரிய எல்லை தாண்டிய தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக, ஆறு முக்கிய பாகிஸ்தான் விமானப்படை தளங்கள் மீது இந்தியா துல்லியமான வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
இந்திய பெண் விமானி ஷிவானி சிங் பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டாரா? உண்மை இதுதான்
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், சமூக ஊடகங்களில் நிறைய தவறான தகவல்கள் பரவி வருகின்றன.