NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது; இந்திய விமானப்படை எக்ஸ் தளத்தில் அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது; இந்திய விமானப்படை எக்ஸ் தளத்தில் அறிவிப்பு
    ஆபரேஷன் சிந்தூர் தொடர்வதாக இந்திய விமானப்படை அறிவிப்பு

    ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது; இந்திய விமானப்படை எக்ஸ் தளத்தில் அறிவிப்பு

    எழுதியவர் Sekar Chinnappan
    May 11, 2025
    01:51 pm

    செய்தி முன்னோட்டம்

    சனிக்கிழமை (மே 10) இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் நிறுத்த அறிவிப்பு வெளியான நிலையில், ஆபரேஷன் சிந்தூரின் கீழ் வான் பாதுகாப்பு நடவடிக்கைகள் இன்னும் நடந்து வருவதாக இந்திய விமானப்படை (ஐஏஎஃப்) ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தியது.

    எக்ஸ் தளத்தில் இதுகுறித்து வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், அதன் பணிகள் தேசிய நோக்கங்களுக்கு ஏற்ப துல்லியம் மற்றும் தொழில்முறையுடன் செயல்படுத்தப்பட்டதாக ஐஏஎஃப் குறிப்பிட்டது.

    நடவடிக்கைகள் விவேகமான முறையில் நடத்தப்பட்டன என்றும், மேலும் உரிய நேரத்தில் விரிவான விளக்கம் கொடுக்கப்படும் எனக் கூறியுள்ளது.

    அதே நேரம், நடவடிக்கைகள் இன்னும் தொடரும் நிலையில், பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் ஊகங்களைத் தவிர்க்கவும், சரிபார்க்கப்படாத தகவல்களைப் பகிர்வதைத் தவிர்க்கவும் வலியுறுத்தி உள்ளது.

    போர் நிறுத்த மீறல்

    போர் நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதல்

    ஒரு சமாதான ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதில் மத்தியஸ்தம் செய்யும் பங்கை வகித்ததாக அமெரிக்கா வெளிப்படுத்திய ஒரு நாளுக்குப் பிறகு இந்த அறிக்கை வந்தது.

    இருப்பினும், போர் நிறுத்தம் குறுகிய காலமாக இருந்தது. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, பாகிஸ்தான் சர்வதேச எல்லையில், குறிப்பாக ரஜோரி துறை மற்றும் ஸ்ரீநகரின் சில பகுதிகளில் கடுமையான ஷெல் தாக்குதலை மீண்டும் தொடங்கியது.

    அத்துமீறல் இருந்தபோதிலும், ஞாயிற்றுக்கிழமை நிலைமை சீரானது. எல்லைப் பகுதிகளில் துப்பாக்கிச் சூடு அல்லது ட்ரோன் நடவடிக்கை தொடர்பான புதிய சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை, இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடிந்தது.

    கடைகள் மீண்டும் திறக்கப்பட்டு, அன்றாட வழக்கங்கள் மீண்டும் தொடங்கப்பட்டன. இருப்பினும் பாதுகாப்புப் படைகள் எச்சரிக்கையாகவே உள்ளன.

    ட்விட்டர் அஞ்சல்

    இந்திய விமானப்படையின் எக்ஸ் தள பதிவு

    The Indian Air Force (IAF) has successfully executed its assigned tasks in Operation Sindoor, with precision and professionalism. Operations were conducted in a deliberate and discreet manner, aligned with National Objectives.

    Since the Operations are still ongoing, a detailed…

    — Indian Air Force (@IAF_MCC) May 11, 2025
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விமானப்படை
    ஆபரேஷன் சிந்தூர்
    இந்தியா

    சமீபத்திய

    ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது; இந்திய விமானப்படை எக்ஸ் தளத்தில் அறிவிப்பு விமானப்படை
    ஆர்த்தி ரவி-ரவி மோகன் சர்ச்சை: கெனிஷாவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியால் அடுத்த பரபரப்பு ரவி
    ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியை தடை செய்தது பங்களாதேஷ் இடைக்கால அரசு; காரணம் என்ன? ஷேக் ஹசீனா
    சர்வதேச கிரிக்கெட்டில் முதல்முறை;  ஒரு இன்னிங்ஸில் 10 வீரர்கள் ரிட்டயர்டு அவுட்; எந்த போட்டியில் தெரியுமா? மகளிர் கிரிக்கெட்

    விமானப்படை

    இந்தியா-பிரான்ஸ் இணைந்து நடத்தும் 'ஓரியன்' ராணுவ பயிற்சி பிரான்ஸ்
    ராஜஸ்தானில் விபத்துக்குள்ளான விமானப்படை விமானம்: 3 பேர் பலி  இந்தியா
    அமெரிக்க ட்ரோன் ஒப்பந்தம்: இந்தியாவிற்கு என்னென்ன ட்ரோன்கள் கிடைக்கும் அமெரிக்கா
    போர் விமானங்களைத் தயாரிக்க அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்தது இந்தியா  அமெரிக்கா

    ஆபரேஷன் சிந்தூர்

    லெஃப்ட்-ல இண்டிகேட்டர், ரைட் திருப்பு! போர்கால ஒத்திகை என ஏமாற்றி பாகிஸ்தான் மீது இந்தியாவின் அதிரடி தாக்குதல் -Op Sindoor இந்திய ராணுவம்
    ஆபரேஷன் சிந்தூர்: ரபேல் விமானங்கள், ஸ்கால்ப் ஏவுகணைகள், ஹேமர் குண்டுகள் பயன்படுத்தி பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் பஹல்காம்
    LoC-இல் பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் ஷெல் தாக்குதலில் 10 இந்திய பிரஜைகள் கொல்லப்பட்டனர் துப்பாக்கி சூடு
    'மேலும் பஹல்காம் போன்ற தாக்குதல்கள் திட்டமிடப்பட்டன': 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து விளக்கமளித்த இந்திய ராணுவம் இந்திய ராணுவம்

    இந்தியா

    பாகிஸ்தானின் முக்கிய நகரங்களின் மீது இந்தியா தாக்குதல்; தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு பாகிஸ்தான்
    இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனையில் அமெரிக்கா தலையிடாது என்று ஜே.டி. வான்ஸ் கூறுகிறார் அமெரிக்கா
    விமான தாக்குதல் சைரன்கள் ஒலிப்பு; ட்ரோன்கள் அச்சுறுத்தலால் உச்ச கட்ட எச்சரிக்கையில் சண்டிகர் சண்டிகர்
    பாகிஸ்தானின் இரவு நேர ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு 'தக்க பதிலடி கொடுக்கப்பட்டது': இந்திய ராணுவம்  இந்திய ராணுவம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025