
ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தான் கண்ணில் மண்ணை தூவி பயங்கரவாத தளங்களை இந்தியா எவ்வாறு தாக்கியது?
செய்தி முன்னோட்டம்
ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியாவின் முப்படைகளின் கூட்டு நடவடிக்கை ஆபரேஷன் சிந்தூர்.
இந்த நடவடிக்கையின் போது, பாகிஸ்தானின் கண்ணில் மண்ணை தூவி இந்தியா எப்படி தாக்கியது என்ற கேள்வி பலருக்கும் இருந்தது.
தற்போது அதற்கான விடை வெளியாகியுள்ளது.
ஆபரேஷன் சிந்தூரில், பாகிஸ்தானிற்கு சீனா வழங்கிய வான் பாதுகாப்பு அமைப்புகளை முடக்கி, பாகிஸ்தான் வான்வெளியை கடந்து சென்று இலக்குகளை தாக்க இந்திய விமானப்படைக்கு வெறும் 23 நிமிடங்கள் மட்டுமே ஆனதாம்.
அறிக்கை
வெற்றிகரமாக சீனாவின் தொழில்நுட்பத்தை முறியடித்த இந்தியா
"பாகிஸ்தானின் சீனா வழங்கிய AD அமைப்புகளை IAF புறக்கணித்து முடக்கியது(Jamming). இந்த பணியை வெறும் 23 நிமிடங்களில் முடித்து இந்தியாவின் தொழில்நுட்ப நுண்ணறிவை நிரூபித்தது" என்று தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
"Jamming" என்பது எதிரிகளின் ரேடார் மற்றும் தகவல்தொடர்புகளை சீர்குலைப்பது அல்லது குழப்புவது என்று பொருள்.
"23 நிமிடங்கள்" என்பது IAF மற்றும் இராணுவம் மே 7 அதிகாலையில் பாகிஸ்தான் மற்றும் PoK இல் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்களை குண்டுவீச எடுத்துக்கொண்ட நேரத்தைக் குறிக்கிறது.
ஆபரேஷன் சிந்தூர்
ஆபரேஷன் சிந்தூர் மற்றும் அதை தொடர்ந்து நடந்த எதிர்தாக்குதல்கள்
மே 7ஆம் தேதி அதிகாலை, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (POK) ஒன்பது பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது.
ஆபரேஷன் சிந்தூர் என்ற இந்த ராணுவ நடவடிக்கையின் கீழ் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
பதிலுக்கு பாகிஸ்தான் பல இந்திய இராணுவ நிலைகளை குறிவைத்து ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்க முயன்றது.
ஆனால் அவை இந்திய வான் பாதுகாப்பு அமைப்பான ஆகாஷால் சுட்டு வீழ்த்தப்பட்டன.
இதற்கு பதிலடியாக இந்தியா, அவர்களின் நூர் கான் மற்றும் ரஹீம் யார் கான் உள்ளிட்ட முக்கிய பாகிஸ்தானிய விமானப்படை தளங்களை துல்லியத்துடன் குறிவைத்தன.
தாக்குதல் ஒவ்வொன்றும் எதிரி ரேடார் மற்றும் ஏவுகணை அமைப்புகள் உட்பட அதிக மதிப்புள்ள இலக்குகளைக் கண்டுபிடித்து அழித்தன.