LOADING...
60 வருட கால சேவைக்கு பின்னர் மிக்-21 போர் விமானங்கள் நாளை ஓய்வு பெறுகின்றன; அதன் சிறப்பம்சங்கள்
நாளை (செப்டம்பர் 26) இந்திய விமானப்படையிலிருந்து MiG-21 ஓய்வு பெறுகின்றன

60 வருட கால சேவைக்கு பின்னர் மிக்-21 போர் விமானங்கள் நாளை ஓய்வு பெறுகின்றன; அதன் சிறப்பம்சங்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 25, 2025
01:56 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய விமானப்படையின் முதுகெலும்பாக 60 வருடங்களுக்கும் மேலாக திகழ்ந்த புகழ்பெற்ற ரஷ்ய தயாரிப்பான மிக்-21 (MiG-21) போர் விமானங்கள், இறுதியாக நாளை (செப்டம்பர் 26) இந்திய விமானப்படையிலிருந்து ஓய்வு பெறுகின்றன. இந்த விமானங்கள், 1963 முதல் பல போர்களிலும், முக்கிய நடவடிக்கைகளிலும் இந்தியாவிற்கு மகத்தான சேவைகளை ஆற்றியுள்ளன.

முக்கியத்துவம்

ஓய்வு விழா மற்றும் முக்கியத்துவம்

சண்டிகரில் உள்ள விமானப்படை நிலையத்தில் நடைபெறும் பிரியாவிடை விழாவில், "Panthers" என்ற செல்லப்பெயர் கொண்ட 23-வது படைப்பிரிவை சேர்ந்த கடைசி மிக்-21 ஜெட் விமானத்திற்கு ஓய்வு அளிக்கப்படும். இந்த வரலாற்று நிகழ்வில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான் உள்ளிட்ட பல உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொள்வார்கள். 1963-ல் முதன்முதலில் சண்டிகரில் சேர்க்கப்பட்ட மிக்-21 விமானங்கள், அதே இடத்தில் ஓய்வு பெறுவது ஒரு வரலாற்று அத்தியாயத்தின் முடிவைக் குறிக்கிறது. இந்த விழாவிற்கான முழு ஒத்திகையும் நேற்று நடைபெற்றது.

முதுகெலும்பு

இந்திய விமானப்படையின் முதுகெலும்பு

இந்திய விமானப்படை தனது போர் திறனை அதிகரிக்க 870-க்கும் மேற்பட்ட மிக்-21 விமானங்களை வாங்கியது. இவை, பல ஆண்டுகளாக இந்திய விமானப்படையின் முக்கிய அங்கமாக இருந்துள்ளன. 1965 மற்றும் 1971 போர்கள்: பாகிஸ்தானுக்கு எதிரான போர்களில் இந்த விமானங்கள் முக்கியப் பங்கு வகித்தன. 1999 கார்கில் போர்: கார்கில் மோதலின் போதும் இந்த விமானங்கள் திறம்பட பயன்படுத்தப்பட்டன. 2019 பாலகோட் தாக்குதல்: மிக்-21 விமானங்கள் 2019 பாலகோட் வான்வழித் தாக்குதலிலும் முக்கிய பங்கு வகித்தன. இந்த மிக்-21 போர் விமானங்கள் ஓய்வு பெறுவதன் மூலம், இந்திய விமானப்படை புதிய தலைமுறை போர் விமானங்களை தனது படையில் சேர்க்கும் பாதையில் முன்னேறிச் செல்கிறது.