
பாகிஸ்தான் வான்வெளியை மறுத்த பிறகு, இண்டிகோ விமானம் தரையிறங்கும் வரை வழிநடத்திய இந்திய விமானப்படை
செய்தி முன்னோட்டம்
மே 21 அன்று, கடுமையான ஆலங்கட்டி மழை பெய்தபோது டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்குச் சென்ற இண்டிகோ விமானம், பாகிஸ்தான் வான்வெளியில் அவசரமாக நுழைய அனுமதி கோரியது.
அது உடனடியாக மறுக்கப்பட்டதை அடுத்து, இந்திய விமானப்படை அதிகாரிகளால் விமானம் பாதுகாப்பாக தரையிறங்க நடத்தப்பட்டுள்ளது.
குறிப்பிடப்படும் இந்த இண்டிகோ விமானம் TMC நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 220க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்றது.
6E-2142 என்ற விமானம், புதன்கிழமை இரவு வட இந்தியா முழுவதும் ஏற்பட்ட திடீர் வானிலை மாற்றத்தின் காரணமாக, வானில் கடுமையான turbulance-ஐ எதிர்கொண்டது. இதனால், விமானத்தின் முன்பகுதி (ரேடோம்) பெரும் சேதத்தை சந்தித்தது.
விவரங்கள்
தடை விதித்த பாகிஸ்தான், ஆபத்பாந்தவனாக உதவிய IAF
இதற்கு பதிலளிக்கும் விதமாக, மோசமான வானிலையைத் தவிர்க்க பாகிஸ்தான் வான்வெளி வழியாக ஒரு குறுகிய விமானப் பறப்பை விமானி கோரினார்.
இருப்பினும், அந்தக் கோரிக்கையை லாகூர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு நிராகரித்தது.
பாகிஸ்தானின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தால் வெளியிடப்பட்ட NOTAM-படி இந்த மறுப்பு இருப்பதாக இந்திய விமானப்படை வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.
இது இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட சிவிலியன் மற்றும் இராணுவ விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளிக்குள் நுழைவதைத் தடை செய்கிறது.
பாகிஸ்தானின் அனுமதி மறுக்கப்பட்டதால், விமானம் ஸ்ரீநகரை நோக்கி தனது பாதையை மாற்றியது.
அங்கிருந்து, இந்திய விமானப்படை விமானத்தை பாதகமான சூழ்நிலைகளில் வழிநடத்தவும், பாதுகாப்பான தரையிறக்கத்தை உறுதி செய்யவும், கட்டுப்பாட்டு திசையன்கள் மற்றும் தரை வேக புதுப்பிப்புகள் உள்ளிட்ட நிகழ்நேர உதவியை வழங்கியது.
அவசர நிலை
நடுவானில் அவசரநிலையை அறிவித்த இண்டிகோ விமானி
ஸ்ரீநகரை நெருங்கும் போது ஆலங்கட்டி மழை பெய்ததால் விமானத்தில் நடுவானில் அவசரநிலை அறிவிக்கப்பட்டது.
விமானி விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து மாலை 6:30 மணிக்கு பாதுகாப்பாக தரையிறங்கினார்.
அனைத்து பயணிகளும், விமான ஊழியர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
இருப்பினும், விமானத்தின் மூக்கில் குறிப்பிடத்தக்க சேதம் ஏற்பட்டதால், விமான நிறுவனம் அதை "விமானம் தரையில்" (AOG) என்று அறிவித்து, அவசர பழுதுபார்ப்புக்காக தரையிறக்கியது.