LOADING...
குடியரசு தின விழாவில் சீறப்போகும் 29 போர் விமானங்கள்; முதன்முறையாக 'சிந்தூர்' அணிவகுப்பு!
இந்த ஆண்டு குடியரசு தின விழா அணிவகுப்பின் மிக முக்கிய அம்சம் விமான படையின் Sindoor அணிவகுப்பு

குடியரசு தின விழாவில் சீறப்போகும் 29 போர் விமானங்கள்; முதன்முறையாக 'சிந்தூர்' அணிவகுப்பு!

எழுதியவர் Venkatalakshmi V
Jan 22, 2026
07:34 pm

செய்தி முன்னோட்டம்

வருகிற ஜனவரி 26-ஆம் தேதி நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில், இந்திய விமான படை தனது வலிமையை வெளிப்படுத்தும் வகையில் 29 போர் விமானங்களுடன் பிரம்மாண்ட வான் சாகசத்தை நடத்தவுள்ளது. இந்த ஆண்டு அணிவகுப்பின் மிக முக்கிய அம்சமாக 'சிந்தூர்' (Sindoor) என்ற புதிய விமான அணிவகுப்பு வடிவம் அறிமுகப்படுத்தப்படுகிறது.

ஆபரேஷன் சிந்துர்

ஆபரேஷன் சிந்தூருக்கு மரியாதை

கடந்த 2025 ஏப்ரல் மாதம் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, மே மாதம் பாகிஸ்தான்' மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய 'ஆபரேஷன் சிந்தூர்' வான்வழி தாக்குதலை கௌரவிக்கும் வகையில் இந்த அணிவகுப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு ரஃபேல், இரண்டு மிக்-29, இரண்டு சுகோய்-30 மற்றும் ஒரு ஜாகுவார் ஆகிய பிரதான போர் விமானங்களும் இந்த அணிவகுப்பில் பங்கேற்கின்றன.

மாற்றங்கள்

சிந்தூருக்காக செய்யப்படும் புதிய மாற்றங்கள்

வழக்கமாக அணிவகுப்பின் இறுதியில் நடைபெறும் இந்த வான் சாகசம், இந்த முறை போர்க்களத்தில் படைகள் எவ்வாறு அணிவகுக்கும் என்பதைக் காட்டும் வகையில் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ரஃபேல் விமானங்களின் 'வஜ்ராங்', பி-8ஐ (P-8I) விமானத்தின் 'வருணா' உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் 16 போர் விமானங்கள், 4 போக்குவரத்து விமானங்கள் மற்றும் 9 ஹெலிகாப்டர்கள் வானில் சீறிப்பாய உள்ளன. மேலும், பிரம்மோஸ் ஏவுகணைகள், அர்ஜுன் டாங்கிகள் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட 'பைரவ்' கமாண்டோ படைப்பிரிவுகளும் இந்த விழாவில் தங்களது திறமையை வெளிப்படுத்த உள்ளன. இந்த அணிவகுப்பில் மொத்தம் 18 அணிவகுப்புப் பிரிவுகள், 13 இசைக்குழுக்கள் மற்றும் 30 அலங்கார அலங்கார அலங்காரங்கள் இடம்பெறும்

Advertisement