LOADING...
இந்திய விமானப்படைக்கு மேக் இன் இந்தியா மூலம் 114 புதிய ரஃபேல் ஜெட்கள் வாங்க திட்டம்
இந்திய விமானப்படைக்கு 114 புதிய ரஃபேல் ஜெட்கள் வாங்க திட்டம்

இந்திய விமானப்படைக்கு மேக் இன் இந்தியா மூலம் 114 புதிய ரஃபேல் ஜெட்கள் வாங்க திட்டம்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 13, 2025
08:09 am

செய்தி முன்னோட்டம்

இந்திய விமானப்படையின் (IAF) பலத்தை அதிகரிப்பதற்காக, 114 புதிய ரஃபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்ய, பாதுகாப்பு அமைச்சகத்திடம் ஒரு முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சுமார் ₹2 லட்சம் கோடி மதிப்புள்ள இந்த நடவடிக்கை, இந்தியாவின் வான் பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்துவதில் ஒரு முக்கியப் படியாகும். இந்த முன்மொழிவு மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் வருகிறது. பிரான்சின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனம், இந்தியாவின் டாடா போன்ற விமான நிறுவனங்களுடன் இணைந்து, போர் விமானங்களின் 60% உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்கும். இதற்காக, பிரான்ஸ் நிறுவனம் ஹைதராபாத்தில் ரஃபேல் விமானங்களின் எம்-88 என்ஜின்களுக்கான பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் பழுதுநீக்கம் மையத்தை அமைக்கவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆபரேஷன் சிந்தூர்

ஆபரேஷன் சிந்தூரில் அபார செயல்திறன்

பாதுகாப்புத் துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது ரஃபேல் விமானங்களின் அசாதாரணமான செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு, இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. ரஃபேல் விமானங்கள், தங்கள் மேம்பட்ட `ஸ்பெக்ட்ரா எலெக்ட்ரானிக் வார்ஃபேர் சூட் மூலம், பாகிஸ்தான் பயன்படுத்திய சீனத் தயாரிப்பு ஏவுகணைகளை வெற்றிகரமாக முறியடித்ததாகக் கூறப்படுகிறது. தற்போது, இந்திய விமானப்படையில் 36 ரஃபேல் விமானங்கள் உள்ளன. இந்த புதிய கொள்முதல் முன்மொழிவுடன், இந்திய கடற்படையின் 26 ரஃபேல் விமானங்களுக்கான தனி ஆர்டரையும் சேர்த்து, இந்தியாவின் ரஃபேல் போர் விமான எண்ணிக்கை 176 ஆக உயரும். இந்த கொள்முதல், இந்திய விமானப்படைக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும் என பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.