LOADING...
KBC 17 சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சி: அமிதாப் பச்சன் உடன் ஹாட் சீட்டில் 'ஆபரேஷன் சிந்தூர்' வீராங்கனைகள்
KBC 17 சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சியில், 'ஆபரேஷன் சிந்தூர்' வீராங்கனைகள்

KBC 17 சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சி: அமிதாப் பச்சன் உடன் ஹாட் சீட்டில் 'ஆபரேஷன் சிந்தூர்' வீராங்கனைகள்

எழுதியவர் Venkatalakshmi V
Aug 13, 2025
09:07 am

செய்தி முன்னோட்டம்

'கோன் பனேகா க்ரோர்பதி' (KBC) 17வது சீசனை தொகுத்து வழங்க நடிகர் அமிதாப் பச்சன் மீண்டும் தொகுப்பாளராக களமிறங்கியுள்ளார். உலகமெங்கும் பல கோடி நேயர்களை கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியின் வரவிருக்கும் சுதந்திர தின சிறப்பு எபிசோட்டில், இந்திய பாதுகாப்புப் படைகளின் வீரர்களை வரவேற்று, நாட்டின் வீரியத்தை கௌரவிக்கிறார் அமிதாப். சோனி எண்டர்டெயின்மென்ட் டெலிவிஷன் வெளியிட்ட ப்ரோமோவில், இந்திய ராணுவத்தின் கர்னல் சோபியா குரேஷி, இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் வியோமிகா சிங், இந்திய கடற்படையின் கமாண்டர் பிரேர்னா தியோஸ்தலி ஆகியோர் ஹாட் சீட்டில் அமர்ந்து, சமீபத்திய 'ஆபரேஷன் சிந்தூர்' பற்றிய தகவல்களை பகிர்ந்துள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ஆபரேஷன் சிந்தூர்

'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து ஒரு பார்வையை வழங்கிய வீர மங்கைகள்

விங் கமாண்டர் வியோமிகா,"இரவு 1:05 மணி-1:30 மணி வரை, வெறும் 25 நிமிடங்களில் முழு ஆபரேஷனும் நிறைவேற்றப்பட்டது," எனக் கூறினார். கமாண்டர் பிரேர்னா, "இலக்குகள் அழிக்கப்பட்டன. ஆனால் ஒரு குடிமகனுக்கும் தீங்கு ஏற்படவில்லை," என்றார். சோபியா குரேஷி, "இது புதிய பார்வை கொண்ட ஒரு புதிய இந்தியா," எனக் கூற, அமிதாப் மற்றும் பார்வையாளர்கள் அனைவரும் "பாரத் மாதா கி ஜெய்" என முழங்கினர். 'ஆபரேஷன் சிந்தூர்', ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் (22 பொதுமக்கள் உயிரிழந்தனர்) பதிலளிக்கும் வகையில், இந்திய ராணுவம் மற்றும் விமானப்படை இணைந்து பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்களை குறிவைத்து நடத்திய துல்லியமான தாக்குதல் ஆகும்.