
இந்திய பெண் விமானி ஷிவானி சிங் பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டாரா? உண்மை இதுதான்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், சமூக ஊடகங்களில் நிறைய தவறான தகவல்கள் பரவி வருகின்றன.
அந்த வகையில், இந்திய விமானப்படை பெண் விமானி ஸ்க்வாட்ரான் லீடர் ஷிவானி சிங் பாகிஸ்தான் படைகளால் பிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு தகவல் வைரலாக பரவிய நிலையில், அந்த கூற்றை மத்திய அரசின் கீழ் இயங்கும் பத்திரிகை தகவல் பணியகத்தின் (பிஐபி) உண்மை சரிபார்ப்பு குழு மறுத்துள்ளது.
பிஐபி உண்மை சரிபார்ப்பு நிறுவனம் இந்தக் கூற்று போலி என்று திட்டவட்டமாகக் கூறியது, மேலும் இதுபோன்ற தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என பொதுமக்களை எச்சரித்தது.
ட்விட்டர் அஞ்சல்
பிஐபி உண்மை சரிபார்ப்பு மையத்தின் எக்ஸ் பதிவு
Indian Female Air Force pilot has NOT been captured🚨
— PIB Fact Check (@PIBFactCheck) May 10, 2025
Pro-Pakistan social media handles claim that an Indian Female Air Force pilot, Squadron Leader Shivani Singh, has been captured in Pakistan.#PIBFactCheck
❌ This claim is FAKE!#IndiaFightsPropaganda@MIB_India… pic.twitter.com/V8zovpSRYk
இந்திய வீரர்கள்
இந்திய வீரர்கள் அழுவது போல் பரப்பப்பட்ட போலி வீடியோ
மற்றொரு வைரல் பதிவில், இந்திய பாதுகாப்புப்படை வீரர்கள் தங்கள் நிலைகளைக் கைவிடும்போது அழுததாக பரப்பப்பட்ட வீடியோவும் சித்தரிக்கப்பட்டது என்று பிஐபி தெளிவுபடுத்தியது.
உண்மையில், இந்திய ராணுவத்தில் தங்கள் தேர்வைக் கொண்டாடும் ஒரு தனியார் பாதுகாப்பு பயிற்சி நிறுவனத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்த காட்சிகள்தான் அவை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் 27 அன்று முதலில் பகிரப்பட்ட இந்த வீடியோ, சமீபத்திய ராணுவ நிகழ்வுகளுடன் எந்த தொடர்பும் இல்லை.
மேலும், ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு அருகில் பல வெடிப்புகள் நடந்ததாக அல் ஜசீரா கூறியதையும் பிஐபி மறுத்துள்ளது.
குருத்வாரா
குருத்வாரா மீது ட்ரோன் தாக்குதல் என பரவிய போலி வீடியோ
இதேபோல், ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் வெடிப்புகள் பற்றிய வதந்திகள் நிராகரிக்கப்பட்டன, மாவட்ட அதிகாரிகளால் விமான நிலையத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அதிகாரப்பூர்வ விளக்கமும் வழங்கப்பட்டது.
இதற்கிடையே. நங்கனா சாஹிப் குருத்வாரா மீது இந்தியாவால் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் பிஐபி மறுத்துள்ளது.
அந்த உள்ளடக்கம் ஜோடிக்கப்பட்டு வகுப்புவாத மோதலைத் தூண்டுவதற்காக வடிவமைக்கப்பட்டது என்று கூறியது.
இந்தியாவின் 70% மின் கட்டமைப்பை முடக்கிய சைபர் தாக்குதல் பற்றிய கூற்றுகளும் ஆதாரமற்றவை என்று நிரூபிக்கப்பட்டது.
துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ தளங்களை மட்டுமே நம்பியிருக்கவும், சரிபார்க்கப்படாத உள்ளடக்கத்தை ஆன்லைனில் பரப்புவதைத் தவிர்க்கவும் பிஐபி பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.