LOADING...
ஆண்ட்ராய்டு டேப்லெட் மற்றும் மடிப்பு போன்களில் கூகுள் குரோம் புதிய 'புக்மார்க் பார்' வசதி!
PC-யில் இருப்பது போன்ற 'புக்மார்க்ஸ் பார்' வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது Google Chrome

ஆண்ட்ராய்டு டேப்லெட் மற்றும் மடிப்பு போன்களில் கூகுள் குரோம் புதிய 'புக்மார்க் பார்' வசதி!

எழுதியவர் Prasanna
Mar 17, 2026
11:12 am

செய்தி முன்னோட்டம்

கூகுள் நிறுவனம் டேப்லட்கள் மற்றும் மடிக்கக்கூடிய போன்களில் உள்ள குரோம் பிரவுசர்களிலும் கணினியில் இருப்பது போன்ற 'புக்மார்க்ஸ் பார்' வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுவரை மொபைல் குரோம் பிரவுசரில் புக்மார்க்குகளை பார்க்க மெனுவிற்குள் செல்ல வேண்டியிருந்தது. இனி, கணினியில் இருப்பது போலவே search bar-க்கு கீழே உங்களுக்குப் பிடித்த இணையதளங்கள் வரிசையாக தோன்றும். இணையதளங்களின் ஐகான்கள், பெயர்கள் மற்றும் ஃபோல்டர்கள் திரையிலேயே இருப்பதால், அடிக்கடி பயன்படுத்தும் தளங்களை ஒரே கிளிக்கில் திறக்க முடியும்.

கூகுள்

செயல்படுத்தும் முறை:

குரோம் 146 பதிப்பிற்கு (Chrome 146) அப்டேட் செய்த பிறகு, Settings > Appearance பகுதிக்கு சென்று "Show bookmarks bar" என்ற ஆப்ஷனை ஆன் செய்து இந்த வசதியைப் பெறலாம். அதிகப்படியான புக்மார்க்குகள் இருந்தால், 'Overflow' ஐகான் மூலம் மற்றவற்றை அணுகலாம். மேலும், ஒரு புக்மார்க்கை நீண்ட நேரம் அழுத்தினால் அதன் முழு முகவரியையும் (URL) பார்க்க முடியும். இந்த வசதி தற்போது டேப்லெட் மற்றும் மடிப்பு போன்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. சாதாரண ஸ்மார்ட்போன்களில் திரை இடைவெளி கருதி இந்த வசதி இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை.

Advertisement