LOADING...
90% துல்லியத் தன்மையுடன் மூளைக் கட்டிகளைக் கண்டறியும் ரத்தப் பரிசோதனை
இந்த பரிசோதனை 90%-க்கும் அதிகமான துல்லியத்துடன் மூளைக் கட்டிகளைக் கண்டறியும்

90% துல்லியத் தன்மையுடன் மூளைக் கட்டிகளைக் கண்டறியும் ரத்தப் பரிசோதனை

எழுதியவர் Prasanna
Mar 17, 2026
10:48 am

செய்தி முன்னோட்டம்

மூளைக் கட்டிகளை (Brain Tumours) கண்டறிவதில் ஒரு வரலாற்றுச் சாதனையாக, 90 சதவீதத்திற்கும் அதிகமான துல்லியத்துடன் செயல்படும் புதிய ரத்தப் பரிசோதனையை முறையை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைக்கழக (University of Manchester) விஞ்ஞானிகள், டென்மார்க் நாட்டு ஆய்வுக் குழுக்களுடன் இணைந்து இந்த ரத்தப் பரிசோதனையை முறையை உருவாக்கியுள்ளனர். இந்தச் சோதனை ரத்தத்தில் உள்ள F9 (Coagulation factor IX) மற்றும் COMP (Cartilage oligomeric matrix protein) ஆகிய இரண்டு குறிப்பிட்ட புரதங்களை அடையாளம் காண்பதன் மூலம் மூளைக் கட்டிகளைக் கண்டறிகிறது. இது 90%-க்கும் அதிகமான துல்லியத்துடன் மூளைக் கட்டிகளைக் கண்டறிவது மட்டுமல்லாமல், சிகிச்சை எவ்வாறு வேலை செய்கிறது என்பதையும் நிகழ்நேரத்தில் கண்காணிக்க உதவுகிறது.

மருத்துவம்

ஏன் இது ஒரு பெரிய மைல்கல்?

தற்போது மூளைக் கட்டிகளைக் கண்டறிய கடினமான MRI ஸ்கேன்கள் மற்றும் தலையில் துளையிட்டு திசுக்களை எடுக்கும் பயாப்ஸி (Biopsy) முறைகளே உள்ளன. ஆனால், இந்தப் புதிய முறை ஒரு சாதாரண ரத்தப் பரிசோதனை மூலம் செய்யப்படலாம். அடிக்கடி தலைவலியுடன் வரும் நோயாளிகளுக்கு இந்தச் சோதனையைச் செய்வதன் மூலம், நோய் முற்றிய நிலைக்குச் செல்லும் முன்பே அதைக் கண்டறிய முடியும். அறுவை சிகிச்சை அல்லது கீமோதெரபிக்குப் பிறகு கட்டி மீண்டும் வளர்கிறதா என்பதை MRI ஸ்கேன்களுக்கு முன்பே இந்த ரத்தப் பரிசோதனை மூலம் கண்டறிய முடியும்.

Advertisement