LOADING...
ஐபிஓவை தள்ளி வைத்த PhonePe, சர்வதேச பிரச்சினை மற்றும் குறைவான மதிப்பீடுகளே காரணம்!
ஐபிஓவை தள்ளிவைப்பதாக அறிவித்துள்ளது போன்பே

ஐபிஓவை தள்ளி வைத்த PhonePe, சர்வதேச பிரச்சினை மற்றும் குறைவான மதிப்பீடுகளே காரணம்!

எழுதியவர் Prasanna
Mar 17, 2026
11:05 am

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் பேமெண்ட் தளமான ஃபோன்பே, தனது பொதுப் பங்கு வெளியீட்டை (IPO) தற்காலிகமாகத் தள்ளிவைப்பதாக அறிவித்துள்ளது. மத்திய கிழக்கில் (ஈரான்-இஸ்ரேல்) நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் உலகளாவிய சந்தை ஏற்ற இறக்கங்கள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. அதிகாரப்பூர்வக் காரணங்களைத் தாண்டி, நிறுவனத்தின் மதிப்பீடு குறித்து முதலீட்டாளர்களுக்கும் ஃபோன்பே நிர்வாகத்திற்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி இருப்பதாகத் தெரிகிறது. ஃபோன்பே சுமார் $11-$15 பில்லியன் மதிப்பீட்டை எதிர்பார்த்த நிலையில், சந்தை நிபுணர்கள் மற்றும் வங்கிகள் அதை $7-$8 பில்லியன் என்ற அளவிலேயே கணித்துள்ளன.

ஃபோன்பே

முதலீட்டாளர் தாக்கம்:

குறைந்த மதிப்பீட்டில் பட்டியலிடப்பட்டால், அதன் முக்கிய முதலீட்டாளரான 'ஜெனரல் அட்லாண்டிக்' போன்ற நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் அவர்கள் தற்போதைய சூழலில் பட்டியலிடுவதைத் தவிர்க்க விரும்புவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஃபோன்பே போன்ற ஒரு பெரிய நிறுவனம் பின்வாங்குவது, ஐபிஓ-விற்குத் தயாராகிக் கொண்டிருக்கும் செப்டோ (Zepto), ஓயோ (Oyo), பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் ரேஸர்பே (Razorpay) போன்ற பிற நிறுவனங்களின் திட்டங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். சுருக்கமாகச் சொன்னால், லாபம் ஈட்டுவதில் உள்ள சவால்கள் மற்றும் தற்போதைய போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள சந்தைப் பாதிப்பு ஆகியவையே ஃபோன்பே இந்த முடிவை எடுக்கக் காரணமாகியுள்ளன. சந்தை நிலவரம் சீரான பிறகு மீண்டும் ஐபிஓ பணிகளை தொடர போவதாக ஃபோன்பே தலைமை நிர்வாகி சமீர் நிகம் தெரிவித்துள்ளார்.

Advertisement