Loading...
நடிகர் விக்ரம் இன்ஸ்டா வீடியோவால் கிளம்பிய புதிய சர்ச்சை; கருணாநிதியின் பேத்தி வீட்டில் வனத்துறை சோதனையா?
நடிகர் விக்ரம் இன்ஸ்டா வீடியோவால் கிளம்பிய புதிய சர்ச்சை

நடிகர் விக்ரம் இன்ஸ்டா வீடியோவால் கிளம்பிய புதிய சர்ச்சை; கருணாநிதியின் பேத்தி வீட்டில் வனத்துறை சோதனையா?

எழுதியவர் Venkatalakshmi V
Aug 11, 2026
10:51 am

செய்தி முன்னோட்டம்

பிரபல நடிகர் விக்ரம், அழிவின் விளிம்பில் உள்ள அரிய வகை 'லார் கிப்பன்' மனித குரங்கு குட்டியுடன் விளையாடும் வீடியோவை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். ஆரம்பத்தில் அந்த வீடியோ பல லைக்குகளை பெற்ற நிலையில் தற்போது அது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனால் கருணாநிதியின் குடும்பத்திற்கும் சட்டசிக்கல் ஏற்படும் சூழல் உள்ளது. சர்ச்சை வெடித்ததைத் தொடர்ந்து நடிகர் விக்ரம் அந்த வீடியோவை உடனடியாகத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இருந்து நீக்கினார். சர்வதேச மற்றும் தேசிய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் பாதுகாக்கப்பட்ட இந்த அரிய வகை உயிரினத்தை கூண்டில் அடைத்து வீட்டில் வளர்ப்பது அதன் இயற்கைச் சுதந்திரத்தைப் பறிக்கும் செயலாகும் எனக் கூறி வனவிலங்கு ஆர்வலர்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

விசாரணை

வனத்துறையின் தீவிர விசாரணை

இந்த நிலையில், இந்த அரிய வகை மனித குரங்கை வீட்டில் வளர்ப்பதற்கான உரிய சட்டப்பூர்வ அனுமதிச் சான்றிதழ்கள் விக்ரமிடம் உள்ளனவா என்பது குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

இந்த குரங்கு விக்ரமின் சம்மந்தர் CK.ரங்கநாதன் இல்லத்தில் இருப்பது என ஒரு சாரார் தெரிவிக்கின்றனர்.

CK ரங்கநாதன் பிரபல கேவின்கேர் நிறுவனத்தின் நிறுவனர்-தலைவர் ஆவார்.

இவர் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேத்தி தேன்மொழியை மணந்துள்ளார். தற்போது இந்த சர்ச்சைக்குரிய வனவிலங்கை இவரது இல்லத்தில் வளர்த்து வருகிறார் என்ற செய்தி உண்மையானால், இவர் சட்ட சிக்கலில் சிக்கக்கூடும்.

தற்போதுதான் உதயநிதி ஒரு சிக்கலில் சிக்கிய நிலையில், கருணாநிதியின் மற்றொரு குடும்ப வாரிசும் சிக்கலில் சிக்கப்போகிறதா என கட்சியினர் அச்சத்தில் உள்ளனர்.

விவரங்கள்

சட்டவிரோதக் கடத்தல் கோணத்தில் ஆய்வு

முதற்கட்ட ஆவண ஆய்வில், மலேசியாவை பூர்வீகமாக கொண்ட 8 லார் கிப்பன் குரங்கு குட்டிகளை வளர்ப்பதற்கான அனுமதியை மணிப்பூரை சேர்ந்த லைகுராம் சிங் என்பவர் வைத்திருந்தது தெரியவந்துள்ளது.

அவர் தன்னிடம் இருந்த குரங்குகளில் மூன்றை ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.கே. கேசவநாதன் என்பவருக்கு வழங்கியுள்ளார்.

அதில் ஒரு குரங்கு குட்டியே தற்போது நடிகர் விக்ரம் வீட்டில் பராமரிக்கப்பட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது.

மரங்களில் சுதந்திரமாக வாழ வேண்டிய இந்த அரிய வகை விலங்கினங்கள் வேறு யார் யாரளிடம் உள்ளன, இந்த விலங்குப் பரிமாற்றத்தில் தொடர்புடைய நபர்கள் யார் மற்றும் சர்வதேச அளவில் வன விலங்குகளைக் கடத்தும் சட்டவிரோதக் கும்பலுக்கு இதில் தொடர்புள்ளதா என்ற கோணங்களில் வனத்துறையினரும் காவல்துறையினரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT