LOADING...
பாதுகாப்புத் துறைக்கு ரூ. 7 லட்சம் கோடி? ஆபரேஷன் சிந்தூருக்கு பின் அதிரடி காட்டவிருக்கும் மத்திய பட்ஜெட்
இந்திய ராணுவத்தின் பலத்தை மேலும் அதிகரிக்க மத்திய நிதி அமைச்சர் திட்டம்

பாதுகாப்புத் துறைக்கு ரூ. 7 லட்சம் கோடி? ஆபரேஷன் சிந்தூருக்கு பின் அதிரடி காட்டவிருக்கும் மத்திய பட்ஜெட்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 23, 2026
05:56 pm

செய்தி முன்னோட்டம்

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யவுள்ள 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், நாட்டின் பாதுகாப்பு துறைக்கு 10 சதவீதத்திற்கும் அதிகமான (Double-digit) நிதி ஒதுக்கீடு செய்யப்பட வாய்ப்புள்ளதாக டைம்ஸ் நொவ் செய்தி கூறியுள்ளது. கடந்த ஆண்டு பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது நடத்தப்பட்ட 'ஆபரேஷன் சிந்தூர்' வெற்றிக்கு பிறகு, இந்திய ராணுவத்தின் பலத்தை மேலும் அதிகரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த பாதுகாப்பு பட்ஜெட் ரூ. 7 லட்சம் கோடிக்கும் அதிகமாகவும், புதிய ஆயுதங்களை கொள்முதல் செய்வதற்கான மூலதன பட்ஜெட் ரூ.2 லட்சம் கோடிக்கும் அதிகமாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்திய வரலாற்றிலேயே பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கப்படும் மிக உயர்ந்த நிதியாகும்.

பட்ஜெட்

விமானப் படைக்கு முன்னுரிமை

இந்த பட்ஜெட்டில் இந்திய விமானப்படைக்கு (IAF) அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது. குறிப்பாக: வான்வழி எரிபொருள் நிரப்பிகள் (Refuellers): அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உதவியுடன் இவை வாங்கப்பட உள்ளன. AWACS கண்காணிப்பு விமானங்கள்: பிரேசிலுடன் இணைந்து இவை உருவாக்கப்பட உள்ளன. ரஃபேல் போர் விமானங்கள்: 114 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான 30 பில்லியன் யூரோ மதிப்பிலான ஒப்பந்தம் குறித்தும் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது. டிஆர்டிஓ (DRDO) மற்றும் பிரான்ஸின் சப்ரான் (Safran) நிறுவனம் இணைந்து விமான இன்ஜின்களை தயாரிப்பதற்கான 3 பில்லியன் யூரோ திட்டத்திற்கு இந்த பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது.

Advertisement