LOADING...
பாகிஸ்தானின் அணுசக்தி தளத்தை இந்தியா தாக்கியதா? பரப்பரப்பைக் கிளப்பிய விமானப்படையின் குடியரசு தின வீடியோவின் பின்னணி
விவாதத்தைக் கிளப்பிய விமானப்படை வீடியோ

பாகிஸ்தானின் அணுசக்தி தளத்தை இந்தியா தாக்கியதா? பரப்பரப்பைக் கிளப்பிய விமானப்படையின் குடியரசு தின வீடியோவின் பின்னணி

எழுதியவர் Sekar Chinnappan
Jan 29, 2026
03:25 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய விமானப்படை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியிட்ட ஒரு வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. மகிஷாசுர மர்த்தினி ஸ்தோத்திரத்தின் பின்னணி இசையுடன், ரஃபேல், சுகோய், ஜாகுவார் மற்றும் தேஜஸ் ஆகிய போர் விமானங்கள் அணிவகுக்கும் இந்த வீடியோவில், "அமைதியின் உடைக்க முடியாத உத்தரவாதம் நான்" என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ ஆபரேஷன் சிந்தூர் குறித்த பழைய நினைவுகளையும், சந்தேகங்களையும் மீண்டும் தூண்டியுள்ளது.

பின்னணி

ஆபரேஷன் சிந்தூர்: பின்னணி என்ன?

கடந்த 2025 ஏப்ரல் 22 அன்று பஹல்காம் பகுதியில் 26 சுற்றுலாப் பயணிகள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, மே 7 அன்று இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் துல்லியமானத் தாக்குதல்களை நடத்தியது. பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. பாகிஸ்தான் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் பதிலடி கொடுக்க முயன்றபோது, இந்தியா இஸ்லாமாபாத் அருகிலுள்ள நூர் கான் விமானப்படைத் தளம் உள்ளிட்ட முக்கிய இராணுவ நிலைகளைத் தாக்கியது.

சர்ச்சை

கிரானா ஹில்ஸ் சர்ச்சை

பாகிஸ்தானின் சர்கோதாவில் உள்ள கிரானா ஹில்ஸ் பகுதியில் நிலத்தடி அணுசக்தி சேமிப்பு கிடங்குகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்தப் பகுதியை இந்தியா தாக்கியதா என்பதுதான் தற்போதைய கேள்வி. இது குறித்துக் கேட்டபோது, "நாங்கள் இன்னும் அதிகாரப்பூர்வ பதிவையே நிலைநாட்டுகிறோம்" என்று செய்தித் தொடர்பாளர் விங் கமாண்டர் ஜெய்தீப் சிங் தெரிவித்தார். கடந்த ஆண்டு இது குறித்துப் பேசிய ஏர் மார்ஷல் ஏ.கே.பாரதி, "கிரானா ஹில்ஸில் அணுசக்தி தளம் இருப்பது எங்களுக்குத் தெரியாது, நாங்கள் அங்கே தாக்கவில்லை" என்று புன்னகையுடன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement

ரகசியம்

வீடியோவில் உள்ள ரகசியம்

தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் நூர் கான் தளம் மற்றும் பிற இராணுவ நிலைகள் தாக்கப்பட்ட காட்சிகள் தெளிவாக இடம்பெற்றுள்ளன. ஆனால், செயற்கைக்கோள் படங்களின் அடிப்படையில் சர்கோதாவில் உள்ள முஷாப் தளம் மற்றும் அதன் அருகிலுள்ள கிரானா ஹில்ஸ் பகுதிகளிலும் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்று பாதுகாப்பு வல்லுநர்கள் இன்னும் சந்தேகம் கிளப்புகின்றனர். இந்திய விமானப்படை நேரடியாகத் தாக்குதலை உறுதிப்படுத்தாவிட்டாலும், "பகைவர்கள் அமைதியைக் குலைக்க முயன்றால், நாங்கள் அதை நிலைநாட்டும் வலுவான சக்தியாக மாறுவோம்" என்ற எச்சரிக்கையை இந்த வீடியோ மூலம் வெளிப்படுத்தியுள்ளது.

Advertisement