LOADING...
நேதாஜியின் 129-வது பிறந்தநாள்: அஸ்தியை தாயகம் கொண்டுவர மகள் அனிதா போஸ் உருக்கமான வேண்டுகோள்
நேதாஜியின் தாயகம் கொண்டுவர மகள் அனிதா போஸ் உருக்கமான வேண்டுகோள்

நேதாஜியின் 129-வது பிறந்தநாள்: அஸ்தியை தாயகம் கொண்டுவர மகள் அனிதா போஸ் உருக்கமான வேண்டுகோள்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 23, 2026
11:36 am

செய்தி முன்னோட்டம்

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 129-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் 'பராக்ரம் திவாஸ்' என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஜெர்மனியில் வசிக்கும் அவரது மகள் அனிதா போஸ், நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டு வருவது குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். "எனது தந்தை தனது வாழ்நாளின் பெரும் பகுதியை இந்திய சுதந்திரத்திற்காக வெளிநாடுகளில் அகதியாகவே கழித்தார். அவர் இறந்து 80 ஆண்டுகளுக்கும் மேலாகியும், இந்தியா சுதந்திரம் பெற்று 78 ஆண்டுகளைக் கடந்த பின்பும், அவரது அஸ்தி இன்னும் அந்நிய மண்ணிலேயே இருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. அவர் மீது இன்னும் அன்பு வைத்திருக்கும் இந்திய மக்கள், அவரது அஸ்தியைத் தாயகம் கொண்டு வர ஆதரவு அளிக்க வேண்டும்" என அனிதா கேட்டுக்கொண்டுள்ளார்.

பின்னணி

வரலாற்றுப் பின்னணி

கடந்த 1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18-ல் தைவானில் நடந்த விமான விபத்தில் நேதாஜி உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில், அவரது அஸ்தி டோக்கியோவில் உள்ள ரென்கோஜி (Renkoji) கோவிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டு வந்து அவருக்குத் தகுந்த மரியாதை செய்ய வேண்டும் என்பது அவரது குடும்பத்தினரின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது. இதற்காக டிஎன்ஏ (DNA) பரிசோதனை செய்யவும் அவர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

மரியாதை

பராக்ரம் திவாஸை முன்னிட்டு தலைவர்கள் மரியாதை

இந்த நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல்வேறு மாநில முதல்வர்கள் நேதாஜியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். டெல்லியில் ஜனவரி 23 முதல் 25 வரை சிறப்புப் பண்பாட்டு நிகழ்ச்சிகளும், விமான படையின் வான் சாகசங்களும் நடைபெற உள்ளன. நேதாஜியின் வீரத்தையும் தியாகத்தையும் இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதே இந்த தினத்தின் முக்கிய நோக்கமாகும்.

Advertisement

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement