LOADING...
பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறைகளில் உறவுகளை வலுப்படுத்த இந்தியா மற்றும் பிஜி உறுதி
பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறைகளில் உறவுகளை வலுப்படுத்த இந்தியா - பிஜி உறுதி

பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறைகளில் உறவுகளை வலுப்படுத்த இந்தியா மற்றும் பிஜி உறுதி

எழுதியவர் Sekar Chinnappan
Aug 25, 2025
05:09 pm

செய்தி முன்னோட்டம்

பிரதமர் நரேந்திர மோடியும், பிஜியின் பிரதமர் சித்திவேனி லிகாமமாடா ரபுகாவும் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 25) நடத்திய விரிவான பேச்சுவார்த்தைக்குப் பிறகு, பாதுகாப்பு, தற்காப்பு மற்றும் சுகாதாரத் துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த ஒப்புக் கொண்டனர். பிஜி பிரதமர் ரபுகாவின் முதல் இந்தியப் பயணம் இதுவாகும். சந்திப்பின் முடிவில் ஏழு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. கூட்டுப் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய பிரதமர் மோடி, தற்காப்பு மற்றும் பாதுகாப்புத் துறையில் பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்த ஒரு செயல் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தினார். பிஜியின் கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்த இந்தியா பயிற்சி மற்றும் உபகரணங்களை வழங்கும். சைபர் பாதுகாப்பு மற்றும் தரவுப் பாதுகாப்பு போன்ற முக்கியமான விவகாரங்களில் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும் இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளன.

பயங்கரவாதம்

பயங்கரவாதம் உலகளாவிய சவால்

பயங்கரவாதம் உலகிற்கு ஒரு பெரும் சவால் என்பதிலும் இரு தலைவர்களும் ஒருமித்த கருத்து தெரிவித்தனர். பாதுகாப்புடன் கூடுதலாக, பிஜியின் பொது சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்த இந்தியா கணிசமான உதவிகளை அறிவித்துள்ளது. பிஜி தலைநகர் சுவாவில் 100 படுக்கைகள் கொண்ட ஒரு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை கட்டுதல், டயாலிசிஸ் யூனிட்டுகள் மற்றும் கடல் ஆம்புலன்சுகளை வழங்குதல், மற்றும் மலிவு விலையில் மருந்துகள் கிடைக்க ஜன அவுஷாதி மையங்களைத் திறத்தல் ஆகியவை இதில் அடங்கும். இந்தியா மற்றும் பிஜி ஆகிய இரு நாடுகளும் உலகளாவிய தெற்கின் சுதந்திரம், கருத்துக்கள் மற்றும் அடையாளங்கள் மதிக்கப்படும் உலக ஒழுங்கை கட்டியெழுப்புவதில் கூட்டாளிகள் என்று பிரதமர் மோடி எடுத்துரைத்தார்.