இரன்டு நாள் இறக்கத்திற்குப் பின் மீண்டும் அதிகரித்த தங்கம் வெள்ளி விலைகள்; இன்றைய நிலவரம் என்ன?
செய்தி முன்னோட்டம்
சமீப காலமாக தொடர்ந்து ஏற்றத்தில் இருக்கும் தங்க விலை, சனிக்கிழமை (பிப்ரவரி 7) மீண்டும் உயர்ந்துள்ளது. சனிக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹170 அதிகரித்து ₹14,420 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,360 அதிகரித்து ₹1,15,360 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹185 அதிகரித்து ₹15,731 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,480 அதிகரித்து ₹1,25,848 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலை நிலவரம்
18 காரட் தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது. அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹150 அதிகரித்து ₹12,350 ஆகவும், ஒரு சவரன் ₹1,200 அதிகரித்து ₹98,800 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே வெள்ளி விலையும் சனிக்கிழமை அதிகரித்துள்ளது. வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹5 அதிகரித்து ₹285.00 ஆகவும், ஒரு கிலோ ₹2,85,000 ஆகவும் விற்பனை ஆகிறது. சர்வதேச சூழல் போன்ற காரணிகளால் தங்கம் வெள்ளி விலைகளில் தொடர்ந்து நிலையற்ற தன்மை நீடிக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.