LOADING...
அமெரிக்காவில் மீண்டும் ஒரு ஷட்-டவுன்! பட்ஜெட் தாக்கல் செய்யாததால் அரசுப் பணிகள் பாதிப்பு
அமெரிக்க அரசு ஸ்தம்பிப்பு

அமெரிக்காவில் மீண்டும் ஒரு ஷட்-டவுன்! பட்ஜெட் தாக்கல் செய்யாததால் அரசுப் பணிகள் பாதிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Jan 31, 2026
11:54 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்காவில் 2026 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை அங்கீகரிக்க நாடாளுமன்றம் தவறியதைத் தொடர்ந்து, அந்நாட்டு அரசு இன்று சனிக்கிழமை (ஜனவரி 31) முதல் பகுதிநேர முடக்கத்திற்கு உள்ளாகியுள்ளது. நிதி ஒதுக்கீடு செய்வதற்கான காலக்கெடு நள்ளிரவுடன் முடிவடைந்த நிலையில், ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே உடன்பாடு எட்டப்படாததே இந்த நிலைக்குக் காரணமாக அமைந்தது.

பின்னணி

முடக்கத்திற்கான பின்னணி என்ன?

இந்த முறை பட்ஜெட் பேச்சுவார்த்தை முடங்கியதற்கு ஒரு முக்கியச் சம்பவம் காரணமாக அமைந்துள்ளது. மினியாபோலிஸ் நகரில் இரண்டு போராட்டக்காரர்களைக் குடிவரவுத் துறை அதிகாரிகள் சுட்டுக் கொன்றனர். இதற்கு ஜனநாயகக் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் இழுபறி ஏற்பட்டு, ஒட்டுமொத்தப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. கடந்த ஒரு ஆண்டிற்குள் அமெரிக்க அரசு சந்திக்கப்போகும் இரண்டாவது ஷட்-டவுன் இதுவாகும்.

பாதிப்பு

எந்தெந்தத் துறைகள் பாதிக்கப்படும்?

இந்த ஷட்-டவுன் அனைத்துத் துறைகளையும் பாதிக்காது என்றாலும், சில முக்கியத் துறைகளில் பணிகள் முடங்கும்: பாதிக்கப்படும் துறைகள்: கருவூலம், பாதுகாப்பு, உள்நாட்டுப் பாதுகாப்பு, போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் தொழிலாளர் நலத் துறைகள் தற்காலிகமாகப் பணிகளை நிறுத்த வேண்டியிருக்கும். பாதிக்கப்படாத துறைகள்: விவசாயத் துறை, தேசிய பூங்காக்கள், முன்னாள் ராணுவத்தினர் சேவைகள் மற்றும் நீதித்துறை ஆகியவற்றுக்கு ஏற்கனவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், அவற்றின் பணிகள் வழக்கம்போல நடைபெறும். உணவுப் பாதுகாப்புத் திட்டங்களும் தடையின்றித் தொடரும்.

Advertisement

தீர்வு

எப்போது தீர்வு கிடைக்கும்?

இந்த முடக்கம் நீண்ட காலம் நீடிக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. திங்கட்கிழமை காலையில் பிரதிநிதிகள் சபை கூடி, செனட் சபையால் அங்கீகரிக்கப்பட்ட நிதி ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டால், அன்றே அரசுப் பணிகள் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பும். தற்போது பல அத்தியாவசியமற்ற அரசு ஊழியர்கள் விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளனர்.

Advertisement