ஆந்திரா: செய்தி
புட்டபர்த்தி சாய்பாபா நூற்றாண்டு விழா: சிறப்பு 100 ருபாய் நாணயத்தை வெளியிட்டார் பிரதமர்
புட்டபர்த்தி ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 100-வது பிறந்தநாள் நூற்றாண்டு விழா ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள பிரசாந்தி நிலையத்தில் கோலாகலமாகத் துவங்கி நடைபெற்று வருகிறது.
முக்கிய மாவோயிஸ்ட் தலைவர் மத்வி ஹிட்மா ஆந்திராவில் சுட்டுக் கொலை
ஆந்திராவின் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தின் மாரேடுமில்லி காடுகளில் செவ்வாய்க்கிழமை அதிகாலை சிறப்புப் போலீஸ் படையினருடன் நடந்த மோதலில், முக்கிய மாவோயிஸ்ட் தலைவர் மத்வி ஹிட்மா உட்பட ஆறு மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.
இந்தியாவின் முதல் ட்ரோன் டாக்ஸி ஆந்திராவில் தொடங்கப்பட உள்ளது
ஆந்திரப் பிரதேச முதல்வர் என். சந்திரபாபு நாயுடு, சிஐஐ கூட்டாண்மை உச்சி மாநாட்டில் மாநிலத்திற்கான ஒரு லட்சிய பொருளாதார தொலைநோக்கை வெளியிட்டார்.
ஆந்திர கோவில் கூட்ட நெரிசலில் 10 பேர் பலி: தகவல் தெரிவிக்காததே காரணம்; முதல்வர் பேட்டி
ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள காசிபுக்காவில் இருக்கும் வெங்கடேஸ்வரா சுவாமி கோவிலில் கார்த்திகை ஏகாதசியை முன்னிட்டு நடைபெற்ற பக்தர்கள் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர்.
ஆந்திரப் பிரதேச கோவிலில் சோகம்: ஏகாதசி கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பல பக்தர்கள் பலி
ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள காசிபுக்கா பகுதியில் இருக்கும் வெங்கடேஸ்வரா சுவாமி கோவிலில், ஏகாதசியை முன்னிட்டு நடைபெற்ற பக்தர்கள் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் (Stampede) சிக்கிப் பல பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
'மோந்தா' புயல் ஆந்திராவில் கரையை கடந்தது! தமிழகத்தில் மழை நீடிக்குமா?
வங்கக்கடலில் உருவான அதிதீவிர புயலான 'மோந்தா' (Montha), நேற்று நள்ளிரவுக்கு பிறகு ஆந்திர கடலோர பகுதியில் கரையை கடந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) இன்று (அக்டோபர் 29, 2025) அதிகாலை அறிவித்துள்ளது.
இன்று மாலை ஆந்திரா கடற்கரையை கடக்கும் 'மோந்தா' புயல்: தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
வங்கக்கடலில் உருவான மோந்தா புயல், தீவிர புயலாக வலுவடைந்து இன்று மாலை ஆந்திரா மாநிலத்தின் காகிநாடா அருகே கரையை கடக்க உள்ளது.
மாந்தா புயல் எச்சரிக்கை: ஏனாமில் பள்ளி, கல்லூரிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அறிவிப்பு
ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடா அருகே மாந்தா புயல் கரையை கடக்க உள்ள நிலையில், புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியத்தில் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
கர்நூல் பேருந்து விபத்து: ஹைதராபாத்-பெங்களூரு நெடுஞ்சாலையில் பேருந்து தீப்பிடித்து 20 பேர் பலி
ஆந்திர பிரதேசத்தின் கர்நூல் மாவட்டத்தில் ஏற்பட்ட பேருந்து தீ விபத்தில் குறைந்தது 20 பேர் உயிரிழந்ததுள்ளனர்.
புகழ்பெற்ற ஸ்ரீசைலம் கோவிலில் தரிசனம் செய்தார் பிரதமர் மோடி; ஆந்திராவுக்கு ₹13,430 கோடி திட்டங்களை தொடங்கி வைத்தார்
பிரதமர் நரேந்திர மோடி, வியாழக்கிழமை (அக்டோபர் 16) அன்று ஆந்திரப் பிரதேசத்தின் நந்தியா மாவட்டத்திற்குச் சென்று, புகழ்பெற்ற ஸ்ரீ பிரம்மராம்பா மல்லிகார்ஜுன சுவாமி கோவிலில் தரிசனம் செய்தார்.
இந்தியாவின் மிகப்பெரிய AI தரவு மையத்தை உருவாக்க அதானி, கூகிள் ஒப்பந்தம்
ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் ஒரு AI தரவு மைய வளாகத்தை நிறுவ, தொழில்நுட்ப நிறுவனமான கூகிள் நிறுவனத்துடன் ஒரு மூலோபாய கூட்டாண்மையை அதானி எண்டர்பிரைசஸ் அறிவித்துள்ளது.
இந்தியாவில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன, மோசடி வழக்குகள் அதிகம்: NCRB
தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, இந்தியாவில் சைபர் குற்றங்கள் 2023 ஆம் ஆண்டில் 31.2% என்ற மிகப்பெரிய அதிகரிப்பைக் கண்டுள்ளது.
பக்தர்கள் கூட்டத்தை நிர்வகிக்க இன்று முதல் திருப்பதியில் AI தொழில்நுட்பம்
திருப்பதியில் உள்ள புகழ்பெற்ற ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டத்தை சீரமைக்கவும், பாதுகாப்பை மேம்படுத்தவும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
₹5 லட்சம் வரை ஆந்திராவில் இலவச மருத்துவக் கொள்கை: சந்திரபாபு அரசு ஒப்புதல்
முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திரப் பிரதேச அமைச்சரவை, உலகளாவிய சுகாதாரக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை இறக்கும் இந்திய கடற்படை
இந்திய கடற்படை, ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இரண்டு ஸ்டெல்த் போர்க்கப்பல்களான ஐஎன்எஸ் உதயகிரி மற்றும் ஐஎன்எஸ் ஹிம்கிரி ஆகியவற்றை இயக்கியுள்ளது.
ஆந்திராவில் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு மாநிலம் முழுவதும் இலவச பேருந்து பயணம்; முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்
ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 15) ஸ்த்ரீ சக்தி என்ற மாநில அளவிலான இலவச பேருந்து பயண திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
தக்காளி விலை உயர்வு: தமிழகத்தில் ரூ.60க்கு விற்பனை
தமிழகத்தில் தக்காளி விலை திடீரென உயர்ந்துள்ளது. சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், நாட்டு தக்காளி தற்போது கிலோ ரூ.60 வரை விற்பனை செய்யப்படுகிறது.
I/O Connect நிகழ்வில் 'Google Play X Unity' சான்றிதழ் திட்டம் அறிவிக்கப்பட்டது: அது என்ன?
பெங்களூருவில் நடைபெற்ற I/O Connect நிகழ்வில், கூகிள் ப்ளே எக்ஸ் யூனிட்டி கேம் டெவலப்பர் பயிற்சித் திட்டத்தை அறிவித்துள்ளது Google.
முதலீடு என்ற பெயரில் சைபர் கிரைம் மோசடியில் ரூ.2 கோடியை இழந்த ஆந்திர பிரதேச பேராசிரியர்
ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியர் ஒருவர் போலி முதலீட்டு ஆலோசனை வழங்கும் வாட்ஸ்அப் குழுவில் ஈர்க்கப்பட்டு, ஒரு அதிநவீன சைபர் கிரைம் மோசடியில் கிட்டத்தட்ட ரூ.2 கோடியை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஹைதராபாத்தில் குண்டுவெடிப்பு சதியா? ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்புடைய 2 சந்தேக நபர்கள் கைது
தெலுங்கானா காவல்துறை, ஆந்திரப் பிரதேச காவல்துறையுடன் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில், ஹைதராபாத்தில் நடக்கவிருந்த மிகப்பெரும் வெடிகுண்டு சதித்திட்டத்தை முறியடித்துள்ளது.
அமராவதியை மீண்டும் தொடங்கி வைத்த மோடி; ₹58,000 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
58,000 கோடி மதிப்பிலான பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதன் மூலம், ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகராக அமராவதி இருக்கும் என்ற நம்பிக்கையை பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தூண்டியுள்ளார்.
பணமோசடி வழக்கில் ஜெகன் ரெட்டியின் சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல்
ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் டால்மியா சிமென்ட்ஸ் (பாரத்) லிமிடெட் (DCBL) மீதான பணமோசடி வழக்கில், ஹைதராபாத் அமலாக்க இயக்குநரகம் (ED) ₹800 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை முடக்கியுள்ளது.
கியா தொழிற்சாலையில் ஐந்து ஆண்டுகளில் 900 கார் என்ஜின்கள் திருட்டு; ஆந்திர காவல்துறை விசாரணை
தென் கொரிய ஆட்டோமொபைல் நிறுவனமான கியா, ஆந்திராவின் பெனுகொண்டாவில் அமைந்துள்ள தனது தொழிற்சாலையில் இருந்து ஐந்து ஆண்டுகளில் சுமார் 900 கார் என்ஜின்கள் திருடப்பட்டதாக புகார் அளித்துள்ளது.
ஆந்திர துணைமுதல்வர் பவன் கல்யாணின் மகன் சிங்கப்பூரில் தீவிபத்தில் சிக்கினார்
நடிகரும், ஜன சேனா கட்சியின் தலைவரும் ஆந்திரப் பிரதேச துணை முதல்வருமான பவன் கல்யாணின் இளைய மகன் மார்க் சங்கர் செவ்வாய்க்கிழமை காலை தனது பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் தீக்காயமடைந்ததாக அக்கட்சி X இல் ட்வீட் செய்தது.
உணவில் உப்பு சேர்ப்பதை குறைச்சுக்கோங்க; ஆந்திர முதல்வரின் ஹெல்த் டிப்ஸ்
ஆந்திரப் பிரதேச முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு திங்களன்று (ஏப்ரல் 7) பொதுமக்கள் உப்பு, எண்ணெய் மற்றும் சர்க்கரை உட்கொள்வதைக் குறைப்பதன் மூலமும், தினசரி நடைப்பயிற்சி மற்றும் தியானத்தை தங்கள் வழக்கங்களில் இணைத்துக்கொள்வதன் மூலமும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுமாறு வலியுறுத்தினார்.
தமிழக முதல்வரின் தொகுதி மறுவரையறை கூட்டத்தை ஆந்திரா, மேற்குவங்கம் புறக்கணிப்பு; காரணம் என்ன?
2026 க்குப் பிறகு வரவிருக்கும் தொகுதி நிர்ணய செயல்முறையின் தாக்கம் குறித்து விவாதிக்க, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் ஒரு உயர்மட்டக் கூட்டத்தைக் கூட்டினார்.
பெண்களுக்கான ஆந்திர அரசின் புதிய WFH திட்டம்: முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு
ஆந்திரப் பிரதேச முதல்வர் என். சந்திரபாபு நாயுடு செவ்வாயன்று, தகவல் தொழில்நுட்பம் (ஐடி) மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் (ஜிசிசி) கொள்கை 4.0 இன் கீழ் வீட்டிலிருந்து வேலை செய்யும் கொள்கைகளை "பெரிய அளவில்" செயல்படுத்தும் தனது அரசாங்கத்தின் திட்டத்தை அறிவித்தார்.
பத்ம பூஷன் விருது வென்ற பாலையா; நந்தமூரி பாலகிருஷ்ணாவின் பின்னணி
நடிகரும் ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான நந்தமுரி தாரக ராமராவின் (என்.டி. ராமராவ்) மகனாக திரையுலகில் நுழைந்த நந்தமுரி பாலகிருஷ்ணா, தனது தந்தையைப் போலவே தனது வாழ்க்கையைத் தொடர்ந்து நடிகராகவும் சிறப்புப் பாராட்டைப் பெற்றுள்ளார்.
மருமகனுக்கு 630 வகையான உணவுகள்; மகர சங்கராந்திக்காக அசத்திய ஆந்திர குடும்பம்
பாரம்பரியம் மற்றும் விருந்தோம்பலின் குறிப்பிடத்தக்க கொண்டாட்டமாக, ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள குடும்பங்கள் தங்கள் மருமகன்களின் முதல் சங்கராந்தி பண்டிகையை பிரமாண்டமான விருந்துகள் மற்றும் இதயப்பூர்வமான செயல்களுடன் கொண்டாடினர்.
2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் மட்டுமே உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அனுமதி; ஆந்திர முதல்வர் அதிரடி திட்டம்
ஆந்திரப் பிரதேச முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு, பஞ்சாயத்து தலைவர், முனிசிபல் கவுன்சிலர் அல்லது மேயர் போன்ற பதவிகளுக்குத் தகுதி பெற, தனிநபர்கள் இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றிருக்க வேண்டும் என்ற கொள்கை மாற்றத்தை முன்மொழிந்துள்ளார்.
லட்டு வழங்கும் கவுன்ட்டரில் தீ விபத்து; திருப்பதியில் தொடரும் சோகம்
கூட்ட நெரிசல் சோகத்தைத் தொடர்ந்து, திருப்பதியில் உள்ள வெங்கடேஸ்வரா கோயிலின் லட்டு வழங்கும் கவுன்ட்டரில் தீ விபத்து ஏற்பட்டது.
திருப்பதியில் சிறப்பு தரிசன டிக்கெட் எடுக்கும்போது கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர்
திருப்பதியில் உள்ள வைகுண்ட துவார தரிசன டிக்கெட் மையம் அருகே புதன்கிழமை ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.
9 வயதில் சதுரங்கத்தில் சாதனை படைத்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பேரன் தேவான்ஷ்
ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் ஒன்பது வயது பேரனான தேவான்ஷ் நாரா, குறைந்த நேரத்தில் 175 செக்மேட் புதிர்களைத் தீர்த்து உலக சாதனை படைத்ததன் மூலம் உலக அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார்.
ஆந்திர பெண்ணுக்கு பார்சலில் மனித சடலத்தை அனுப்பி ரூ.1.3 கோடி கேட்டு மிரட்டல்!
ஆந்திரா மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம், ஏன்டாகண்டி கிராமத்தைச் சேர்ந்த சாகி துளசி என்ற பெண், தனது வீட்டிற்கு மின்சாதன பொருட்கள் வரும் என எதிர்பார்த்திருந்த நேரத்தில், பார்சலில் மனித எச்சங்கள் வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகளிடம் அத்துமீறிய நபரை பழிதீர்க்க குவைத்தில் இருந்து ஆந்திராவுக்கு வந்த தந்தை
குவைத்தைச் சேர்ந்த 35 வயதான ஆஞ்சநேய பிரசாத் என்ற புலம்பெயர்ந்த தொழிலாளி, ஆந்திராவின் அன்னமய்யா மாவட்டம், ஒபுலவாரிப்பள்ளியில் தனது உறவினரைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
விஜயவாடா - ஸ்ரீசைலம் இடையே நீர்வழி விமான சேவை: நாளை முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடக்கி வைக்கிறார்
சுற்றுலாவை மேம்படுத்த, ஆந்திர மாவட்டம் விஜயவாடா மற்றும் ஸ்ரீசைலம் இடையே புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட கடல் விமான சேவையின் சோதனை ஓட்டம் வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
பெங்களூரு போக்குவரத்து துயரம்: MNCகளை ஆந்திராவிற்கு வருமாறு அழைப்பு விடுத்த அமைச்சர் நர லோகேஷ்
பெங்களூருவில் கடந்த ஒரு வாரமாக வரலாறு காணாத மழை பெய்து வருவதால், நகரம் முழுவதும் கடும் வெள்ளப்பெருக்கு மற்றும் தண்ணீர் தேங்கியுள்ளது.
அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள குடும்பங்களை ஊக்குவிக்கும் சட்டத்தை முன்மொழிந்த ஆந்திர முதல்வர்
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ளவர்கள் மட்டுமே உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கும் சட்டத்தை கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாக ஆந்திரப் பிரதேச முதல்வர் என் சந்திரபாபு நாயுடு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
ஆந்திரா நோக்கி நகர்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்; சென்னையில் கனமழைக்கான வாய்ப்பு குறைந்தது
சென்னை அருகே நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அது தற்போது மெல்ல நகர்ந்து ஆந்திரா கரையோரம் சென்றுள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சனாதன விவகாரம்: ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் vs தமிழக துணை முதல்வர் உதயநிதி
சனாதனத்தை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள் என ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் கூறியதற்கு, தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் நிருபர்கள் கேட்டதற்கு, "அவர் யாரை குறிக்கிறார் என்பது தெரியவில்லை. இருப்பினும், Let's wait and see" என தெரிவித்தார்.
நெய்யின் தரத்தை சோதிக்க ரூ.75 லட்சத்தில் நவீன ஆய்வகம்; திருப்பதி தேவஸ்தானம் முடிவு
திருமலை திருப்பதி தேவஸ்தானம், ஏஆர் பால் பண்ணையை கருப்புப் பட்டியலில் சேர்த்துள்ளதாகவும், கலப்பட நெய்யை விநியோகித்ததாகக் கூறி, அதற்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கோயில் நிர்வாக அதிகாரி ஜே.சியாமளா ராவ் தெரிவித்துள்ளார்.
திருப்பதி கோவில் லட்டு சர்ச்சையின் பின்னணியில் நெய் பிராண்ட் மாற்றம்?
திருப்பதி லட்டுகளில் தரம் தாழ்ந்த பொருட்களும், பசு நெய் அல்லாத பொருட்களும் சேர்க்கப்பட்டது என லேப் அறிக்கை வெளியாகி மிகப்பெரிய சர்ச்சை உண்டானதில், தற்போது பிரசாதம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெய்யின் தரம் குறித்த கேள்வி எழுந்துள்ளது.