NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உணவில் உப்பு சேர்ப்பதை குறைச்சுக்கோங்க; ஆந்திர முதல்வரின் ஹெல்த் டிப்ஸ்
    அடுத்த செய்திக் கட்டுரை
    உணவில் உப்பு சேர்ப்பதை குறைச்சுக்கோங்க; ஆந்திர முதல்வரின் ஹெல்த் டிப்ஸ்
    ஆந்திர முதல்வரின் ஆரோக்கிய விழிப்புணர்வு திட்டம்

    உணவில் உப்பு சேர்ப்பதை குறைச்சுக்கோங்க; ஆந்திர முதல்வரின் ஹெல்த் டிப்ஸ்

    எழுதியவர் Sekar Chinnappan
    Apr 07, 2025
    08:19 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆந்திரப் பிரதேச முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு திங்களன்று (ஏப்ரல் 7) பொதுமக்கள் உப்பு, எண்ணெய் மற்றும் சர்க்கரை உட்கொள்வதைக் குறைப்பதன் மூலமும், தினசரி நடைப்பயிற்சி மற்றும் தியானத்தை தங்கள் வழக்கங்களில் இணைத்துக்கொள்வதன் மூலமும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுமாறு வலியுறுத்தினார்.

    மாநில செயலகத்தில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய சந்திரபாபு நாயுடு, அதிகரித்து வரும் தொற்றா நோய்களைத் தடுப்பதற்கான தடுப்பு சுகாதார நடவடிக்கைகளை வலியுறுத்தினார்.

    நான்கு பேர் கொண்ட குடும்பங்கள் மாதாந்திர நுகர்வு 600 கிராம் உப்பு, இரண்டு லிட்டர் எண்ணெய் மற்றும் மூன்று கிலோகிராம் சர்க்கரையாக இருக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

    உப்பு உட்கொள்ளலைக் குறைப்பது வாழ்க்கை முறை நோய்களைக் கணிசமாகக் கட்டுப்படுத்தும் என்று வலியுறுத்தினார்.

    நடைப்பயிற்சி

    நல்வாழ்வை கொடுக்கும் நடைப்பயிற்சி

    மன அழுத்தத்தைக் குறைப்பதற்கும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும் தினமும் 30 நிமிடங்கள் நடைபயிற்சி மற்றும் தியானம் அல்லது யோகா செய்வதையும் அவர் ஊக்குவித்தார்.

    மாநிலத்தில் உள்ள முக்கிய சுகாதார சவால்களை குறிப்பிட்டு பேசிய சந்திரபாபு நாயுடு, இதய நோய்கள், நீரிழிவு, சுவாச நோய்கள், நாள்பட்ட சிறுநீரக நோய் மற்றும் புற்றுநோய் ஆகியவை நோய் சுமையில் 80% காரணமாகின்றன என்று கூறினார்.

    அவரது கருத்தின்படி, மாநிலத்தில் இதய நோய்கள் 18-22% பரவலுடன் முன்னணியில் உள்ளன. அதைத் தொடர்ந்து நீரிழிவு நோய் (12-15%) உள்ளது.

    டிஜிட்டல் ஹெல்த் நெர்வ் சென்டர் பைலட் திட்டத்தை ஜூன் 15 முதல் குப்பத்தில் தொடங்குவதாக சந்திரபாபு நாயுடு அறிவித்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆரோக்கியம்
    ஆந்திரா
    சந்திரபாபு நாயுடு

    சமீபத்திய

    அமேசானுக்குச் சொந்தமான Zoox, அமெரிக்காவில் அதன் ரோபோடாக்சிகளை திரும்ப பெறுகிறது; ஏன்? அமெரிக்கா
    உலகளாவில் wearables பிரிவில் Xiaomi முதலிடத்தில் உள்ளது, ஆப்பிளை விட முன்னிலை சியோமி
    எலுமிச்சை சாறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பது உண்மையா? ஆரோக்கியம்
    டிரம்பின் வரி அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்கள் அமெரிக்காவில் மலிவாக இருக்கும் அமெரிக்கா

    ஆரோக்கியம்

    காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் இவ்ளோ நன்மைகளா? இதை தெரிந்து கொள்ளுங்கள் ஆரோக்கிய குறிப்புகள்
    உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கா? பீட்ரூட் சாப்பிடும் முன் இதை தெரிந்து கொள்ளுங்கள் ஆரோக்கிய குறிப்புகள்
    இரவு 9 மணிக்கு மேல் உணவு சாப்பிடுபவரா நீங்கள்? இந்த உடல்நல பிரச்சனைகளை எதிர்கொள்ள தயாராகுங்கள் உடல் ஆரோக்கியம்
    டீ பிரியர்களே: ஆரோக்கியமான துளசி சேர்த்து டீ ட்ரை பண்ணியிருக்கீங்களா?  ஆரோக்கியமான உணவு

    ஆந்திரா

    அமராவதி தான் இனி ஆந்திராவின் தலைநகராக இருக்கும்: சந்திரபாபு நாயுடு இந்தியா
    சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள ரஜினிகாந்த், சிரஞ்சீவி உள்ளிட்ட பிரபலங்களுக்கு அழைப்பு  ரஜினிகாந்த்
    பிரமாண்ட பதவியேற்பு விழாக்களுக்கு தயாராகும் ஆந்திரா மற்றும் ஒடிசா; பிரதமர் மோடி மற்றும் முக்கிய தலைவர்கள் பங்கேற்பு  பதவியேற்பு விழா
    பவன் கல்யாண் உட்பட 24 அமைச்சர்கள் சந்திரபாபு நாயுடுவுடன் பதவியேற்க உள்ளனர் சந்திரபாபு நாயுடு

    சந்திரபாபு நாயுடு

    ஆந்திராவில் 151 இடங்களில் போட்டியிட இருக்கிறது சந்திரபாபு நாயுடுவின் கட்சி  ஆந்திரா
    குறைந்த விலையில் தரமான மதுபானம் வழங்கப்படும் என வாக்காளர்களுக்கு சந்திரபாபு நாயுடு வாக்குறுதி  ஆந்திரா
    ஆந்திர சட்டமன்ற தேர்தல்:சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி வெற்றி ஆந்திரா
    பாஜக கூட்டணி கட்சிகளான சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினாரா சரத் பவார்? காங்கிரஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025