Page Loader
ஹைதராபாத்தில் குண்டுவெடிப்பு சதியா? ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்புடைய 2 சந்தேக நபர்கள் கைது 
ISIS தொடர்புடைய 2 சந்தேக நபர்கள் ஹைதராபாத்தில் கைது

ஹைதராபாத்தில் குண்டுவெடிப்பு சதியா? ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்புடைய 2 சந்தேக நபர்கள் கைது 

எழுதியவர் Venkatalakshmi V
May 19, 2025
08:42 am

செய்தி முன்னோட்டம்

தெலுங்கானா காவல்துறை, ஆந்திரப் பிரதேச காவல்துறையுடன் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில், ஹைதராபாத்தில் நடக்கவிருந்த மிகப்பெரும் வெடிகுண்டு சதித்திட்டத்தை முறியடித்துள்ளது. இந்த நடவடிக்கையில் போலி குண்டுவெடிப்பை நடத்த திட்டமிட்டதாகக் கூறப்படும் விஜயநகரத்தைச் சேர்ந்த சிராஜ் மற்றும் ஹைதராபாத்தைச் சேர்ந்த சமீர் ஆகிய இரு பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர் என இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, சிராஜ் விஜயநகரத்தில் வெடிபொருட்களை வாங்கியதாகக் கூறப்படுகிறது. ஹைதராபாத்தில் தாக்குதல்களை நடத்துவதற்கு சவுதி அரேபியாவை தளமாகக் கொண்ட ஒரு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிலிருந்து இருவருக்கும் அறிவுறுத்தல்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. இந்த கூட்டு நடவடிக்கையில் தெலுங்கானா எதிர் புலனாய்வு மற்றும் ஆந்திரப் பிரதேச புலனாய்வு ஆகியவை ஈடுபட்டன.

சோதனை

பஹல்காம் தாக்குதலுக்கு பின்னர் நாடு முழுவதும் நடத்தப்படும் சோதனைகள்

சமீபத்திய பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர் உட்பட பல மாநிலங்களில் பயங்கரவாதிகள் இருக்கக்கூடும் என்ற தகவல்களைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் விரிவான தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். கடந்த ஆண்டு டிசம்பரில் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தின் மீது நடத்தப்பட்ட கையெறி குண்டுத் தாக்குதல் தொடர்பாக, பாகிஸ்தானைச் சேர்ந்த காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்விந்தர் சிங் உடன் தொடர்புடைய நபர்களை தேடி பஞ்சாபில் 15 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு வெள்ளிக்கிழமை சோதனை நடத்தியது. மறுபுறம், ஏப்ரல் 22 ஆம் தேதி, பஹல்காம் தாக்குதலுக்கு காரணமான. பாதுகாப்பு அதிகாரிகள் குற்றவாளிகளை அடையாளம் கண்டுள்ள நிலையில், அவர்கள் தலைமறைவாக உள்ளனர், மேலும் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்ற பிறகும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.