LOADING...
மாந்தா புயல் எச்சரிக்கை: ஏனாமில் பள்ளி, கல்லூரிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அறிவிப்பு
பள்ளி, கல்லூரிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அறிவிப்பு

மாந்தா புயல் எச்சரிக்கை: ஏனாமில் பள்ளி, கல்லூரிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Oct 26, 2025
12:30 pm

செய்தி முன்னோட்டம்

ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடா அருகே மாந்தா புயல் கரையை கடக்க உள்ள நிலையில், புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியத்தில் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. புயலின் தாக்கத்தை எதிர்கொள்ளும் விதமாக, ஏனாம் மண்டல நிர்வாகி அங்கீத் குமார் அக்டோபர் 27 முதல் அக்டோபர் 29 ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்துள்ளார். புயல் முன்னெச்சரிக்கை அறிக்கையின்படி, மாந்தா புயல் அக்டோபர் 28 ஆம் தேதி இரவுக்குள் காக்கிநாடா அருகே கரையை கடக்க வாய்ப்புள்ளது. அப்போது மணிக்கு 100 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ஏனாம் பகுதியில் இன்றும் அதற்கு அடுத்த இரண்டு நாட்களுக்கும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

முன்னெச்சரிக்கை

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

மாவட்ட நிர்வாகம் அனைத்து துறைகளுக்கும் அறிவுறுத்தல்களை வழங்கி, 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறைகளை திறந்துள்ளது. மேலும், நிவாரணப் பணிகளில் ஈடுபட ஊழியர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனைத்து அரசுப் பள்ளிகளும் நிவாரண மையங்களாக மாற்றப்பட்டுள்ளன. மேலும், புயல் அபாயம் கருதி சுற்றுலா படகு இல்லம் மூடப்பட்டுள்ளது. மின்வெட்டு ஏற்பட்டால் ஜெனரேட்டர்களைத் தயாராக வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வெள்ள நீர் ஊருக்குள் புகுவதைத் தடுக்க மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் நிவாரண முகாம்களுக்குச் செல்லவும், ஒரு வாரத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களைச் சேமித்து வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பேரிடர் மேலாண்மைக் குழுவும் நிவாரணப் பணிகளில் ஈடுபட ஏனாம் பகுதிக்கு வர உள்ளது.